சமூகத்தில் பலரும் பார்த்து இதற்கு ஓர் தீர்வு இல்லையா என நினைக்கும் பல நிகழ்வுகள் உண்டு. அதில் முக்கியமானதொன்று தற்கொலை. வாழ்க்கையில் நடக்கும் சிறிய விடயங்களை கூட முகம் கொடுக்க முடியாமல் பலரும் தற்கொலை செய்கிறார்கள். அதற்கும் மேல் அடுத்தவர் மேல் உள்ள பற்றுதல், அவர்களினால் கிடைக்கும் ஏமாற்றங்களால் தற்கொலை பண்ணுகிறார்கள். இதனால் அவர்கள் ஒரு நொடியில் இறந்து விடுவார்கள். அவர்களின் குடும்பம் சந்திக்கும் பல அவமானங்கள், துன்பங்கள் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.
இதை மையமாக கொண்டு குறும்படம் ஒன்று தயாரிக்க உள்ளேன். 35 பேர் கொண்ட பெரிய அணியை கொண்டு இந்த குறும்படம் தயாராக இருப்பதால் அதற்கு பல்வேறுபட்ட நிதிச் செலவுகள் ஏற்படுகின்றது. இந்த படத்திற்கு ஏறத்தாள 30000 (முப்பதாயிரம்) ரூபா அளவிற்கு செலவு உள்ளது. ஆனால் கண்டிப்பாக சமூகத்திற்கு இது ஒரு விழிப்புணர்வுக் கருத்து கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த குறும்படம் பார்த்து ஒருவராவது தன் தற்கொலை முடிவை மாற்றி கொள்வாராக இருந்தால் அது நம்ம முயற்சிக்கு கிடைத்த பாரிய வெற்றியாக இருக்கும்.
இதனால் சமூக அக்கறை மற்றும் பொதுநலம் உள்ளவர்கள் எம்முடைய இந்த பணியில் கைகொடுக்க தயாராக இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். சில சமயம் நீங்கள் செய்யும் சிறு உதவியால் ஒரு உயிர் காப்பாற்ற படலாம்.
என்னுடைய முன்னைய படைப்புக்களை பார்வையிட்டு உங்கள் ஆதரவை இத்திரைப்படத்திற்கு எதிர்பார்க்கிறேன்.
திரைக்கதை எல்லாம் முடிவுற்ற நிலையில் படப்பிடிப்புக்கு தயாராகிய நிலையில் உள்ளது. நிதியுதவி கிடைத்தால் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம்
[youtube]https://www.youtube.com/watch?v=sq848ze ... cyRweA-r1g[/youtube]
[youtube]https://www.youtube.com/watch?v=xXmgYkK ... cyRweA-r1g[/youtube]
சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் தோள் கொடுங்கள்
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் தோள் கொடுங்கள்
Last edited by Aruntha on Sat Nov 22, 2014 3:32 pm, edited 1 time in total.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் தோள் கொடுங்கள்
ஓகே... அருந்தா .... என் சார்பில் உனக்கு 100$, ஜனவரி கடைசியில் கொடுக்கிறேன்.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் தோள் கொடுங்கள்
நன்றி ஆதித்தன். சமூகத்திற்கு ஒவ்வொருவரினதும் சிறு பங்களிப்பு கண்டிப்பாக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் தான் இதை படுகை நண்பர்களிடம் கோரிக்கையாக கேட்டேன். கண்டிப்பாக என் நண்பர்களுடைய முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் தோள் கொடுங்கள்
வெற்றி பெற வாழ்த்துகள்Aruntha wrote:நன்றி ஆதித்தன். சமூகத்திற்கு ஒவ்வொருவரினதும் சிறு பங்களிப்பு கண்டிப்பாக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் தான் இதை படுகை நண்பர்களிடம் கோரிக்கையாக கேட்டேன். கண்டிப்பாக என் நண்பர்களுடைய முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.