இப்படியும் நடக்குமா?

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இப்படியும் நடக்குமா?

Post by ஆதித்தன் » Fri Apr 25, 2014 6:17 pm

கடந்த வாரம் சனிக்கிழமை, நான் உபயோகப்படுத்தும் கணிணியின் ஹார்டு டிஸ்க் எதிர்பாரத விதமாக தன் செயலை நிறுத்தியது. அதில் நான் சேகரித்து வைத்திருந்த அனைத்து டேட்டாசும் போய்விட்டன... சரி பரவாயில்லை என அதனை வாரண்டியில் சர்வீஸ்க்கு கொடுத்துவிட்டு, எனது துணைக் கணிணியினைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்.


அடுத்த நான்கு நாளில்... அதாவது செவ்வாய்க்கிழமை இரவு, இரண்டாவது கணிணியில் உள்ள ஹார்டு டிஸ்க்கும் தனது செயல்பாட்டினை நிறுத்தியது. அடுத்தடுத்து, இரண்டு கணிணியின் கார்டு டிஸ்க்கும் செயலிழந்தது, சற்று வருத்தமாக அமைந்தாலும், இதனையும் சர்வீஸ்க்கு கொடுத்துவிட்டு.... தற்பொழுது அடுத்த கணிணியின் மூலம் வந்து கொண்டிருக்கிறேன்.

இடையில் ஏற்பட்ட அலைச்சலால், மனதோடு சேர்ந்து உடலும் சோர்ந்துவிட்டதால்... கடந்த ஒர் வாரமாக என்னால் எதிலும் சரியாக நாட்டம் செலுத்தி பணியாற்ற முடியவில்லை.


கிடைத்த பெரிய ப்ராஜக்ட் பணியினை முடித்துக் கொடுக்க வேண்டிய நாள் முடிந்தும், வாய்தா கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய சூழலில் மனம் அமைந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல்... இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு சேர்ந்த அனைத்துமே ஒர் பிரச்சனையானதாகவே இருந்து கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சி எதுவரை என்பது தெரியவில்லை.
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: இப்படியும் நடக்குமா?

Post by agntvm » Fri Apr 25, 2014 6:56 pm

ஆதித்தன் சார் அவர்களுக்கு கவலை வேண்டாம்.
எல்லாம் நல்லபடியாக நடக்கும்
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இப்படியும் நடக்குமா?

Post by கிருஷ்ணன் » Fri Apr 25, 2014 6:58 pm

:eyel: :eyel: :god:
எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டே செல்வோம் ஆதி சார்.5 வருடம் ஆன்லைனில் உள்ள உங்களுக்கே இவ்வளவு சோதனைகளை எதிர் கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.மன வருத்தம்தான்.இந்த மாதம் எனக்கும் பல சோதனைகள்தான்.ஒரு மாதமாக டாஸ்குகள் கிடைக்காமல் ஆன்லைன் வேலை முடங்கிப் போனது.கை கொடுத்த ப்ரோவிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.ப்ரோவில் சம்பாதித்த 5000 ரூபாயினை கோல்ட்ன் மெம்பர்ஷிப்பிற்காக முதலீடு செய்ய வேண்டியாகிவிட்டது.இது போல ஆஃப்லைன் தொழில்களிலும் சோதனைதான்.இலட்சங்கள் கைக்கு கை மாறினாலும் வாய்க்கு ஒரு இலாபமும் வந்து சேரவில்லை.குடும்பச் செலவுகளும் சாதன‌ங்கள் பழுதாகி பல மடங்கு செலவு வைத்துவிட்டன.அநேகமாக இருவருக்கும் ஒரே ராசி அதிபதிதான் நம்மை உருட்டிக் கொண்டிருக்கிறார் போல....குரு நாலுக்குப் போனாலாவது நல்ல காலம் பிறக்குமா என வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.மனம் தளராமல் முயல்வோம்.முன்னேறுவோம்.
:rock: :rock:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: இப்படியும் நடக்குமா?

Post by mnsmani » Sat Apr 26, 2014 11:41 am

இதுபோன்ற சோதனைகள் பல கடந்து வந்தவர் நீங்கள்,இரண்டு கனணியும் பழுதுபட்டிருப்பீன் உங்கள் தொடர்புகளை சற்று ஆராயுங்கள், ஏனெனில் இனையம் வாயிலாக வந்த வைரஸ் பிரச்சனையாக கூட இருக்கலாம். சோதனையே சாதனைக்கு முதல்படி. இதுவும் நன்மைக்கே
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: இப்படியும் நடக்குமா?

Post by சாந்தி » Sat Apr 26, 2014 4:08 pm

கவலைப்படாதீர்கள் சார்...
சீக்கிரமே உங்களுடைய கஷ்டங்கள் தீர கடவுளை வேண்டிக் கொள்கிறேன்..
படுகை மூலம் எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறீர்கள்...
கடவுள் உங்களை கைவிட மாட்டார்...
மனம் தளராதீர்கள்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இப்படியும் நடக்குமா?

Post by ஆதித்தன் » Sat Apr 26, 2014 6:10 pm

அனைவரது ஆறுதலுக்கும் மிக்க நன்றி

இது எனது மனதினை எளிமைப்படுத்தியுள்ளது.

மூன்றாவது சிஸ்டமும் பேலியர் ஆனாலும் ... நான் அடுத்தக் கட்ட ன்ஹிலையினை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டெய்ன்.

அனைத்தும் சிறப்பாக அமையும்.

அனைவருக்கும் மீண்டும் எனது நன்றி தெரிவித்துக்கொள்கிறெய்ன்
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

Re: இப்படியும் நடக்குமா?

Post by kannan77 » Sat Apr 26, 2014 9:52 pm

ஆதி சார்

சோதனை வரும்போதுதான் முன்பை விட உறுதியாய் இருக்க வேண்டும்.இடர்ப்பாடுகள் என்பது சிறு கல் மாதிரி .அதை கண்ணுக்கருகில் வைத்தால் பெரிதாய் இருக்கும்.கொஞ்சம் தூரமாய் பிடித்து பார்த்தால் தூசிபோல்தான் இருக்கும்.

அய்யன் வள்ளுவர் பாணியில்

"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படா ஆதவர்"

வைரமுத்து வார்த்தைகளில்

பூ என்பது
காம்பையும் சேர்த்துத்தான்

நாள் என்பது
இரவையும் சேர்த்துதான்

வாழ்க்கை என்பது
வலியையும் சேர்த்துதான்

நல்லதை எண்ணுவோம் ....நடப்பது நன்மைக்கென்று
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இப்படியும் நடக்குமா?

Post by ஆதித்தன் » Sun Apr 27, 2014 7:47 pm

Thanks for your reply
Bvsenthil
Posts: 26
Joined: Sat Dec 28, 2013 9:48 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: இப்படியும் நடக்குமா?

Post by Bvsenthil » Mon Apr 28, 2014 7:01 am

சோதனை வரும்போதுதான் முன்பை விட உறுதியாய் இருக்க வேண்டும்.சோதனையே சாதனைக்கு முதல்படி.இதுபோன்ற சோதனைகள் பல கடந்து வந்தவர் நீங்கள்.உங்களுடைய கஷ்டங்கள் தீர கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.கடவுள் கைவிட மாட்டார்.ஆதிசார் கவலை வேண்டாம்.எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இப்படியும் நடக்குமா?

Post by ஆதித்தன் » Mon Apr 28, 2014 2:41 pm

Thanks for your reply.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”