GBDgift - பணமாகும் பொழுதுபோக்கு நேரம்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBDgift - பணமாகும் பொழுதுபோக்கு நேரம்

Post by ஆதித்தன் » Sat Nov 14, 2015 8:07 pm

Image
பணம் சம்பாதிக்க பல பல வழிகள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் பொதுவாக செலவிடுவது நமக்கான 24 மணி நேரத்தினைத்தான். ஒவ்வொருவரும் நேரத்தினை பயனுள்ளதாகவே கழித்து வருகிறோம். அதில் பணம் வருவதும் உண்டு, பணம் செலவழிப்பதும் உண்டு.

பொழுதுபோக்கு நேரம் என்றுச் சொன்னாலே அங்கே நேரம் செலவழிக்கப்படுகிறது என்பதனை நாம் எளிதாக சொல்லிவிடலாம். அவ்வாறு நேரம் செலவழிக்கப்படுகிறது என்றுச் சொன்னால் பணத்தினையும் சேர்த்தே செலவழிக்கிறோம் என்றும் எடுத்துக் கொள்ளலாம், நாளைய வருவாய்க்கான வாய்ப்பாக அடித்தளம் அமைக்கிறோம் என்று பயனுள்ளதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மெரினா பீச்சுக்கு காற்று வாங்கப்போவது என்பது பொழுதுபோக்கு. அங்கு நமக்கு உடல் சவுகரியம், மன மகிழ்வு என பயன் கிடைக்கிறது சின்ன செலவும் இருக்கலாம். தியேட்டர்க்கு படம் பார்க்கச் செல்வோம், படம் நன்றாக என்ற எண்ணம் இருக்கிறது என்றுச் சொன்னால் மனம் மகிழும்... நல்லாயில்லை என்ற எண்ணமாகிவிட்டால் மனம் அங்கலாயித்துக் கொள்ளும்..பல எண்ணங்கள் உதயமாகி இங்கும் ஒர் பயன் அமையும், அதைப்போல் செலவும் ஆகிவிடும்.

நண்பர்களோடு அரட்டை அடிப்பது, விளையாடுவது என்பவை அவ்வளவாக பணம் செலவுகளில்லாத பொழுதுபோக்கு மற்றும் பயனுள்ள மகிழ்வினையும் ஆரோக்கியத்தினையும் கொடுக்கவல்லது என்றுச் சொன்னாலும் இன்றைய நவீன யுகத்தில்... நட்புகள் பேஸ்புக்கினுள் முடங்கிவிட்டதால் பொழுதுபோக்குகள் டூர், தியேட்டர் என செலவுகள் கொண்டவைதான்.

நிகழ் உலகில் நாம் பொழுதுபோக்காக நேரத்தினைச் செலவிடச் செல்லும் அனைத்து இடங்களிலும், வருவாய் பார்க்கும் நபர்கள் இருப்பார்கள். ஆனால் நம்மால் முடியாது. செலவு மட்டுமே பயனுள்ளதாகச் செய்துவிட்டு வருவோம்.

நிழல் உலகம் என்று வர்ணிக்கப்படும் ஆன்லைனில் நாம் பொழுதுபோக்காக நேரத்தினை செலவிடம் இடத்தினையே பண வருவாய் உள்ளதாக மாற்றிவிட முடியும். இதற்காக நாம் பெரிதாகச் செலவிட வேண்டிய அவசியமே இல்லை. ஒர் விளம்பரம் செய்தால் போதும்... மற்றப்படி நம்மப்பாட்டுக்கு நம்ம பொழுதினை மகிழ்வாக எப்பொழுதும் போல செலவிடலாம்.

எடுத்துக்காட்டாகச் சொன்னால்.. பேஸ்புக்கினை இதுநாள் வரையிலும் நீங்கள் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தினீர்கள் என்றுச் சொன்னால்...அப்படியே தொடர்ந்து செய்யுங்கள். அதுகூடவே GBDgift விளம்பரப் பேனரை தங்களது ப்ரோபைல் பேனராக அமைத்துவிடுங்கள், அவ்ளதான்.

இதனைப்போல்.. வலைப்பூவிலும்.. தினசரி பதிவுக்கு என்ன செய்வது என்று யோசிக்க வேண்டிய அவசியமில்லை... உங்களுக்கு என்னப் பிடித்தமானது என்று இணையத்தில் நேரத்தினை செலவிடுகிறீர்களோ அதனையே காப்பி பேஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக:: செய்திகள் படிக்கிறீர்கள் என்றால்... அதனையே காப்பி பேஸ்ட் செய்து டைட்டிலை மாற்றம் செய்து பேஸ்புக்/வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளலாம். யுடியூப்பில் விடியோ பார்க்கிறீர்கள் என்றால் அதனை பேஸ்புக்/வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளலாம்..

போட்டோஸ்... பயனுள்ள தகவல்கள் என பொதுப்படையானவற்றை அனைத்தினையும் பகிர்ந்து கொள்வதும் நமது தளத்தினை ஒர் அக்டிவான தளமாக வைத்துக் கொள்வதோடு... அவ்வப்பொழுது.. அதாவது வாரத்தில் ஒர்நாள் GBDgift வழங்கும் பதிவினையும் சரியாக எடிட் செய்து பதிவு செய்து கொண்டாலும்... நமது பொழுதுபோக்கு நேரம் என்பது பண வருவாயாக மாற்றப்பட்டுவிடும்.

இல்லை.. இதெல்லாம் செய்யமாட்டேன்... உறவினர்களிடம் மட்டும் தான் சாட் செய்வதற்கு பயன்படுத்தி வருகிறேன் என்றுச் சொன்னாலும்.. வாரத்தில் ஒர் நாள் மட்டும் GBDgift கொடுக்கும் பதிவுகளை பகிர்ந்து கொண்டாலே... அவை உங்களுக்கு வருவாய் கொடுப்பதாக மாறிவிடும்.

ஆகையால், GBDgift சம்பந்தப்பட்ட விடியோ மற்றும் ஆர்ட்டிகள் லிங்குகளை உங்களது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் ப்ரோபைல் கவர் பேனரினை விளம்பரமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

Image
Facebook Timeline Cover Image size details in Tamil

பேஸ்புக் கவர் இமேஜ் தயாரிக்கும் பொழுது பார்க்க வேண்டியது...

அகலம் 851 pixel & உயரம் 315 Pixel இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதைப்போல், இடப்பக்கம் உங்களது ப்ரோபைல் போட்டோ 180 X 180 size இல் செய்து அப்லோடிங்க் செய்தால் 160 X 160 பிக்சலில் இருக்கும். அதற்கான அவுட்லைன் 10 பிக்சல் மற்றும், இடப்பக்கத்திலிருந்து 23 பிக்சல் நகண்டும், அதன் உயரம் 104 பிக்சல் இருக்கும் என்பதனை அறிந்து அந்த இடத்தில் நமது பேனர் எழுத்துக்கள் மறைந்து சென்றுவிடாதபடி.. நமது ப்ரோபைல் போட்டோ-இமேஜ் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

ப்ரோபைல் போட்டு இருக்கும் இடத்தினை சரியாக கற்பனை அல்லது ஒர் டம்மி இமேஜினை அந்த இடத்தில் வைத்து அவுட் புட் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கற்பனையில் இமேஜ் தயாரித்து கொள்ளுங்கள்.

இங்கு நான் பேஸ்புக் மட்டும் சொல்லியிருக்கிறேன்... நீங்கள் பயன்படுத்தும் கூகுள் ப்ளஸ், டூவிட்டர், மற்றும் பல சமூக வலைத்தளங்களிலும் இந்த யூக்தியின்படி ப்ரோபைல் பேனர் அட்வர்டைசிங்க் பயன்படுத்தலாம்.

நம்மை சுற்றி சரியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் யூக்திகளை அமைத்துக் கொண்டாலே, எளிதாக பணம் சம்பாதிக்கலாம். ஆகையால் சரியாக ஒவ்வொரு இடத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - பணமாகும் பொழுதுபோக்கு நேரம்

Post by ஆதித்தன் » Mon Nov 16, 2015 10:11 am

Image
Facebook cover image எந்த அளவில் அமைக்கலாம் என்பதற்கான சரியான தகவல் மாற்றப்பட்டுள்ளது.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”