கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterate

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterate

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 11:19 pm

NHM, Azhagi & Google Transliterate
எளியமையான முறையில் தமிழில் எழுத மூன்று வழிகள்
என்னை தொடர்பு கொள்ளும் நபர்களில் பலர் என்னிடம் கேட்பது, எப்படி சார் தமிழில் எழுதுவது? மற்றும் நம்முடன் இணையும் சில புதிய நண்பர்களுக்கும் எப்படி தமிழில் இங்கு பதிவது என்று தெரிவதில்லை.

ஒர் படி மேல், சிலர் தமிழில் எழுதுவது என்றால், இதற்கென தனியாக தமிழ் டைப் ரைட்டிங் படிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அப்படி இருந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்பொழுது தமிழில் எழுதுவது என்பது மிகவும் சுலபமான விஷயம் தான்.

அதாவது - அம்மா என்பதற்கு amma என்று டைப் செய்தால் போதும், அது தானாகவே அம்மா என்று மாறிவிடும், அது போலத்தான் எல்லாம். சுருக்கமாக சொன்னால் tanglish-ல் எழுதினாலே தமிழாக மாறிவிடும். ஆனால், அதற்கு முதலில் நீங்கள் குறிப்பிட்ட மென்பொருளை தரவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

தமிழில் எழுத :Free Tamil Writing Software

1. http://azhagi.com/

தமிழில் எழுத, பெயர் சொற்கள் எழுதுவது போன்று செல்வா என்பதனை selva என்றும் ஆதித்தன் என்பதனை athithan என்று எழுதுவதைப் போன்றே எல்லா சொற்களையும் எழுத உதவுவதுதான் இவ் அழகி சாப்ட்வேர். எ.காட்டு: amma - appa - vazhthukal என நீங்கள் டைப் செய்வது போன்றே டைப் செய்தால் போதும்.. தானாக தமிழ் எழுத்துக்களான "அம்மா-அப்பா-வாழ்த்துகள்" என கொடுக்கப்பட்ட அழகி சாப்ட்வேர் மாற்றிவிடுகிறது. அதற்கு அழகி மென்பொருளை உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும், மிக சுலபமாக இணையத்திலும் (F10 - பிரஸ் செய்துவிட்டு), கணினியிலும் தமிழில் எழுதலாம். அதாவது , Word Doc, Excel, PhotoShop, Internet Browser என அனைத்திலும் இதனை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறாக அழகி சாப்ட்வேரை உபயோகப்படுத்துவதற்கு முன்னர், டவுன்லோடிங்க் செய்து வைத்த அழகி சாப்ட்வேர் ஐகானை அவ்வப்பொழுது அக்டிவேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இணைய ப்ரவுசரில்/படுகையில்/பேஸ்புக்கில் எழுத ஆரம்பிக்கும் முன்னர் கீபோர்டின் மேல் இருக்கும் F10 பட்டனை அழுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறே தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் மீண்டும் எப்10-ஐ அமுத்த வேண்டும். மேலும் சந்தேகம் ஏற்படின் இப்பதிவிற்கு பின்னூட்டம்/ரிப்ளே கொடுக்கவும்.

விவரமாக அவர்களே கொடுத்துள்ளனர். பார்க்க > http://azhagi.com/

நம் படுகை.காம்-ல் நேரடியாக பதிவிட அழகி சாப்ட்வேர் மிகவும் உபயோகமாவும், எழுத்துப் பிழைகள் தவிர்க்கவும் உதவுகிறது.

Image
ஒர் கிளிக் செய்து, அழகி சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட நம் கீ போர்டில் எந்த எழுத்தினை தட்டினால் , எந்தத் தமிழ் வார்த்தை கிடைக்கும் என்பதற்கான படத்தினைப் கீழ் பாருங்கள்.
2. http://www.google.com/transliterate/tamil
கூகுளும் இச்சேவையை வழங்குகிறது. ஆனால், இதனை நாம் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனிலே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தேவையானவற்றை, அங்கயே டைப் செய்து, பின்னர் காப்பி செய்து பேஸ்ட் பண்ண வேண்டியதுதான். இது நண்பர்கள் கணிணி வாயிலாகவோ, புரவுசிங்க் செண்டர் வாயிலாகவோ தமிழில் எழுத வசதியாக இருக்கும். மேலும், இதுவும் எளிமையான amma - appa (அம்மா -அப்பா) முறைதான்.
பார்க்க > http://www.google.com/transliterate/tamil

3. http://software.nhm.in/products/converter
NHM Language Writer Software-ஐ டவுண்ட் லோடு செய்து கொண்டால், எளிதாக இணையத்தில் தமிழில் எழுதலாம். இதற்க்கான வழிமுறைகளை நான் கீழ்கண்ட முகவரிகளில் பதிந்துள்ளேன். மேலும் விவரம் வேண்டும் எனில், அதை படித்துக் கொள்ளுங்கள்.
மேலும் விவரமாக படிக்க > viewtopic.php?f=37&t=725
Image
மேலும் உதவி தேவைப்படின் இங்கு பின்னுட்டம் இடவும்.

நன்றி.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterate

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:29 pm

நன்றி ஆதித்தன் சார், தமிழை இண்டர்னேட்டில் உபயோகிப்போம் என கனவில் கூட நினைத்த தில்லை...ஆனால் இப்போது எவ்வளவு எளிதாக உரையாடுகிறோம்...வாழ்க தமிழ் கணினி..(என்ஹ்செம்.அழகி)
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterate

Post by ahamednowfer » Tue Jul 24, 2012 3:38 pm

ஆதி சேர;.

நான் முதல் 06 பயிற்சியையும் செய்து முடித்து விட்டேன். ஆனாலும் இது வரையில் டைப் பண்ணிய முறை NHM,AZhagi இல் Type பண்ணி Copy paste செய்து வந்தேன அப்பொழுது சில சொற்களுக்கு புள்ளிகள் கமாக்கள் அரவுகள் பிழையாக காட்டுகின்றது. நான் நிறைய முயற்சிப் பண்ணி பார;தேன் ஆனாலும் சரியாக வில்லை. நீங்கள் தான் சேர; அதை தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். நான் எழுதியுள்ள இந்த பந்தியிலும் அவ்வாரான நிறைய பிழைகள் காணப்படுகின்றதை அவதானிக்கலாம். Reply Post என்பதற்கு பதில் அனுப்பும் போது அந்த subject க்கு கீழாலுள்ள Box இல் Type பண்ணுவதற்கு இலகுவான முறையொன்றை சொல்லி தாருங்களே சேர; NHM, Azhagi Software intall செய்யப்பட்டிருக்கின்றது. அத்துடன் internet Explorer,Google Chrome,mozill firefox internet Browser களும் itall செய்யப்பட்டிருக்கின்றது.

கொஞ்சம் தெளிவாக விளக்கங்களை தாருங்கள் சேர;
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterate

Post by ஆதித்தன் » Tue Jul 24, 2012 7:34 pm

ahamednowfer wrote:ஆதி சேர;.

நான் முதல் 06 பயிற்சியையும் செய்து முடித்து விட்டேன். ஆனாலும் இது வரையில் டைப் பண்ணிய முறை NHM,AZhagi இல் Type பண்ணி Copy paste செய்து வந்தேன அப்பொழுது சில சொற்களுக்கு புள்ளிகள் கமாக்கள் அரவுகள் பிழையாக காட்டுகின்றது. நான் நிறைய முயற்சிப் பண்ணி பார;தேன் ஆனாலும் சரியாக வில்லை. நீங்கள் தான் சேர; அதை தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். நான் எழுதியுள்ள இந்த பந்தியிலும் அவ்வாரான நிறைய பிழைகள் காணப்படுகின்றதை அவதானிக்கலாம்.

Reply Post என்பதற்கு பதில் அனுப்பும் போது அந்த subject க்கு கீழாலுள்ள Box இல் Type பண்ணுவதற்கு இலகுவான முறையொன்றை சொல்லி தாருங்களே

இங்கு பார்த்தேன் என்ற சொல்லை எழுதும் பொழுது தாங்கள் பிழையாக பார;தேன் என்று எழுதியுள்ளீர்கள், ஆகையால் இதனை வைத்தே சொல்கிறேன்.


முதலில் அழகியை ஆன் செய்யுங்கள்.

இரண்டாவது இங்கு Reply Post என்ற பட்டனை சொடுக்கவும்.

மூன்றாவது F10 என கீபோர்டின் மேல் வரிசையில் இருக்கும் கீயை அழுத்தவும்.

நான்காவது, பதிவுக் கட்டத்திற்குள் எழுத ஆரம்பியுங்கள்.. அதாவது பார்த்தேன் என எழுதுங்கள்.

பார்த்தேன் (paarththaen) என்றபடி டைப் செய்யுங்கள்..

மேலும், ஒவ்வொரு எழுத்தையும் எப்படி டைப் செய்ய வேண்டும் என மேலே ஒர் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இப்பொழுதும் தவறு நேரிட்டால், என்ன என்பதனை விளக்கமாக சொல்லுங்கள், தீர்க்க முயற்சிப்போம்.
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterate

Post by ahamednowfer » Wed Jul 25, 2012 5:21 am

ஆதி சேர்.

நீங்கள் சொல்லி தந்த முறையில் இப்பொழுது என்னால் தமிழில் டைப் பண்ண முடியும். ரொம்ப ரொம்ப :thanks: :thanks: சேர். நீங்க அறிவின் கடல் அதில் எவ்வளவு எடுத்தாலும் குறையாது. உங்களுக்கு மேன் மேலூம் அறிவையும் ஆற்றாலையும் இறைவன் கொடுக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

மிகவும் நன்றி.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterat

Post by sarjan1987 » Sun Jul 21, 2013 8:53 pm

சார், azhigi சாப்ட்வேர் use பண்ணி MS word டைரக்ட் அ தமிழ்ல type பண்ண முடியாத? azhigi சாப்ட்வேர் ல type பண்ணி தான் MS word ல பேஸ்ட் பண்ணனுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterat

Post by ஆதித்தன் » Sun Jul 21, 2013 9:53 pm

sarjan1987 wrote:சார், azhigi சாப்ட்வேர் use பண்ணி MS word டைரக்ட் அ தமிழ்ல type பண்ண முடியாத? azhigi சாப்ட்வேர் ல type பண்ணி தான் MS word ல பேஸ்ட் பண்ணனுமா?
அழகி போர்டில் டைப் பண்ண வேண்டாம். அப்படியே விட்டுவிட்டு,

நேரடியாக MS Word திறந்து, F10 பிரஸ் செய்துவிட்டு டைப் செய்தால் தமிழில் வரும்.

அதாவது, இங்கு நேரடியாக டைப் செய்வது போல் தான் அதுவும்.

போட்டோஷாப் பயன்பாட்டிற்கு மட்டுமே, அழகி போர்டில் டைப் செய்து காப்பி செய்ய வேண்டும்.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterat

Post by sarjan1987 » Sun Jul 21, 2013 10:02 pm

thank you sir.........
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterat

Post by sarjan1987 » Tue Jul 30, 2013 11:27 pm

சார், படுகையில் தமிழில் ஒரு வார்த்தை type செய்துவிட்டு space பட்டன் கிளிக் செய்து பின் back பட்டன் பிரஸ் பண்ணும்போது நாம் type செய்த வார்த்தைக்கு தகுந்த பிற வார்த்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக தெரியும். அதில் தேவையான வார்த்தையை நாம் தேர்வு செய்யலாம். ஆனால் MS Word ல் நாம் type செய்யும் போது அவ்வாறு வருவதில்லை. மேலும் இதில் நாம் ஒருசில வார்த்தைகளை மாற்றி type செய்தாலும் சரியான வார்த்தை வருகிறது. ஆனால் MS Word ல் அவ்வாறு வருவதில்லை. கொடுக்கப்பட்டிருக்கும் picture ல் ஒவ்வொரு வார்த்தைக்கும் தரப்பட்டிருக்கும் சரியான word யை type செய்தால் தான் வருகிறது. உதாரணமாக இதில் amma என type செய்தாலே அம்மா என வரும். ஆனால் MS Word ல் ammaa என type செய்ய வேண்டும். இவற்றிற்கு ஏதாவது மாற்று வழி உண்டா சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கணினியில் தமிழில் எழுத NHM, Azhagi & Google Transliterat

Post by ஆதித்தன் » Wed Jul 31, 2013 12:11 am

sarjan1987 wrote:சார், படுகையில் தமிழில் ஒரு வார்த்தை type செய்துவிட்டு space பட்டன் கிளிக் செய்து பின் back பட்டன் பிரஸ் பண்ணும்போது நாம் type செய்த வார்த்தைக்கு தகுந்த பிற வார்த்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக தெரியும். அதில் தேவையான வார்த்தையை நாம் தேர்வு செய்யலாம். ஆனால் MS Word ல் நாம் type செய்யும் போது அவ்வாறு வருவதில்லை. மேலும் இதில் நாம் ஒருசில வார்த்தைகளை மாற்றி type செய்தாலும் சரியான வார்த்தை வருகிறது. ஆனால் MS Word ல் அவ்வாறு வருவதில்லை. கொடுக்கப்பட்டிருக்கும் picture ல் ஒவ்வொரு வார்த்தைக்கும் தரப்பட்டிருக்கும் சரியான word யை type செய்தால் தான் வருகிறது. உதாரணமாக இதில் amma என type செய்தாலே அம்மா என வரும். ஆனால் MS Word ல் ammaa என type செய்ய வேண்டும். இவற்றிற்கு ஏதாவது மாற்று வழி உண்டா சார்.

நீங்கள் சொல்வதனைப் பார்க்கும் பொழுது படுகையில் எழுதும் பொழுது, இடப்பக்கம் இருக்கும் தமிழ் ரைட்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது தெரிகிறது.


amma > அம்ம
ammaa > அம்மா

என வருவதே சரியானதும், சரியாக ஒவ்வொரு எழுத்தினையும் நேரடியாக டைப் செய்ய எளிதாக இருப்பதாகும். உதாரணத்திற்கு ma = ம , maa = மா என்பதே நலம். ம -வுக்கும், மா-னாவுக்கும்.. ஒரே எழுத்து என்றால், சரியாகுமா?


இடப்பக்கம் இருப்பது கூகுள் ட்ரான்ஸ்லிட்ரேட் என்பதால், அது சேகரித்து வைத்திருக்கும் வார்த்தைகளை அள்ளிக் கொடுக்கிறது.. நாம் திருத்தம் செய்ய. அதைப்போல் நம் விருப்பம் போல் சில எழுத்துக்கான உருவத்தினைக் கொடுக்கவும் வாய்ப்பு கொடுக்கிறது. அதாவது, ama என்று எழுதிக்கூட அம்மா என வரும்படி ஒர்முறை அமைத்துவிட்டால், அடுத்த முறை ama என்றால் அம்மா என வந்துவிடும். இது கூகுள் வார்த்தைகளைச் சேகரிக்க வைத்திருக்கும் முறை.. அதுவே தவறான முறைக்கும் வழிவகுத்துவிடுகிறது.


அழகி என்பது தமிழ் எழுத்துக்கான வடிவம். ஆகையால் அந்த சரியான வடிவ எழுத்துக்களை பயபடுத்த அது வரும். ஆகையால் மீண்டும் எந்த எழுத்துக்கு எந்த ஆங்கில எழுத்தினைப் பயன்படுத்த வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள் எளிதாக இருக்கும். எப்பொழுதும் அழகி பயன்படுத்தினால், இந்த முறை தெளிந்துவிடும்.

இங்கும் F10 பிரஸ் செய்தே எழுதுங்கள்.

=====================================================

அதே நேரத்தில் அழகி கொண்டு வேர்டில் எழுதும் பொழுது ஸ்பேஸ் பிரச்சனை வரும்... அது பொதுவான பிரச்சனை. அவ்வாறு வேர்டில் எழுத வேண்டி இருந்தால், இங்கு எழுதி காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
Post Reply

Return to “உதவிக் களம்”