வங்கிகளில் பணத்தினை வைக்காதீர்கள் - எச்சரிக்கை

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

வங்கிகளில் பணத்தினை வைக்காதீர்கள் - எச்சரிக்கை

Post by ஆதித்தன் » Thu Nov 17, 2016 10:14 am

அன்றைய நாளிலிருந்து வங்கிகள் என்பது பொதுமக்களது பணத்தினை சுரண்டுவதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரிய பணக்காரர்களுக்கு, கம்பெனி தொடங்க என்று கோடி கோடியாய் கடன் கொடுத்துவிட்டு, பின் அதனை கேட்காமல் வராக்கடன் லிஸ்டில் சேர்ந்திருப்பவை 5 இலட்சம் கோடி. இன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டும் ரூ.7016 கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டது, கடந்த ஆண்டில் 1 இலட்சத்தி 15 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, இவர்கள் கடன் வாங்கியவர்கள் என்ற லிஸ்டில் இருந்தே நீக்கிவிட்டார்கள்.. இனி அவர்களிடம் கடன் பற்றிய் கேட்கவே மாட்டார்கள் என்பது அன்றைய காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கும் பழக்கம். ஆனால், இதனை மறைத்து... வாங்குவேம் என்றுச் சொல்கிறது அரசு. அரசு சொல்வது சுத்தப் பொய்..

வாங்கிய கடனுக்கான அடமானப் பொருள் கையப்படுத்துவதே வங்கியின் வேலை.. அதனைச் செய்தாகிவிட்டது. அதனைச் செய்தப்பின்னரே கடன் தள்ளுபடி செய்து அறிவிக்கப்படுகிறது. இனி அடமானப் பொருளை ஏலம்விட்டு வரும் பணத்தினை வரவில் வைத்துக் கொள்ள வேண்டும் அவ்ளதான்.

அடமானப் பொருளின் மதிப்பு அதிகமாக இருக்குமாயின், கடன் வாங்கியவர் பணத்தினை கட்டிவிட்டு திரும்பப் பெறுவார். ஆனால், கம்பெனியில் உள்ள பொருள் மற்றும் நிலம் என்பவை மதிப்பு பாதிக்கும் கீழாகவே சரிந்துவிடும். ஆகையால், அதனால் கொடுத்தப் பணத்தில் பாதி வருவது என்பதே உண்மை.

அதிலும் பல கோடி கடனுக்கான பொருள் என்பது பிறர்க்கு உபயோகம் இல்லாதப் பொருளாகவே இருக்கும். அதாவது அத்தனை கோடிக்கு யார் அதில் முதலீடு செய்யப் போகிறார்கள். ஏற்கனவே செய்தது என்பதே வங்கி பணம் கொடுக்கிறது என்பதனைத் தவிர உறுப்படியாக அந்தத் தொழிலில் ஒன்றும் இருக்காது. ஆக, தள்ளபடி செய்யப்பட்ட கடன் என்பது முற்றிலுமாக வங்கிக்கு இழப்பே.

தற்போதைய நிலையில் 7000 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கம்பெனிகள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியிருந்துமே பணத்தினை வாங்காமல் பொதுமக்களின் பணத்தினை மற்றும் அப்பாவி ஏழை மக்களின் சிறுகடனுக்கு நிலத்தினை கையகப்படுத்துறேன், வீட்டினை கையப்படுத்துகிறேன் , நகையை ஏலம் விடுகிறோம் என்று மேலும் கடனாளி ஆகி, தற்கொலைக்கு தள்ளிய இந்த வங்கிகள்...மேலும் தொடர விடவேக்கூடாது.

கடந்த இரண்டு ஆண்டிகளில் தள்ளுபடி செய்த கடன் தொகை 1 இலட்சத்தி 24 ஆயிரம் கோடி.. இன்னும் பெரிய கம்பெனிகளுக்கு கொடுத்த கடனில் வராக்கடனில் இருப்பவை கிட்டத்தட்ட மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி.. அவையும் அடுத்த வருடத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்பதே உண்மை.

மக்களே, உங்களது பணத்தினை வாங்கி பெரிய கம்பெனிகளுக்கு கொடுக்கும் வேலையைத்தான் வங்கிகள் செய்கின்றன.

தற்போதைய நிலையில் வங்கியில் இருக்கும் பணத்தினை மக்கள் கேட்டால், பேப்பரில் அச்சடிச்சித்தான் கொடுக்க முடியுமே தவிர.. நீங்கள் கொடுத்த மதிப்புக்கு கொடுக்க முடியாது. அதாவது இன்று ரூ.50 என்பதற்கு சமம் என்பதுதான் ரூ.2000. இதனை உங்களுக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்.. இன்னும் ஒராண்டில் விலைவாசி எல்லாம் உச்சத்திற்கு செல்லும் பொழுது தெரியும்.

புரிந்து கொள்ளுங்கள் மக்களே.. வங்கியில் பணத்தினை வைக்காதீர்கள்.. எடுத்து உபயோகமான பொருளாக மாற்றிவிடுங்கள். அதாவது மின்சாரப்பிரச்சனை, நீர்பிரச்சனை , உணவுப் பிரச்சனை போன்றவற்றினைத் தீர்க்கும் வகையிலான பொருள்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “உதவிக் களம்”