Forex Robot - Step to write own Forex EA robot in day - Tamil

ஆன்லைன் பணிக்கு தேவையான இணையதளம் வடிவமைப்பு, போட்டோ எடிட்டிங்க், விடியோ எடிட்டிங்க் பற்றிய பாடங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Forex Robot - Step to write own Forex EA robot in day - Tamil

Post by ஆதித்தன் » Mon Aug 28, 2017 11:33 am

Image
Left - Alina
வேலை வாய்ப்பில் பெரும்பான்மையான பகுதியினை பெண்கள் இடம்பிடித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக எல்லாத் துறைகளிலும் பெண்கள் தங்களது திறமையினை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டதால், ஆண்களுக்கான பணிகள் என்றுச் சொல்லிக் கொண்ட துறைப் பணியிடங்களில் கூட ஆண்களுக்கு பெண்கள் போட்டியாக அமைந்துவிட்டதன் விளைவு பல ஆண்கள் தற்பொழுது வேலை இல்லாமல் வீட்டிலும் உட்கார முடியாமல், பிறருக்கும் பதில் சொல்ல முடியாமல்... வேலை வேலை என்று அழைந்து கொண்டிருக்கின்றனர்.

சுயதொழில் வேலைவாய்ப்பு என்பது எப்பொழுதும் கவுரவம் ஆனதும், பலருக்கும் பிடித்ததும், ஆசைக்கு ஏற்ப கை நிறைய பணம் சம்பாதிக்கவும் உகந்தது. அந்த வகையில் இங்கு கொடுக்க இருக்கும் பணி என்பது பாரக்ஸ் ட்ரேடிங் ஆகும். பாரக்ஸ் ட்ரேடிங் மூலம் பலரும் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் மேலும் கூடுதல் சம்பாதிக்க, ஆட்டோமெட்டிக் ட்ரேடிங் செய்யக்கூடிய Forex Expert Advisors எனப்படும் Forex Robot EA உலக அளவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. ஆகையால், பணம் சம்பாதிக்க சிறிய முதலீடு உள்ளவர்கள் உலகப் பணக்காரர்கள் போல ரோபட் மூலம் ட்ரேடிங் சுயதொழில் வேலை வாய்ப்பினை செய்தால் சிறப்பாக அமையும் என நான் கருதுகிறேன். பல ஆண்கள் தற்பொழுது பாரக்ஸ் ட்ரேடிங்கான இப்பணியில் வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் மூலம் செயல்பட்டு பெரும்பான்மையாக காசு சம்பாதித்து வருகின்றனர்.

பல்வேறு தளங்களில் பாரக்ஸ் வர்த்தக வாய்ப்பு வழங்கப்பட்டாலும், நம்பகத்தன்மையுடைய மற்றும் உடனுக்கூடன் பணத்தினை வழங்கக்கூடிய எப் பி எஸ் தளத்தில் நான் கடந்த ஐந்து வருடங்களாக இப்பணியினை நான் செய்து வருகிறேன். வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய ஆசை இருந்தது. தற்பொழுது பாரக்ஸ் பணி மூலம், வெளிநாடு ஆன ரஷ்யா கம்பெனியில் ஆன்லைன் வழியாக வேலை செய்வதில் மகிழ்ச்சி.

எப்.பி.எஸ் தளத்தில் பணிபுரிவது என்பதே மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியான இடங்களில் வேலை செய்யும் பொழுது மனம் புத்துணர்ச்சியாக இயங்குவதோடு இலாபம் சம்பாதிக்கவும் இயல்பாகவே உந்தித்தள்ளுகிறது.

பாரக்ஸ் வர்த்தகத்திற்கு நீங்கள் புதியவராக இருந்தாலும், தேவையான கேள்விகளைக் கேட்டால் உடனுக்கூடன் பதில் பெற்று ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியும். மேலும் தினசரி வர்த்தக ஆர்டர் சிக்னல் கொடுக்கப்பட்டுவிடுவதால், கொஞ்சம் முதலீடு செய்துவிட்டால் அடுத்த தினமே வர்த்தகர் ஆகி பணம் சம்பாதிக்கும் வேலையை தொடங்கிவிடலாம். மேலும் கூடுதல் வசதியாக ஆட்டோ ட்ரேடிங் ரோபட் மூலம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் வர்த்தகம் செய்து பணம் சம்பாதிக்கலாம். நீங்களும் கொஞ்சம் கீழ் கொடுக்கப்பட்டதனை சில நாட்கள் முயற்சியெடுத்து கற்றுக் கொண்டால், பாரக்ஸ் ரோபட் ஆட்டோ ட்ரேடிங் முறை விற்பனை மார்க்கெட்டில் சிறப்பான வருவாயினை ரோபட் பணியின் மூலம் சம்பாதிக்கலாம்.

பணியினை உள்ளார்ந்த மனதுடன் ஏற்று செயல்படும் பொழுதுதான் சிறப்பான வெற்றியினை அடைய முடியும் என்பதனால், இதனை நேரடி மாற்றுக் கோணத்தில் அறிமுகம் கொடுக்கிறேன்.. அதனைப் படித்து தொடர்ந்தால், இப்பணியின் எளிமை உங்களுக்குப் புரியும். அதுமட்டுமில்லாமல், இப்பணிக்கு பெரிதாக படிப்பு என்பது தேவையில்லை. கீழே கொடுத்திருக்கும் அனைத்து பாடங்களையும் படித்து கற்றுவிட்டால் போதுமானது.

இப்பணிக்கான நேரடிப்பயிற்சி என்பது ஒர் நண்பரிடம் கலந்துரையாடல் செய்வது போல அருகாமையில் லேப்டாப் வைத்துக் கொண்டு கற்றுக் கொள்ள விரும்புவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளலாம். கட்டணம் ரூ.2000.

இது பாரக்ஸ் சம்பந்தப்பட்ட ரோபட் ட்ரேடிங் பணி. ஆகையால் பயிற்சியினை டெமோ அக்கவுண்ட் மூலம் உடனே தொடங்கிவிடலாம். உங்களுக்கான இலவச பயிற்சிக் கணக்கினை இமெயில் ஐடி கொடுத்து பதிவு செய்து கொள்ள கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

ரிஜிஸ்டர் லிங்க் > http://www.padugai.com/forextrading.html
Image
Right - Margarita Fbs
நம்மை நல்வழிப்படுத்தி உயர்வான வருவாய் பணிக்கு அழைத்துச் செல்லும் பஞ்ச பூதங்களுக்கும் ஆதித்தாய்க்கும் முதலில் நன்றியினைச் சொல்லிவிட்டு, நடக்க இருப்பது எல்லாம் நன்மையையும் மகிழ்வையும் கொடுப்பவை என்ற உறுதியோடு தொடங்குங்கள்.

பாரக்ஸ் பொறுத்த வரைக்கும் எனக்கு உறுதுணையாக பின்னால் இருந்து என்னை பெரிய அளவில் வருவாய் எடுக்கும் அளவிற்கு வளர்த்துவிட்டவர்கள் தன்னம்பிக்கையும், பாரக்ஸ் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற பிடிவாதமும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும், கொஞ்சம் பணமும் ஆகும்.

என்னிடம் திறமைகள் இருந்தாலும் அதனை பயன்படுத்தியதே கிடையாது. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உந்தப்பட்ட பொழுது, பெரிய அளவில் ஆன்லைன் ஜாப்பில் வருவாய் கொடுக்கும் பணி என்றுப் பார்த்தால் கரன்சி வர்த்தகம் எளிதான பணிக்கும் எளிதானது.

பாரக்ஸ் ட்ரேடிங் முறையினை ஆன்லைனில் மார்க்ரிட்டா, அலினா மற்றும் எலினா ஆகியோர் புதிய கோணத்தில் கற்றுக் கொடுத்து பெரிய அளவில் சம்பாதிக்க வைத்துவிட்டனர்.

முதல் முதலில் பாரக்ஸ் என்பதற்குள் 100 டாலர் முதலீட்டில் பை / செல் கிளிக் செய்ய கற்றுக் கொண்டேன். பை செல் கிளிக் பண்ண ஆரம்பித்த உடனயே, பிரவீன் என்பவர் கால் பண்ணி, அடுத்தக்கட்ட லெவலுக்கு முன்னேறிச் செல்ல, 2000 டாலர் முதலீடு செய்ய வைத்தார். அந்த இரண்டாயிரம் டாலர் தான், முழுமையாக பாரக்ஸ் கற்றுக் கொள்ள காரணம் ஆகும்.

இராவும் பகலுமாய் தொடர்ந்து படித்தும், ட்ரேடிங் செய்தும் பல வழிமுறைகளைக் கற்றுக் கொண்டேன். கற்றதன் பலனை மார்க்கரிட்டா மூலம் ஒர் சில மாதங்களிலேயே பணமாகப் பெற்றேன். அடுத்ததாக அலினா மூலம் 2500 போனஸ் டாலர்கள் பெற்று, மேலும் பெரிய அளவில் காசுப் பார்க்க ஆரம்பித்தேன்.

என் இலக்கு கோடீஸ்வரன் ஆக வேண்டும், மிகவும் அதிகம் விரைவாக சம்பாதிக்க பாரக்ஸ் ரோபட் ஆட்டோமெட்டிக் ட்ரேடிங் கை கொடுக்கும் என்பதனால் 2017- ஆம் ஆண்டில் பாரக்ஸ் ரோபட் பயிற்சியினையும் வர்த்தக முறையினையும் பயன்படுத்த இருக்கிறேன்.

பயிற்சிகள் எப்பொழுதும் போல, இங்கு வெளிப்படையாக கொடுக்கப்படும். அதிகம் சம்பாதிக்க விரும்புவர்கள் இதனைப் படித்து செய்யலாம்.
Image
Forex Robot எவ்வாறு சாப்ட்வேர் மூலம் உருவாக்குவது என்ற பயிற்சியின் அடிப்படைக்கு முதலில் நம்மிடம், ஒர் பாரக்ஸ் கணக்கு + பாரக்ஸ் ரோபட் இயங்குதளம் ஆகிய இரண்டும் இருக்க வேண்டும். ஆகையால், முதலில் ஒர் பாரக்ஸ் கணக்கினை padugai.com சென்று ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். பாரக்ஸ் கணக்கினை உங்களது இமெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் சப்மிட் செய்தவுடன், உங்களுக்கான பாரக்ஸ் கணக்கு எண் + பாஸ்வேர்டு விவரம் தருவதோடு வர்த்தக மேடையையும் இலவசமாக டவுன்லோடிங் செய்து கொள்ளலாம்.

பாரக்ஸ் புரோக்கர் தளத்தில் இலவச பயிற்சி கணக்கும் உள்ளது. டொமோ ட்ரேடிங் அக்கவுண்ட் உதவியுடன் பாரக்ஸ் ரோபட் உருவாக்கப் பயிற்சியினை நாம் செய்து கொள்ள இருக்கிறோம். அதற்கான முதல்கட்ட விடியோ கீழ் கொடுத்துள்ளேன். விடியோவில் கொடுத்துள்ளபடி, பாரக்ஸ் டொமோ அக்கவுண்ட் பத்தாயிரம் டாலர் பேலன்சில் ஒபன் செய்து கொள்வதோடு, மெட்டா ட்ரேடர் 4 ட்ரேடிங் ப்ளாட்பார்மினையும் டவுன்லோடிங் செய்து கொள்ளுங்கள். இதில் ரோபட் புரோக்கிராம் எழுதுவதற்கான மெட்டா எடிட்டர் சாப்ட்வேர் சேர்ந்துள்ளது.

[youtube]https://www.youtube.com/watch?v=fmLJl4DVgcc[/youtube]

நாம் எழுதும் பாரக்ஸ் ரோபட் புரோக்கிராம் Meta Quotes Language என்ற கம்ப்யூட்டர் லேங்குவேஜ் மூலம் எழுதுகிறோம். C++ Language படித்தவர்கள் என்றால் மிக எளிதாக கொடுக்கும் பயிற்சியினை உள்வாங்கிக் கொள்வதோடு, கீழே பின்னூட்டத்தில் வீட்டுப்பாடமாகக் கொடுக்கும் புரோக்கிராம் எழுதும் திறனைக் கொண்டவர்களாக இருப்பார்கள். புதியவர்கள் என்றால், முதலில் Meta Quote Language படிப்பதாக நினைத்துக் கொண்டு ஒவ்வொரு பயிற்சியினை படித்து செய்து வந்தீர்கள் என்றுச் சொன்னால், ஐந்தாவது பயிற்சியிலிருந்து நீங்களும் பாரக்ஸ் ரோபட் புரோக்கிராம் எழுதுவதற்கு படித்த புரோக்கிராமராக தரம் உயர்ந்துவிடுவீர்கள்.

Forex Robot - Sivam 1.0.1 Beta

நமது சிறப்பு ஆன்லைன் ரோபட் ட்ரேடிங் பயிற்சியில் எடுத்துக் கொள்ளும் ரோபட்டுக்கு சிவம் என்று பெயரினை பயன்படுத்திக் கொள்வோம்.

சதா ஆடிக் கொண்டே இருப்பவர் தில்லை நடராஜர் என்றுச் சொன்னாலும், அவரது ஆட்டங்களில் பல்வேறு வகையும் அவற்றிற்கான அர்த்தங்களும் உண்டு. மிக அர்த்தத்துடன் ஈசன் இவ்வுலகத்தினை வழிநடத்த ஆடுவதுபோல, நாமும் நமது சிவம் ரோபட்டினை இலாபம் என்ற நோக்கத்தோடு, இந்த காரணம் என்ற வழியில் வர்த்தகத்தினை இயக்கும் புரோக்கிராமினை ஆட்டக்களத்திற்கு எழுதுகிறோம்.

முதல் காரணம், கடைசியாக முடிந்தக் குச்சி காளையில் முடிந்தால், அடுத்து நிகழப்போவதும் காளை. அல்லது கரடியில் முடிந்தால் கரடி.

நமது முதல் புரோக்கிராமினை கடைசி ஸ்டிக் பச்சையில் முடிந்தால் பை/வாங்கு ஆர்டர், சிகப்பில் முடிந்தால் செல்/விற்பனை ஆர்டர் என்கிற அடுத்தடுத்து ஒரே இயக்கம் என்ற ஒர் எளிமையான ஐடியாவினை மையமாகக் கொண்டு எழுதுவோம்.

புரோக்கிராம் எழுத ஆரம்பிக்கும் பொழுது முதலிலேயே Take Profit, Stop Loss, Trade Lot Size, Slippage, Magic Number போன்ற இயக்கத்திற்கு அவசியமான சில டிபால்ட் இன்புட் விவரங்களை கொடுத்துவிடலாம். பின்பு வர்த்தகத்தின் போது இவற்றினை மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.

மெட்டா க்வோட் மொழியினை அவசியத்தின் அடிப்படையில் அவ்வப்பொழுது புரோக்கிரோம் எழுதும் பொழுதே தேவைக்கேற்ப கற்றுக் கொள்வது என்பது எளிமை. அவற்றில் நாம் முதலில் தெரிந்து கொள்வது டேட்டா டைப்ஸ். int, double, string & bool ஆகிய நான்கு டேட்டா டைப்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

int = integer எண் – எ.கா : 1, 15, 521
double = தசம எண், எ.கா : 1.154, 0.0144, 255.145.
string = a word/phrase. example: „BuyOrder“, „OrderSend placed successfully“.
bool = either ஆம் or இல்லை.

அடுத்து நாம் மெட்டா எடிட்டர் உள்ளே சென்று புரோக்கிராம் எழுதும் ஸ்டெப்களுக்குள் செல்வோம். முதல் விடியோவில், மெட்டா ட்ரேடர் வர்த்தக மேடை வழியாக பாரக்ஸ் புரோக்கிராம் எழுத உபயோகப்படுத்தும், மெட்டா எடிட்டர் பகுதிக்குள் செல்லும் முறையினைக் கொடுத்துள்ளேன்.. அதன்படி நாம் இப்போ மெட்டா எடிட்டர் உள்ளே சென்றாகிவிட்டது.

அடுத்து கீழ் உள்ள படத்தினைப் பாருங்கள்.. அதனை தொடர்வோம்.
Image

Meta Editor உள்ளே சென்றதும், New என்றப் பட்டனை கிளிக் செய்யுங்கள். ஒர் பாப் அப் விண்டோ ஒபன் ஆகும். அதில் Expert Advisor என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்துவிட்டு Next கொடுங்கள்.

அடுத்த பாக்சில், Name என்றப் பகுதியில் experts/ என்பதற்கு அடுத்து உங்களது ரோபட்டுக்கான பெயரினைக் கொடுத்துக் கொள்ளுங்கள். நான் Sivam எனப் பெயரிட்டுள்ளேன்.

Author என்றப் பகுதியில் புரோக்கிராம் எழுதுபவராகிய உங்களது பெயரினைக் கொடுத்துக் கொள்ளுங்கள். (Selva Athithan K)

link என்றப் பகுதியில் உங்களது வெப்சைட் லிங் கொடுத்துக் கொள்ளலாம், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் (http://www.padugai.com)

Parameters என்கிற பகுதிக்குள் நமக்குத் தேவைப்படும் இன்புட் டேட்டாக்களை வரையறுத்துக் கொள்ளலாம். அதற்கு வலப்பக்கம் உள்ள் Add என்றப் பட்டனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒர் ஆர்டர் போடுகிறோம் என்றுச் சொன்னால், அதில் முதன்மையாக நாம் குறித்துக் கொள்வது லாட் சைஸ். லாட் சைஸ் 1.0 , 0.02,0.1 என தசம எண்களில் குறிக்கப்படலாம் என்பதால் அதனை Double என்ற டேட்டா டைப்புக்குள் வரையறுத்துள்ளேன்.

மற்றொரு முக்கிய காரணியான, டேக் பிராபிட் & ஸ்டாப் லாஸ் ஆகியவை பாயிண்ட் முறையில் இங்கு குறித்துள்ளேன். ஆகையால் எண் டேட்டா டைப்பான Int டைப்புக்குள் கொடுத்துள்ளேன்.

டேக் பிராபிட் பகுதியில் 100 பாயிண்ட் கொடுத்துக் கொள்ளுங்கள். ஸ்டாப் லாஸ் பகுதியில் 60 பாயிண்ட் கொடுத்துக் கொள்ளுங்கள். (படத்தில் குறைவாக உள்ளது, நீங்கள் சரியாக கொடுத்துக் கொள்ளுங்கள்)

EUR/USD என்ற கரன்சி விலை 1.12156 என்று ஐந்து தசமப் புள்ளிகளைக் கொண்டிருந்தால், அதனை 112156 பாயிண்ட் என்று குறிப்பிடலாம். நமது ஆர்டர் சிங்கில் ஸ்டிக் கொண்டது என்பதால், அதற்குத் தகுந்தாற்போல் மிகக் குறைவாக 50 பாயிண்ட் டேக் பிராபிட் & 30 பாயிண்ட் ஸ்டாப் லாஸ் என கொடுத்தால் ரோபட் இயக்கம் புரோக்கர் ஸ்டாப் லெவல் கண்டிசனால் இயக்கம் பாதிக்கப்படும். இதனை வர்த்தகத்தின் போது ரோபட் இன்புட் பகுதியில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்றாலும், ஆரம்பத்திலேயே குறைந்தப்பற்றம் 60 பாயிண்ட் பிராபிட்/லாசில் வைக்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.

சிலிப்பேஜ் என்பது பாயிண்ட் முறையில்தான் கொடுத்துள்ளேன். சிலிப்பேஜ் என்பது 112156 என்ற விலையில் ஆர்டர் புக் செய்ய ரோபட் சொல்லும் பொழுது விலை 112145 என 11 பாயிண்ட் குறைந்துவிட்டது என்றுச் சொன்னாலும் ஆர்டர் புக் செய்து கொள்ள எதுவாகத்தான் 30 பாயிண்ட் சிலிப்பிங் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு நொடியும் விலை மாறிக் கொண்டே இருப்பதால், நாம் ஆர்டர் புக் சொல்லச் சொல்கிற விலையிலிருந்து மேலேயோ, கீழேயோ 30 பாயிண்ட் கூட குறைய மாற்றம் ஆகியிருந்தாலும் ஆர்டர் புக் செய்துவிட கேட்டுக் கொள்வதற்காக சிலிப்பேஜ் கொடுக்கப்படுகிறது.

அடுத்ததாக மேஜிக் நம்பர். இது ரோபட்டுக்கு நாம் கொடுக்கும் ஒர் நம்பர். ஒரே நேரத்தில் இரண்டு ரோபட், மற்றும் மேனுவல் ட்ரேடிங் என பல ஆர்டர்கள் ஒபன் செய்து கொண்டிருந்தால், அந்த நேரத்தில் இந்த ரேபட் மூலம் ஒபன் ஆன ஆர்டர்களை மட்டும் பிரித்தெடுப்பதற்காகவும், சில கட்டளைகளை கொடுத்துக் கொள்ளவும், மேஜிக் நம்பர் பயன்படுகிறது. ஆகையால், ஒவ்வொரு ரோபட்டுக்கும் தனித்தனி நம்பர் குறிப்பிட்டுக் கொள்ளலாம். எனது சிவம் ரோபட்டுக்கு நான் 32100 என்ற எண்ணைக் கொடுத்துள்ளேன். இதுவும் இண்டிஜர் டேட்டா டைப்.

நமது புரோக்கிராம்க்கு தேவையான இன்புட் டேட்டா வரையறை செய்தாகிவிட்டது.. அடுத்து Next கொடுங்கள்.

அடுத்தும் டிக் செலக்சன் பாக்ஸ் வரும், அதில் தேவையானது மட்டும் செலக்ட் ஆகியிருக்கும் என்பதால் அப்படியே அடுத்து நெக்ஸ்ட் கொடுத்துவிடுங்கள்.

அடுத்து வருவதிலும் தேவையானது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், அப்படியே Finish கிளிக் செய்துவிடுங்கள்.

பினிஸ் கிலிக் செய்தவுடன், கொடுக்கப்பட்ட இன்புட்களை மையமாகக் கொண்டு புரோக்கிராமுக்குத் தேவையான அடிப்படை பங்சன் கோடிங்குடன் ஒர் விண்டோ ஒபன் ஆகும். இதில் புரோக்கிராம் மூன்று முக்கியப் பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.

1. Expert initialization function - OnInit ()
ரோபட்டினை நாம் ஒர் சாட்டுக்குள் ட்ரேடுக்காக புகுத்தும் பொழுது, ரோபட் தன்னைத் தயார்படித்தும் பணியினை இந்த பங்கசன் செய்கிறது.

2. Expert deinitialization function - DeInit ()
ரோபட்டினை நாம் ஒர் சாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளும் பொழுது, ரோபட் தனது பணியினை முடித்து வெளியேறுவதற்காக தன்னை தயார்படுத்தி வெளியேற்றும் செயலை இந்த பங்கசன் செய்கிறது.

3. Expert tick function - OnTick ()
ஆன் டிக் பங்சன் என்பது ஒவ்வொரு நொடியும் விலை மாற்றம் நடைபெறுவதற்கு ஏற்ப, புதிய அப்டேட் விலையினைக் கொடுத்து, நிகழ்வில் வர்த்தகத்திற்கு உதவும் பணியினைச் செய்கிறது. ஆகையால், நமது வர்த்தக ஆர்டர் புரோக்கிராம் கோடிங் ஆன் டிக் பகுதிக்குள் தான் கொடுக்கப்படும்.

புரோக்கிராம்க்கு உதவியாக அவர்கள் பல பங்சன் கொடுத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒர் ஆர்டர் போடுவதற்கு OrderSend() என்ற டிபால்ட் பங்கசன் நமக்கு உதவுகிறது. இது போக நமக்கு தேவையான பங்கசனையும் நாம் கோடிங்கில் எழுதிக் கொள்ளலாம். அதனை மேல் குறிப்பிட்ட மூன்று மெயின் பகுதிக்கும் கீழாக அடியில் எழுதிக் கொள்ள வேண்டும்.

மேல் கூறியவை விவரமாக விடியோவில் பாருங்கள்,

[youtube]https://www.youtube.com/watch?v=NX9m7PsWppQ[/youtube]

ஒகே.. அடுத்து நமது சிவம் ரோபட் எழுதும் பணியினை செய்வோம்.
Image
நம் சிவம் ரோபட்டின் லாஜிக், கடைசியாக முடிந்தக் குச்சி காளையில் முடிந்தால், அடுத்து நிகழப்போவதும் காளை. அல்லது கரடியில் முடிந்தால் கரடி.

லாஜிக்கினை எவ்வாறு சார்ட் கண்டிசனில் பார்ப்பது என்பதற்கான விளக்கத்தினை முதலில் மேல் உள்ள சார்ட் படத்தினைப் பாருங்கள். லாஜிக்கைப் புரிந்து கொண்டோம் என்றுச் சொன்னால் எளிதில் புரோக்கிராம் எழுதிவிடலாம்.

மேலே வலப்பக்கத்திலிருந்து 0, 1, 2, 3 என வரிசைப்படி சார்ட்டில் உள்ள கேண்டில் ஸ்டிக்குகளுக்கு வரிசை எண் கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் உள்ள அக்டிவ் கரண்ட் பிரைஸ் ஸ்டிக்கிற்கு பூஜ்ஜியம் என வரிசை எண் ஆரம்பம் ஆகிறது. அதற்கு அடுத்ததாக இடப்பக்ம் இருக்கும் ஸ்டிக் தான் கடைசி ஸ்டிக், இதற்கு வரிசை எண் ஒன்று ஆகும்.

கடைசி ஸ்டிக் காளை என்றால் அடுத்து நிகழப்போவது காளை என்பது லாஜிக். அப்படியானால், நாம் முதலில் கடைசி ஸ்டிக் காளையா? என்று பார்க்க வேண்டும். கடைசி ஸ்டிக் காளை என்றால் பை ஆர்டர் ஒபன் செய்ய ரோபட்டுக்கு கட்டளை இட வேண்டும். அவ்வாறு காளை இல்லை என்றால் கரடியாக இருக்கும், செல் ஆர்டர் போட கட்டளை பிறப்பிக்க வேண்டும், அவ்ளதான்.

காளையா? என்பதனை பரிசோதிக்க நமக்கு கடைசி ஸ்டிக்கின் ஒபன் பிரைஸ் & குலோஸ் பிரைஸ் தெரிந்தால் போதும். மெட்டா க்வோட் லேங்குவேஜில் Open[n] என்ற array function ஒர் ஸ்டிக்கின் ஒபன் பிரைஸ் பெற்றுக் கொள்ள உதவுகிறது. அதைப்போல், Close[n] என்ற பங்கசன் குலோஸ் பிரைஸ் பெற்று கொள்ள உதவுகிறது.

ஒர் ஸ்டிக் காளை என்பதனை உறுதி செய்ய 12 வது காளை குச்சியினை படத்தில் பாருங்கள். இதில், குளோஸ் பிரைஸ் என்பது ஒபன் ப்ரைஸ் காட்டிலும் பெரியது. அப்போ, ஒர் குச்சி காளை என்பதற்கான லாஜிக் கிடைச்சிடுச்சி.. இந்த லாஜிக்கினை ஸ்டிக் ஒன்றில் அப்ளே செய்தால், நிகழ இருக்கிற பூஜ்ஜியம் ஸ்டிக்கில் ஆர்டர் ஒபன் பண்ணிக் கொள்ளலாம்.

நமது வர்த்தக கோடிங்கினை எப்பொழுதும் ஆன்-டிக் பங்க்சனுக்குள் தான் எழுத வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

நம்ம ரோபட் லாஜிக் கோடிங்,

Code: Select all

void OnTick()
 {
//-----
  if(Close[1] > Open[1] )
  {
   //Open Buy Order
  }
  else
  {
   //Open Sell Order
  }
//--- 
 }
if கண்டிசன் மூலம் குளோஸ் ஒன்று, ஒபன் ஒன்றைக் காட்டிலும் பெரியதா என்று பரிசோதிக்கிறோம், ஆம் என்றால் ஒபன் பை ஆர்டர்... இல்லை else என்றால் செல் ஆர்டர் செய்யச் சொல்கிறோம்.

கோடிங்கில் //--- ... என டபுள் ஸ்லஷ் போட்டு அடுத்து எழுதுவது கோடிங்காக எடுத்துக் கொள்ளப்படாது, அது புரோக்கிராமர்க்கான குறிப்பாக எடுத்துக் கொள்ளப்படும். மேல் உள்ள கோடிங்கிலும், //Open Buy Order என டபுள் ஸ்லஷ்-உடன் கொடுத்திருப்பது குறிப்புக்காக. அடுத்து, ஆர்டர் புக் செய்வதற்கான கோடிங்கினை பார்க்கலாம்.

OrderSend(_Symbol,OP_BUY,TradeLot,Ask,Slippage,Ask-StopLoss*_Point,Ask+TakeProfit*_Point,"BUY_Sivam",MagicNumber);

OrderSend Function தான் புரோக்கர்க்கு ஆர்டர் புக் செய்வதற்கான தகவலை அனுப்பி ஆர்டரை புக் செய்ய உதவுகிறது. மேல் உள்ள கோடிங் எல்லாம் நீங்கள் ரொம்பப் படிக்க வேண்டாம், அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி பயன்படுத்திக் கொள்ளுங்கள், அவ்ளதான். ஆனால், அதில் கொடுக்கப்பட்டிருப்பவை எதற்காக, இதில் நமக்கான மாற்றமிருந்தால் மாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆர்டர் செண்ட் பங்கசனில் உள்ளிருக்கும் டேட்டா பார்க்கலாம்.

_Symbol = ஆர்டர் எந்த கரன்சியில் போடுதல் வேண்டும் என்பதனை ரோபட் இருக்கும் சார்ட்டிலிருந்து தானாகவே எடுத்துக் கொள்ளும் டிபால்ட் பங்கசன்.
OP_BUY = open a buy order எனும் கட்டளை. sell order என்றால் OP_SELL

TradeLot = இன்புக் பாக்சில் குறிப்பிட்ட லாட் சைஸ்.
Ask = the current Ask price. பேங்க் வழங்கும் வாங்கல் கோரிக்கை விலை (use Bid for a sell order)
Slippage = self-explanatory (மேல் நாம் வரையறுத்த சிலிப்பேஜ்)

StopLoss = ஸ்டாப் பிரைஸ் 5 தசம எண்ணாக இருக்க வேண்டும் என்பதற்கான சிஸ்டன் டிபைன் வேரியபுல் ஆன _Point உடன் பெருக்கி கொடுத்துள்ளோம்.. அத்தோடு, ஸ்டாப் லாஸ் என்றால் ஆர்டர் விலைக்கு கீழ் என்பதால் Ask லிருந்து கழித்து கொடுக்கிறோம். இதைப்போல் செல் ஆர்டர் என்றால் ஸ்டாப் லாசிற்கு Bid எனக் குறிப்பிட்டுக் கொள்வதோடு, பாயிண்டினைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

TakeProfit = ஸ்டாப் லாஸ் மாதிரி, அப்படியே எதிர்மறையா பை ஆர்டர் & செல் ஆர்டர்க்கு மாற்றிக் கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
Comment = நமது வசதிக்காக கொடுக்கும் குறிப்பு.
MagicNumer = கடைசியாக நமது ரோபட் MagicNumber.

ஒகே, இப்போ ஆன்-டிக் கோடிங் பாருங்கள்,

Code: Select all

void OnTick()
 {
//-----
  if(Close[1] > Open[1] )
  {
   //Open Buy Order
   OrderSend(_Symbol,OP_BUY,TradeLot,Ask,Slippage,Ask-StopLoss*_Point,Ask+TakeProfit*_Point,"BUY_Sivam",MagicNumber);
  }
  else
  {
   //Open Sell Order
   OrderSend(_Symbol,OP_SELL,TradeLot,Bid,Slippage,Bid+StopLoss*_Point,Bid-TakeProfit*_Point,"SELL_Sivam",MagicNumber);
  }
//--- 
 }

இப்போ இந்த கோடிங்கினை கம்பைல் பண்ணிவிட்டு, ட்ரேடிங் சார்ட்டில் விட்டால், ஆர்டர் புக் செய்ய ஆரம்பித்துவிடும். :rock:

ஆனால், கொஞ்சம் அதிகம் சிந்தனை செய்வோம். நாம் மேல் கொடுத்திருக்கிற கோடிங் என்பது, முந்தைய ஸ்டிக் என்ன என்று செக் செய்துவிட்டு, அதே டைப் ஆர்டர் டேக் பிராபிட் & ஸ்டாப் லாசுடன் புக் செய்யச் சொல்கிறோம். ஆகையால், ஒவ்வொரு நொடியும் பிரைஸ் மாறுதல் ஆகி, ஆன் டிக் பங்சன் அழைக்கப்படும் பொழுது எல்லாம் ஆர்டர் ஒபன் ஆகிக் கொண்டே இருக்கும். ஒன் மினிட் - ஒர் ஸ்டிக்கில் கூட 5 ஆர்டர் ஒபன் ஆகிவிடும். ஆகையால் அதனை கட்டுப்படுத்த புதியதாக கண்டிசனைப் போட்டு, நமது ரோபட்டினை கன்ட்ரோல் செய்யலாம், ஒகே.

நாம் ஏற்கனவே ரோபட்டினை மேஜிக் நம்பர் வைத்து ஐடண்டிபிகேசன் பண்ணி வைச்சிருக்கோம். அதனைக் கொண்டே, நம் ரோபட்டால் எத்தனை ஆர்டர் ஒபன் ஆகியிருக்கு?? ஆர்டர் 1 ஒபன் ஆகியிருந்தால், புதியதாக ஆர்டர் ஒபன் செய்யக்கூடாது. ஆர்டரே ஒபன் ஆகவில்லை, அல்லது ஒபன் பண்ணிய ஆர்டர் குலோஸ் ஆகிவிட்டது என்றால் புதிய ஆர்டர் ஒபன் செய்யலாம் என்பதற்கான கோடிங் பங்க்சன் பார்க்கலாம்.

TotalOpenOrderbySivam() என்ற புதிய பங்கசன் கோடினை, டிபால்ட் கோடிங்கிற்கு எல்லாம் கீழே அடியில் எழுதிக் கொள்ளுங்கள்.

Code: Select all

int TotalOpenOrdersbySivam()
{
  int total_orders = 0;

  for(int order = 0; order < OrdersTotal(); order++) 
  {
   if(OrderSelect(order,SELECT_BY_POS,MODE_TRADES)==false) break;

   if(OrderMagicNumber() == MagicNumber && OrderSymbol() == _Symbol)
     {
      total_orders++;
     }
  }

  return(total_orders);
}
இங்கு எண் மதிப்பில் வரக்கூடிய வேரியபுல் எல்லாம் int என்று டிபைன் செய்து கொள்ளப்படுகிறது. அடுத்து, for loop பயன்படுத்தித்தான் ஒபன் ஆகியுள்ள அனைத்து ஆர்டர்களிலிருந்தும், நமது மேஜிக் நம்பர் கொண்ட ஆர்டரினை மட்டும் பிரித்தெடுக்கிறோம். அதுமட்டுமில்லாமல் மொத்தம் எத்தனை ஆர்டர்கள் ஒபனில் உள்ளன என்பதனை தெரிவிக்கும் OrdersTotal() என்ற டிபால்ட் பங்க்சனை பயன்படுத்தி, அதிலிருந்து ஒவ்வொன்றாக ஒபனில் இருக்கும் ஆர்டரா என்று வரிசையாக செக் செய்து பின்னர், OrderMagicNumber() = நமது மேஜிக் நம்பர் உள்ளதா? OrderSymbol() நாம் பயன்படுத்திய கரன்சியா? என சரிபார்த்து பிரித்தெடுக்கிறோம்.

பிரித்தெடுத்தப் பின்னர் மொத்தம் எவ்வளவு ஆர்டர் உள்ளது என்பதனை TotalOpenOrdersbySivam() ஆக பெற்றுக் கொள்கிறோம்.

மீண்டும் ஆன்-டிக் ஏரியாவில் ஆர்டர் செண்ட் செல்வதற்கான கண்டிசனை TotalOpenOrdersbySivam() என்பதனை பூஜ்ஜியமாக இருந்தால் மட்டும் செய் என்றவாறு மாற்றிவிடுவோம். இதன் மூலம், ஒர் ஆர்டர்க்கு மேல் அடுத்த ஆர்டர் ஒபன் செய்ய வேண்டும் என்றால், ஏற்கனவே ஒபன் ஆகிய ஆர்டர் ஸ்டாப் லாஸ் / டேக் பிராபிட் மூலம் குளோஸ் ஆகியிருக்க வேண்டும். அல்லது நாம் குலோஸ் செய்துவிட்டால், அடுத்த புதிய ஆர்டர் ஒபன் ஆகும்.

தற்போதைய ஆன் டிக் கோடிங்,

Code: Select all

void OnTick()
 {
//-----
if(TotalOpenOrdersbySivam() == 0)
{
  if(Close[1] > Open[1] )
  {
   //Open Buy Order
   OrderSend(_Symbol,OP_BUY,TradeLot,Ask,Slippage,Ask-StopLoss*_Point,Ask+TakeProfit*_Point,"BUY_Sivam",MagicNumber);
  }
  else
  {
   //Open Sell Order
   OrderSend(_Symbol,OP_SELL,TradeLot,Bid,Slippage,Bid+StopLoss*_Point,Bid-TakeProfit*_Point,"SELL_Sivam",MagicNumber);
  }
 }
//--- 
}
மேல் எழுதப்பட்ட கோடிங் விவரங்களை விடியோவில் பார்த்தால் மிக எளிதாகப் புரியும், பார்க்க

[youtube]https://www.youtube.com/watch?v=vjLLJzwsbSQ[/youtube]

கோடிங் எழுதும் பொழுது, மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது... { மற்றும் ( பிராக்கட் எல்லாம் சரியாக குலோஸ் செய்திருக்க வேண்டும். ஆகையால், லூப் , கண்டிசன் மற்றும் பங்க்சன் பயன்படுத்தும் தொடங்கும் பிராக்கெட் எல்லாவற்றினையும் சரியாக குளோஸ் செய்துவிடுங்கள்.

எழுதிய புரோக்கிராமை காப்பி பேஸ்ட் செய்வதில் கூட தவறு செய்ததன் விளைவாக, கம்பைல் செய்த பொழுது எரர் வந்துவிட்டது.. பின்னர் பார்த்தால், டோட்டல் ஆர்டர் கண்டுபிடிப்பதற்கான கூடுதல் பங்கசன் சரியாக மூடப்படவில்லை மற்றும் பங்கசனுக்கான ரிட்டர் மதிப்பினையே குறிப்பிடவில்லை. இப்படி தவறு செய்யாமல் இருக்க, மிக கவனத்துடன் ஒவ்வொரு லைனையும் சரிபார்த்து செய்யுங்கள்.

இந்த கோடிங்க் விவரத்தினை விடியோவாக கீழ் கொடுத்துள்ளேன் பாருங்கள், விடியோவில் மிக எளிதாக உடனே புரிந்து கொள்ள முடியும்.

[youtube]https://www.youtube.com/watch?v=c6oxKl1Prl0[/youtube]

அடுத்ததாக இந்த ரோபட்டினை மேலும் மெருகேற்றும் விதமாக கூடுதலாக இரண்டி கண்டிசன் கொடுக்கப் போகிறோம். 1. ஆர்டர் ஒபன் என்பது புதியதாக ஒர் ஸ்டிக் ஒபன் செய்யும் பொழுது மட்டும்தான். 2. எத்தனை கரடி ... எத்தனை காளை தொடர்ச்சியாக முன்பு நடந்திருக்க வேண்டும் என்பதனை இன்புட் பெறுவது. மேல் நாம் முந்தைய ஒர் ஸ்டிக் மட்டும் பார்த்தோம், இப்போ, எத்தனை ஸ்டிக்கினை வேண்டும் என்றாலும் தொடர்ச்சிக்கு பயன்படுத்தும் விதமாக புரோக்கிராமினை அப்டேட் பண்ணப்போகிறோம்.

Forex Free Robot Download

Sivam 1.0.1 Code Link - Click Download


Robot புரோக்கிராம் எழுதி வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து, சில ஆர்டர்கள் ரன் பண்ணியும் பார்த்தாச்சு... அடுத்து, அதில் என்னென்ன கண்டிசன் போட்டால், சிறப்பாக செயல்படும் என்ற சிந்தனையில், ஒர் கேண்டில்ஸ்டிக் ஒபன் ஆச்சுன்னா... அதில் ஒர்முறை தான் ஆர்டர் ஒபன் ஆக வேண்டும். அடுத்த ஆர்டர் என்பது புதிய கேண்டில்ஸ்டிக்கில் தான் ஒபன் ஆக வேண்டும் என்பதற்கான கண்டிசனை பார்க்க இருக்கிறோம்.

1 மணி நேர கேண்டில் ஸ்டிக்கில், ஒர் ஆர்டர் ஒபன் ஆகி, அந்த ஸ்டிக் நேரத்திலேயே குளோஸ் ஆகிவிட்டது என்றால், உடனே புதிய ஆர்டர் அந்த கேண்டில் ஸ்டிக்கில் ஒபன் ஆகிவிடுதல் கூடாது. அடுத்த புதிய கேண்டில் ஒபன் ஆனப்பின்னர் தான் புதிய ஆர்டர் திறக்க வேண்டும். ஏனெனில், ஒர் ஸ்டிக்கினை கணக்கீடு செய்து ஆர்டர் போடும் நமக்கு, ஸ்டிக்கின் ஆரம்ப நிலையில் ஆர்டர் திறந்தால் தான் ஹை லோ வில் ஒர் இலாபம் கிடைப்பது எளிதாகும்.

புதிய கேண்டிலை கண்டுபிடிக்க நமக்கு நேரம் உதவுகிறது. ஒவ்வொரு கேண்டில் ஸ்டிக்கும் ஒர் கால நேரத்தினை கொண்டிருக்கும். நாம் ஏற்கனவே ஒர் ஸ்டிக்கின் குலோசிங் விலை, ஒபன் விலை அர்ரே பங்கசன் மூலம் பெற்றுக் கொண்டது போல, நேரத்தினை டைம் என்ற அரே பங்கசன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Code: Select all

// Find it, a new candle stick
bool NewCandle()  
{    
   static datetime PreCandleTime=0;
   datetime ActiveCandleTime = Time[0];

   if (ActiveCandleTime == PreCandleTime)
   {
     return(false);
   }
   else
   {
     PreCandleTime = ActiveCandleTime;
     return(true);
   }
}  
புதிய கேண்டிலை கண்டுபிடிப்பதற்கான NewCandle() என்ற நம் கூடுதல் பங்சனை அனைத்திற்கும் அடியில், கூடுதல் பங்கசன் எழுதும் பகுதியில் எழுதிக் கொள்ளுங்கள்.. இதில் NewCandle() என்ற பங்கசன் மூலம் நமக்கு கிடைக்கும் பதில் true or false . ஆகையால் இதனை bool என்ற டேட்டா டைப்பில் குறித்துக் கொள்கிறோம்.

static datetime PreCandleTime=0;

datetime என்பது நேரத்தினைக் குறிக்க பயன்படுத்தியுள்ளோம். Previous cand time வந்து பூஜ்ஜியம் என்பதனை நிலையானது எனக் குறித்துள்ளதால், ரோபட்டினை இன்ஸ்டால் பண்ணியதும், இந்த வேல்யூவினை எடுத்துக் கொள்ளும். ஆனால் அடுத்தடுத்து உள்ளே பங்கசன் வொர்க் ஆகும் பொழுது நாம் மதிப்பினை மாற்றி அக்டிவ் கேண்டில் மதிப்பினைக் கொடுத்து, புதியது வரும் பொழுது இதனோடு ஒப்பிட்டு கண்டுபிடிக்க உதவும் கோடிங்தான் கீழே உள்ளது.

அக்டிவ் கோண்டில் டைம் என்பது Time[0] என்ற அரே மூலம் சரியாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால், முதல்முறை If கண்டிசனுக்குள் செல்லும் பொழுது கண்டிப்பாக சமமாக இருக்காது, ஏனெனில் பிரிவிகேண்டில்டைம் 0 என கொடுத்துள்ளோம். ஆகையால் தவறு என எல்ஸ் கண்டிசனுக்குள் செல்லும் பொஃஸ்ழுது, ப்ரிவியஸ் கேண்டில் டைமினை அக்டிவ் டைம் மதிப்பினைக் கொடுத்து மாத்திவிடுகிறோம்.. அதோடு, ரிட்டர் வேல்யூ true என்றும் பெற்றுக் கொள்கிறோம்.

மீண்டும் இந்த லூபுக்குள் வரும் பொழுது, அக்டிவ் டைம் , ப்ரிவியஸ் டைம்-க்கு மாற்றப்பட்டிருக்கும். அதே நேரத்தில் புதிய கேண்டில் ஒபன் ஆகிவிட்டால், அக்டிவ் டைம் Time[0] மாற்றம் ஆகும்.. அல்லது பழையதிலேயே இருக்கும்.. ஆக, கேண்டில் மாறும் பொழுது உருவாகும் புதிய டைம் கொண்டு சரியாக புதிய கேண்டிலில் ஆர்டர் ஒபன் ஆகும்.

நீயூ கேண்டில் என்பதன் கோடிங் எழுதியாச்சி... அதனை சரியாக ஆன்டிக் ஏரியாவில் பயன்படுத்திக் கொள்ளுவதற்கான புதிய கண்டிசனை TotalOpenOrdersbySivam() == 0 என்பதோடு சேர்த்து, நியூ கேண்டில் தானா? என்ற கேள்வியினையும் புகுத்தி லைன் எடிட் பண்ணிடுவோம்.

if(TotalOpenOrdersbySivam() == 0 && NewCandle() == true)

OnTick fucntion பகுதியில் முதல் இப் கண்டிசனை மேல்கண்டவாறு மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

தற்போதைய ஆன்டிக் கோடிங்:

Code: Select all

void OnTick()
 {
//-----
if(TotalOpenOrdersbySivam() == 0 && NewCandle() == true)
{
  if(Close[1] > Open[1] )
  {
   //Open Buy Order
   OrderSend(_Symbol,OP_BUY,TradeLot,Ask,Slippage,Ask-StopLoss*_Point,Ask+TakeProfit*_Point,"BUY_Sivam",MagicNumber);
  }
  else
  {
   //Open Sell Order
   OrderSend(_Symbol,OP_SELL,TradeLot,Bid,Slippage,Bid+StopLoss*_Point,Bid-TakeProfit*_Point,"SELL_Sivam",MagicNumber);
  }
 }
//--- 
}
Image
சிவம் - தொடர் வண்டி:

மிக எளிமையாக ஒர் செயலினை இரண்டு நிகழ்வுகளைக் கொண்டு ஒர் பாரக்ஸ் ரோபட்டினை வடிவமைத்து இயக்கம் கொடுத்துவிட்டோம். அடுத்ததாக மிக முக்கியமான ஒர் நிகழ்வினை இந்த ரோபட் செயல்பாட்டுக்குள் கொண்டு வருகிறேன். அது என்னவெனில், ரோபட்டின் லாஜிக்காக முந்தைய கேண்டில் ஸ்டிக் என்னவோ அதுவே ஆர்டர் வகை என்று குறிப்போட்டோம். இப்பொழுது, ரோபட்டினை பயன்படுத்துபவர்கள் தங்களது விருப்பப்படி, முந்தைய ஒர் ஸ்டிக் மட்டும் அல்லது, அடுத்த இரண்டு ஸ்டிக்கும் ஒரே வகை கேண்டிலாக இருந்தால்.. அல்லது முந்தைய மூன்று கேண்டில் ஒரே வகையாக இருந்தால், அதே வகை ஆர்டரினை செயல்படுத்துதல் என்ற கண்டிசனை உள்புகுத்துகிறோம்.

அதாவது, பச்சையை குறிக்கும் பை ஆர்டர் என எத்தனை கேண்டில் சரிபார்க்க வேண்டும் என்று பயன்பாட்டாளர் உள்ளீடு கொடுப்பது மூன்றாக இருந்தால் தொடர்வண்டி போல, பச்சையாகவே முந்தைய கடைசி மூன்று ஸ்டிக்கும் இருந்தால் பை ஆர்டர் ரோபட் ஒபன் செய்யும். அல்லது முந்தைய கடைசி மூன்றும் சிகப்பாக இருந்தால் செல் ஆர்டர் ஒபன் செய்யும்.

மூன்று என்பதற்கு பதில் இரண்டு அல்லது நான்கு என விரும்பியபடி நாம் உள்ளீடு கொடுத்துக் கொள்ளலாம்.. பொதுவாக மூன்றாவது ஸ்டிக்கிலேயே உள் இறங்கிவிட்டால்.. ஐந்தாவது ஆறாவது ஸ்டிக்கில் இலாபம் பார்த்துவிடலாம். ஆகையால், ட்ரண்ட் திருப்பம் என்ற ரீதியில் மூன்று ஸ்டிக் சரிபார்ப்பது நன்றாக அமையும் என்ற நோக்கத்தில் நான் தற்பொழுது ரோபட்டினை அடுத்தக்கட்ட வளர்ச்சியில் உருவாக்கிவிட்டேன்.

எத்தனை கேண்டில் சரிபார்க்க வேண்டும் என்ற நமது உள்ளீடுக்கு ஏற்ப ஆர்டர் டைப்பினை ரோபட் தேர்ந்தெடுப்பதற்காக While loop பயன்படுத்தி order_type() என்ற கூடுதல் பங்கசனை எழுதியுள்ளேன். கோடிங் கீழ் பார்க்க .. இதனை பாட்டத்தில் எழுதிக் கொள்ளுங்கள்...

Code: Select all

//find order type
int order_type()
{
 int o_type = 0;
 int n = Stick;
if(Close[1] > Open[1] )
{ 
  //buy 

  while ( n > 0 )
   {
    if (Close[n] > Open[n] )
     { 
      n--;
     }
   else
     { break; }
   }
   if(n==0)
   {
   o_type = 1;
   return (o_type);
   }
}
else
{
//sell
   while ( n > 0 )
   {
    if (Close[n] < Open[n] )
     { 
      n--;
     }
   else
     { break; }
   }
   if(n==0)
   {
   o_type = -1 ;
   return (o_type);
   }
}
   return (o_type);
}
கோடிங் பார்ப்பதற்கு நீளமாகத் தெரியும் ஆனால் லாஜிக் என்னவோ ரொம்ப எளிது. அதனை மெட்டா க்வோட் லேங்குவேஜில் எழுதுவதற்கான முறைப்படி எழுதும் பொழுது கொஞ்சம் நீளம், அவ்ளதான்.

மேல் எழுதிய கோடிங்கின் லாஜிக்கினை சொல்கிறேன் கேளுங்கள். ஆர்டர் டைப் என்ன என்பதனை மூன்றாக பிரித்துக் கொண்ட்டேன்.. ஒன்று பூஜ்ஜியம்.. அதாவது ஆர்டர் கிடையாது. இரண்டாவது ஒன்று, பை ஆர்டர், மூன்றாவது மைனஸ் ஒன்று - செல் ஆர்டர்.

பை ? அல்லது செல்? என்பதனை எத்தனை கேண்டில் ஸ்டிக் சரிபார்க்கச் சொன்னாலும் தானாகவே லூப் மூலம் கண்டுபிடிப்பது என்பதனை புரிந்து கொள்வதுதான் இங்கு மிக முக்கியம். எத்தனை கேண்டில் என்பதனை N என்று வைத்துக் கொள்வோம்.. அது ஐந்தாக இருக்கலாம்... மூன்றாக இருக்கலாம்.. ஒன்றாக இருக்கலாம்... எத்தனை கொடுத்தாலும், சரியாக அத்தனை கேண்டில் ஸ்டிக்கினையும் சரிபார்த்து ஆர்டர் போடனும்.. அதுதான் புரோக்கிராம். ஒகே..

முதலில் நான் முன்பு பயன்படுத்திய if...else... கன்றோல் ஸ்டேட்மெண்ட் பயன்படுத்தி, பை ஆர்டர்க்கான லூப், செல் ஆர்டர்க்கான லூப் என பிரித்துவிட்டேன்.

பின்னர், While கண்டிசன் லூப் ஸ்டேட்மெண்ட் பயன்படுத்தி, எத்தனை ஸ்டிக் சரிபார்க்க வேண்டுமோ அத்தனையும் சரிபார்த்து ரிசல்ட் எடுத்துக் கொண்டேன்... அவ்ளதான்... சரி என்றால் என்ன செய்ய வேண்டும், தவறென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதனை தெளிவாக கொடுத்தாவிட்டால் என்ன டைப் ஆர்டர் என்பதற்கான விடை கிடைத்துவிடும். இதில் n-என்பது 3 வைத்துக் கொண்டு முதல் கேண்டில்ஸ் என ஒவ்வொரு கேண்டிலையும் சரியாக சரிபார்த்து, தொடர்ச்சியாக மூன்று கேண்டில் சரிபார்த்து மூன்றும் ஒரே டைப்பில் இருந்தால், அதே டைப்பில் ஆர்டர்... ஒன்று மாறி இருந்தாலும், ஆர்டர் வாய்ப்பு இல்லை என்று திரும்பிட வேண்டும்.. இதனைத்தான், ப்ரேக் என்றுச் சொல்லி வெளியேற்றுகிறேன். அப்புறம் முக்கியமாக, கேட்ட அத்தனை ஸ்டிக்கினையும் வொயில் லூப்பில் சரிபார்த்தாயா? என இப் கண்டிசன் மூலம் சரிபார்த்துவிட்டு ஆர்டர் டைப் கொடுக்கிறோம்.

இந்த விவரங்களை விடியோவில் பாருங்கள் தெளிவாக புரியும்... ஏதேனும் விவரம் தேவைப்படினும் சரியாக கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும்.

ஒகே, ஆர்டர் டைப் என்ன என்று பங்சன் மூலம் கண்டுபிடித்துவிட்டோம். அடுத்து அதனை, சரியாக ஆன்டிக் பகுதியில் பயன்படுத்துவதற்கான கோடிங்கினை Switch Statement மூலம் OrderSend() பங்சனை மாற்றி எழுதிவிட்டேன்.

தற்போதைய ஆன்டிக் பகுதி கோடிங்:

Code: Select all

void OnTick()
 {
//---
  if(TotalOpenOrdersbySivam() == 0 && NewCandle() == true)
{
  switch (order_type()) {
 case 1:
  OrderSend(_Symbol,OP_BUY,TradeLot,Ask,Slippage,Ask-StopLoss*_Point,Ask+TakeProfit*_Point,"BUY_Sivam",MagicNumber);
  break;
 case -1:
  OrderSend(_Symbol,OP_SELL,TradeLot,Bid,Slippage,Bid+StopLoss*_Point,Bid-TakeProfit*_Point,"SELL_Sivam",MagicNumber);
  break;
 default:
  break;
 }
 }
 }
நாம் ஆர்டர்டைப் பங்சன் மூலம் ஆர்டர் டைப் என்பதனை பை =1 மற்றும் செல் = -1 என சரிபார்த்து பெற்றுவிட்டதால், அதனையே இங்கு Switch Statement இல் நிலை மதிப்பாகக் கொடுத்து, ஆர்டர் புக் செய்வதற்கான கோடிங் கொடுத்துள்ளேன்.. அதனை தவிர்த்து மற்ற மதிப்புகளுக்கு ஒர் ப்ரேக் போட்டு லூப்பிலிருந்து வெளியேற்றிவிட்டோம்.

எப்பொழுதும் லூப் எழுதும் பொழுது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், சின்னதாக கண்டிசனில் ஒர் பிழை செய்தாலும்... ரோபட் கடைசி வரைக்கும் அந்த லூப்புக்குள்ளேதான் சுற்றிக் கொண்டு இருக்கும்... உதாரணத்திற்கு நான் ஆர்டர் டைப் கண்டுபிடிப்பதற்கான லூப்பில் n-- என்று n என்பதன் மதிப்பினைக் குறைக்காவிட்டால், அது எப்பொழுதும் பூஜ்ஜியத்தினை விட பெரியதாக இருக்கும்.. அது பூஜ்ஜியத்தினைக்காட்டிலும் பெரிதாக இருக்கும் வரையில் என.. எப்பொழுதும் லூப் ஓடிக்கொண்டே இருக்குமே தவிர, அடுத்த ஸ்டெப்புக்குள் போகாது. ஆகையால், லூப்பில் சரியான கவனம் செலுத்துதல் வேண்டும்.

சிவம் ரோபட் தற்பொழுது, எத்தனை கேண்டில் வேண்டும் என்றாலும் சரிபார்த்து தொடர்ச்சியான வகையில் தொடர் வண்டியாக இருந்தால், அதற்கான ஆர்டர் புக் செய்யும் அளவிற்கு தரம் உயர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் உள்ளீடும் கொடுத்துவிட்டதால் ஆட்டோமெட்டிக்காக ஆர்டரினை ரோபட் ஒபன் செய்துவிடுவதோடு, தானாகவே ஆர்டர் குலோசும் ஆகிவிடும்... ஆர்டர் குலோஸ் ஆகிவிட்டால், அடுத்த ஆர்டரினை ரோபட் புக் செய்துவிடும்... ஆக நாம் ஆட்டோமெட்டிக் ட்ரேடிங் ரோபட்டினை எளிதாக உருவாக்கிவிட்டோம்.

சிவம் 1.1 தொடர் வண்டி கோடிங் கீழே உள்ளது டவுன்லோடிங் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Sivam 1.1 Forex Robot Download Code Link

தொடர்வண்டி புரோக்கிராம் கோடிங் விவரம் விடியோவாக கீழ் உள்ளது, பார்த்து மேலும் தெளிவடைந்து கொள்ளுங்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=Uc_xLEC40GI[/youtube]

Forex Robot Profit Report:
ரோபட் புரோக்கிராம் எழுதுவது என்பது எளிது, அதனைப்போல் ரோபட்டினை வெற்றிகரமாக பரிசோதனைக்கு உட்படுத்தி இலாபம் காட்டுவதும் மிக முக்கியம்.

Forex Robot-ஐ Strategy Tester இல் பரிசோதனை செய்து, ட்ரேடிங் லாஜிக் உத்தி எந்தளவுக்கு சரியாக கணிக்கப்பட்டுள்ளது என்பதனை ஐந்து நிமிடத்தில் ரிப்போர்ட் பார்த்துவிடலாம். Meta Trader ட்ரேடிங் ப்ளாட்பார்மில், View என்ற ஆப்சனுக்குள் சென்றால் Strategy Tester என்பது இருக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில், நமது ரோபட்டினைத் தேர்ந்தெடுத்து பரிசோதிக்கலாம்.

ரோபட்டினை பரிசோதனை செய்ய, எந்த கரன்சி சார்ட், என்ன டைம் பிரேம், காலம், மற்றும் ரோபட் இன்புட் என பல உள்ளீடுகளை மாற்றி மாற்றிக் கொடுத்து, ரிப்போர்ட் ஐந்து நிமிடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பரிசோதனை செய்வதன் மூலம் ரோபட் எத்தகைய சூழலில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஒர் ரோபட் புரோக்கிராம் சரியாக எழுதி முடித்துவிட்டால், அடுத்ததாக அதன் Strategy Tester Report கொடுத்தல் வேண்டும். நமது சிவம் ரோபட்டினையும் நாம் சரியாக எழுதி முடித்துவிட்டோம்... ட்ரேடிங் செயல்பாட்டினையும் சரிபார்த்துவிட்டோம். இப்பொழுது நமது யுக்தியின் செயல்பாடு கடந்த காலத்தின் வர்த்தக முடிவில் எவ்வாறு செயல்பட்டிருக்கும் என்பதனை பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காக நானும், பல்வேறு கரன்சி சார்ட்களில், பல்வேறு டைம் பிரேம் மாற்றியும், உள்ளீடுகளை மாற்றியும் பலவேறு முறைகளில் முயற்சித்தேன். ஆனாலும் ரிசல்ட் என்பது இலாபம் காட்டவில்லை. எந்தவொரு சார்ட் + டைம் பிரேமிலும் முந்தைய முடிவில் இலாபம் காட்டாத ரோபட்டினை எப்படி நம்பி வருங்காலத்து சார்ட்டில் ஓடவிடுவது? ஆகையால், ட்ரேடிங் யுக்தியினை மாற்றி ரோபட்டினை மெருகேற்றுவது என முடிவெடுத்தேன்.

ஏற்கனவே நாம் சிவம் ரோபட்டினை அடிப்படையிலிருந்து இரண்டுமுறை கூடுதல் பங்கசன் கோடிங் எழுதி மெருகேற்றியிருக்கிறோம். தற்பொழுது மேலும் ஒர் கூடுதல் கண்டிசனாக, நேற்றைய உச்ச விலையை உடைத்து மேல் சென்றால் மட்டும் பை ஆர்டர், அதைப்போல் நேற்றைய மட்டத்தினை உடைத்து கீழ் சென்றால் மட்டும் செல் ஆர்டர் என ப்ரைகவுட் பார்முலாவில் கண்டிசனைக் கொடுத்து ரோபட்டினை இலாபம் ரிப்போர்ட் கொடுக்க வைத்திருக்கிறேன். நேற்றைய உச்சம் மற்றும் மட்டம் கண்டுபிடிக்க உதவிய அந்த கோடிங்,

if (iHigh(NULL, PERIOD_D1, 1) < Ask)
{ //BUY ordersend }

if (iLow(NULL, PERIOD_D1, 1) > Bid )
{ //Sell OrderSend }

மேல் உள்ள கோடிங்கில் iHigh & iLow என்ற டிபால்ட் மெட்டாகுவோட் லேங்குவேஜ் பங்சனைப் பயன்படுத்தி நேற்றைய உச்சம் & மட்டும் என்பதன் விலையை இப் கண்டிசனுக்குள் உட்படுத்தி, அதன்பின்னர் ஆர்டர் புக் செய்ய கேட்டுக் கொண்டுள்ளேன்.

iHigh(NULL, PERIOD_D1, 1)

இதில் iHigh என்பதில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளீடுகள் Symbol - NULL = ரோபட் இயங்கும் சார்ட் கரன்சி பேர், காலம் - PERIOD_D1 மற்றும் எத்தனையாவது ஸ்டிக் ... நேற்றைய நாளின் உச்சத்தினை கண்டுபிடிப்பதற்காக டே சார்ட் மற்றும் முந்தைய ஸ்டிக் நம்பரான 1 கொடுத்து, நேற்றைய நாளின் உச்ச விலை பெற்றுவிட்டேன்.. அதைப்போல் லோ பிரைசும் iLow பங்க்சன் மூலம் பெற்றுவிட்டேன்.

அடுத்ததாக, வாங்கல் விலை நேற்றைய உச்ச விலையை விட பெரிது என்றால், ரெசிஸ்டன்ஸ் உடைத்து மேல் செல்ல ஆரம்பித்துவிட்டது என்பதனை உத்தியாகக் கொண்டு பை ஆர்டர் புக் செய்கிறோம். அதைப்போல், விற்றல் விலை நேற்றைய மட்ட விலையைக் காட்டிலும் குறைவாக இருந்தால் பாட்டத்தினை உடைத்து கீழே சரிகிறது என்பதனை உத்தியாகக் கொண்டு செல் ஆர்டர் புக் செய்கிறோம்.

நேற்றைய ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் கண்டுபிடிக்கத்தான் இந்த iHigh & iLow பங்க்சனை பயன்படுத்தியுள்ளேன்.

பல்வேறு உத்திகளைக் கையாண்டப் பின்னர், ஒர் லாஜிக்கில் ரோபட் வெற்றிகரமாக இயங்கி தோராயமாக 210% ரிட்டன் வழங்கியுள்ளது.

ஆன் டிக் பங்சன் பகுதியில் மட்டும் ஒர் சிறிய மாற்றம் செய்து சிவம் ரோபட்டினை இலாபம் கொடுக்க வைத்தப் பின்னர் தற்போதைய ஆன் டிக் கோடிங் கீழே கொடுத்துள்ளேன்.

Current OnTick() Code

Code: Select all

void OnTick()
 {
//---
  if(TotalOpenOrdersbySivam() == 0 && NewCandle() == true)
  {
  switch (order_type()) {
  case 1:
  if (iHigh(NULL, PERIOD_D1, 1) < Ask) {
  OrderSend(_Symbol,OP_BUY,TradeLot,Ask,Slippage,Ask-StopLoss*_Point,Ask+TakeProfit*_Point,"BUY_Sivam",MagicNumber);}
  break;
  case -1:
  if (iLow(NULL, PERIOD_D1, 1) > Bid ) {
  OrderSend(_Symbol,OP_SELL,TradeLot,Bid,Slippage,Bid+StopLoss*_Point,Bid-TakeProfit*_Point,"SELL_Sivam",MagicNumber);}
  break;
  default:
  break;
  }
 }
 }
Image
நமது முதல் ரோபட் வெற்றிகரமாக Strategy Tester -இல் பாஸ் ஆகிவிட்டது.

சிவம் ரோபட் டெஸ்டில் கொடுத்த இலாபம் / Net Profit 13125 .. அதன் முழுமையான ஆராய்வுத் தகவல் கீழ் உள்ள இமேஜில் உள்ளது.

1 மணி நேர கேண்டில் ஸ்டிக்கில் நமது சிவம் ரோபட் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இலாபத்தினை வழங்கியுள்ளது. அதைப்போல், ஆயில் 30 நிமிடச் சார்ட்டிலும் ரோபட் தன்னால் முடிந்தளவுக்கு இயங்கி இலாபத்தோடு திரும்பியுள்ளது.
Image
இரண்டாவது, 30 மினிட் ஆயில் சார்ட்டில் 1:2 என்ற ரேசியோவில் நட்டம் 100 பாயிண்ட், இலாபம் 200 பாயிண்ட் என ஸ்ட்ரடெஜி டெஸ்டில் 1 லாட் சைசில் கடந்த 8 மாதத்திற்கு சிவம் ரோபட்டினை உட்படுத்திய பொழுது இலாபம் 3165 டாலர் கிடைத்தது. அதன் ரிப்போர்ட் கீழே...
Image
WTI_Oil, M30, 01.01.2017 to 31.08.2017, Profit = 3165 $/Lot 1, SL =100, TP 200, Stick - 3, Profit 316.5/Lot 0.1 (Deposit 1000 Enough)

ஒர் ரோபட்டினை வெற்றிகரமாக பயன்பாட்டில் கொடுத்துள்ளது மகிழ்ச்சி. நீங்களும் இந்த ரோபட்டினை ஆயில் ட்ரேடிங் சார்ட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிவம் 1.2 ரோபட் டவுன்லோடிங் லிங்

Sivam 1.2 Forex Robot Download Code Link

மேலும் விவரமாக விடியோவில் எவ்வாறு பாரக்ஸ் ரோபட்டுகளை பேக்டெஸ்ட் மூலம் அதன் மூல உத்தியினை பரிசோதனை செய்யலாம் என்பதனைப் பாருங்கள் எளிதாக புரியும்.

[youtube]https://www.youtube.com/watch?v=Gp_RzcfC6TU[/youtube]


Forex Robot புரோக்கிராமினை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் விதமாக மூன்று விதமான மாற்றங்களை உருவாக்கி EUR/USD கரன்சி சார்ட்டில் Expert Advisor Strategy tester பயன்படுத்தி பரிசோதனை செய்ததில் இலாபத்தினைக் கொடுத்துள்ளது.

இரோ/டாலர் கரன்சியில் இலாபத்தினைக் கொடுத்த சிவம் 1.3 ரோபட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களைச் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.

1. No. of running orders Input = Example Running orders count 1 / 2 / 3/...100

1,2 பதிப்பில், ஒரே ஒர் ஆர்டர் மட்டும் நிகழ்வில் இருப்பது போன்று ரோபட் வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போதைய 1.3 ரோபட்டில் எத்தனை ஆர்டர் நிகழ்வில் இருக்க வேண்டும் என்பதனை பயன்பாட்டாளர் தேர்ந்தெடுக்கும் விதமாக உள்ளீடு பகுதியில் Running orders count என்ற கூடுதல் இன்புட் லைன் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மதிப்பாக, 1 ஆர்டர்.. 2 ஆர்டர் .. 3 ஆர்டர் என நாம் கொடுத்துக் கொள்ள முடியும்.

2. Technical Analysis Timeframe value Input = Analysis TimePeriod 5/15/30/60/240/1440/10080

Technical analysis-க்கு சார்ட்டில் கால அளவு மிக முக்கியம். அதிலும், நாம் வர்த்தகம் செய்யும் கால அளவு நேரத்தினைக் காட்டிலும் கூடுதல் கால அளவு சார்ட்டில் தான் டெக்னிகல் அனலைசிஸ் செய்தல் வேண்டும். உதாரணத்திற்கு 1 மினிட் சார்ட்டில் வர்த்தகம் செய்கிறோம் என்றால், 5 நிமிடச் சார்ட்டில் டெக்னிகல் பாயிண்ட் பார்க்க வேண்டும். ஆகையல், வர்த்தகர் தனக்கான டெக்னிகல் டைம் சார்ட்டினை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விதமாக 5 மினிட், 15 மினிட் என அதன் வரிசை மதிப்புகளில் ஏதேனும் ஒன்றினைக் கொடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நான்கு மணி நேர சார்ட்டில் அனலைசிஸ் செய்ய வேண்டும் என்றால் 240 என்ற மதிப்பினைக் கொடுத்தல் வேண்டும்... ஒர் மணி நேரச் சார்ட் என்றால் 60. ஒர் நாள் என்றால் 1440..

3. MyPoint() & MySlippage()
சில புரோக்கர்கள் நான்கு டிஜிட் கொண்ட விலை மதிப்பினை ட்ரேடிங்கிற்கு கொடுப்பார்கள், சிலர் ஐந்து டிஜிட் கொண்ட விலை மதிப்பினை ட்ரேடிங்கிற்கு கொடுப்பார்கள். சிலவற்றில் மூன்று டிஜிட் விலை மதிப்பு கூட கொடுக்கப்படுகிறது. ஆகையால், புரோக்கர்க்கு தகுந்தாற்போல் எத்தனை டிஜிட் என்பதனை பரிசீலனை செய்வதற்கான கோடிங் உள்ளே புதியதாக இணைத்துள்ளேன்.


Image

10000 டாலர் அக்கவுண்ட், 8 மாத கால டெஸ்ட் ட்ரேடிங்கில் இலாபத்துடன் 18766 டாலராக ஏற்ற இறங்களுக்குப் பின் கிடைத்துள்ளது.

ட்ரேடிங் சார்ட் 30 நிமிடத்திலும், டெக்னிகல் அனலைசிஸ் 60 நிமிடத்திலும் வைத்து பரிசோதனை செய்ததில் வெற்றி கிட்டியுள்ளது.

மாற்றங்களை செய்து, EUR/USD கரன்சியில் இலாபம் கொடுத்த சிவம் 1.3 ரோபட் டவுன்லோடிங் செய்து பயிற்சிக் கணக்கில் பயன்படுத்தி பரிசோதிக்கலாம்.

சிவம் 1.3 ரோபட் டவுன்லோடிங் லிங்

Sivam 1.3 Forex Robot Download Code Link

sivam1.3 robot program & test trade success report பற்றிய விவரங்கள் முழுமையாக விடியோவில் கொடுத்துள்ளேன், பார்த்துக் கொள்ளுங்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=Vn8SLqO7qKw[/youtube]

அடுத்ததாக ட்ரையல் ஸ்டாப் லாஸ் பற்றிப் பார்க்கலாம்...

Trial Stop:

பாரக்ஸ் பொறுத்தவரைக்கும் இரண்டு விதமான ஸ்டாப் ஆர்டர் கண்டிசன் உள்ளது. ஒன்று, Stop Loss மற்றொன்று Take Profit. நமது சிவம் ரோபட்டினைப் பொறுத்தவரைக்கும் ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் என்பது ஆர்டர் போடும் பொழுதே குறிப்பிடப்பட்டுவிடுவதால், தானாகவே ஆர்டர் குலோஸ் ஆகிவிடும். ஆனாலும், மார்க்கெட் ஏற்ற இறக்கத்தின் பொழுது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஏற்கனவே கொடுத்த ஸ்டாப் கண்டிசனை மாற்றியமைப்பதற்கு ட்ரையல் ஸ்டாப் என்றுப் பெயர்.

உதாரணத்திற்கு, டேக் பிராபிட் 1000 பாயிண்ட் & ஸ்டாப் லாஸ் 500 பாயிண்ட் என்றுக் கொடுத்து ஒர் ஆர்டர் புக் செய்த ஒர் ஆர்டர் இயங்கும் பொழுது, மார்க்கெட் 800 பாயிண்ட் பிராபிட் திசைக்குச் சென்றுவிட்டு, பின் 500 பாயிண்ட் ஸ்டாப் லாசில் குலோஸ் ஆகிவிட்டது என்றுச் சொன்னால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம் இல்லையா? அந்த கவலையைத் தீர்ப்பதுதான் ட்ரையல் ஸ்டாப்.

சிவம் 1.4 ரோபட்டில் ட்ரையல் ஸ்டாப் கண்டிசன் இணைக்கப்பட்டுள்ளது.

ட்ரையல் ஸ்டாப்பில் ஸ்டாப் லாஸ் மதிப்பினை மட்டும் மாற்றியமைக்கும் கட்டளையைக் கொடுத்துள்ளேன். அதாவது, 200 பாயிண்ட்ஸ் இலாபம் போனது என்றுச் சொன்னால் 100 ஸ்டாப் மதிப்பினைக் குறைத்துக் கொள் என்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்து, அதன் போக்கிற்கு மாற்றியமைத்துள்ளேன். அதே நேரத்தில் டேக் பிராபிட்டில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை. அதைப்போல், நட்டத்தினை அதிகரிக்கும் செயலையும் செய்யவில்லை.

கொஞ்சம் விளங்கச் சொன்னால், 500 ஸ்டாப் லாஸ், 1000 டேக் பிராபிட் என்று ஒர் பை ஆர்டர் 1.21000 என்ற விலையில் புக் செய்திருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள், தற்பொழுது அதன் டேக் பிராபிட் விலை 1.22000 மற்றும் ஸ்டாப் லாஸ் விலை 1.20500.

சிவம் 1.4 ரோபட், ஆர்டர் இலாபத்தில் சென்றால் மட்டும் ஸ்டாப் லாசில் 100 பாயிண்ட் குறைத்துக் கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் சரி பார்த்துக் கொண்டே இருப்பதால், ஒவ்வொரு முறையும் 100 பாயிண்ட் .. 100 பாயிண்ட் என்று ஸ்டாப் லாஸ் விலை நாம் வாங்கிய விலையான 1.21000 என்பதனைக் காட்டிலும் அதிகரித்து 1.21400 என்று கூட இலாபத்தில் இயங்கினால் மாறிக் கொள்ளும். ஆகையால், ஸ்டாப் லாஸ் மதிப்பு கூட இலாபம் கொடுக்கும் வகையில் மாற்றியமைக்கும் ஒர் வசதிதான் ட்ரையல் ஸ்டாப்.

Image

சிவம் 1.4 ரோபட் யுக்தியினை 10000 டாலர் அக்கவுண்ட் & கடைசி 9 மாதக் கால சார்ட்டில் டெஸ்ட் ட்ரேடிங்கில் சரிபார்த்த பொழுது இலாபத்துடன் 19932.65 டாலராக ஏற்ற இறங்களுக்குப் பின் கிடைத்துள்ளது.

ரோபட் டெஸ்ட்டில் பயன்படுத்திய உள்ளீடு காரணிகள் விவரம்:
No.of Count Sticks = 3
Take Profit = 120
Stop Loss = 50
Trial Stop = 10
Trade Lot = 1.0
Analysis Time Period = 60
Running Orders Count = 6

Currency pair = EUR/USD
Trading Chart = 30 Min chart
Trading Time Period = 1 Jan 2017 to 30 Sep 2017

சிவம் 1.4 ரோபட் வெற்றிகரமாக இயங்கியதில் மிக்க மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல், பாரக்ஸ்-க்கு புதியவராக இருந்தாலும் உடனடியான இலாபம் சம்பாதிக்கும் ஒர் வாய்ப்பினை ரோபட் மூலம் வடிவமைத்துக் கொடுத்துள்ளதில் கூடுதல் இரட்டிப்பு மகிழ்ச்சி.

சிவம் 1.4 ரோபட் டவுன்லோடிங் லிங் கீழே கொடுத்துள்ளேன், பரிசோதனை வர்த்தகம் செய்ய விரும்புபவர்கள் டவுன்லோடிங் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sivam 1.4 Forex Robot Download Code Link


கோடிங்கில் ஒர் சின்ன மாற்றமாக OrderModify() என்ற பங்க்சன் பயன்படுத்தி உள்ளேன். அதன் கோடிங் கீழே உள்ளது.

Code: Select all


  //TrialStop Function
 bool TrialCallFunction()
 {
      int BOS=OrderType();  // BOS type of the selected order
      double SL=OrderStopLoss();   // SL of the selected order
      double TP  =OrderTakeProfit();  // TP of the selected order
      double Price =OrderOpenPrice();   // Price of the selected order
      int  Ticket=OrderTicket();    // Ticket of the selected order
     
      switch(BOS){
  case 0:
  if ( Bid > (SL+(TrialStop+30)*MyPoint)) {
   SL= (SL+TrialStop*MyPoint);
  bool Ans=OrderModify(Ticket,Price,SL,TP,0);
   if (Ans==true) return(Ans); }
  break;
  
  case 1:
  if ( Ask < (SL-(TrialStop+10)*MyPoint)) {
   SL= (SL-TrialStop*MyPoint);
  bool Ans=OrderModify(Ticket,Price,SL,TP,0); 
   if (Ans==true) return(Ans); }
  break;
  
  default:break;
  
  }
  return(false);
 }
மேலும் விவரமாக விடியோவில் பார்க்க,

[youtube]https://www.youtube.com/watch?v=9gbh7ZER8k0[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் வேலைப் பயிற்சி

Post by ஆதித்தன் » Wed Aug 30, 2017 11:01 am

முதல் தகவலாக பாரக்ஸ் ரோபட் புரோக்கிராம் எழுதுவதற்கு அடிப்படையான மெட்டா எடிட்டர் சாப்ட்வேரினை டவுன்லோடிங் செய்யும் தகவல் விடியோவில் கொடுத்துள்ளேன்.

[youtube]https://www.youtube.com/watch?v=fmLJl4DVgcc[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் வேலைப் பயிற்சி

Post by ஆதித்தன் » Fri Sep 01, 2017 11:17 pm

step one programming video uploaded with data input steps

[youtube]https://www.youtube.com/watch?v=NX9m7PsWppQ[/youtube]
namita2015

Re: பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் வேலைப் பயிற்சி

Post by namita2015 » Sat Sep 02, 2017 1:33 pm

Really good training videos, its more useful for me, keep uploading more videos sir. I would like to invest in forex trading around 5 L, If you ready to guide me correctly I will join under you sir. Send more details to "
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் வேலைப் பயிற்சி

Post by ஆதித்தன் » Sun Sep 03, 2017 10:57 am

கோடிங் விவரங்கள் விடியோவில் பார்த்தால் மிக எளிதாகப் புரியும், மூன்றாம் பாகம் பார்க்க

[youtube]https://www.youtube.com/watch?v=vjLLJzwsbSQ[/youtube]

அடுத்து வந்திருந்த பிழைகளைப் பற்றி பார்க்கலாம்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் வேலைப் பயிற்சி

Post by ஆதித்தன் » Tue Sep 05, 2017 5:57 am

நான்காம் பாகம் விடியோ.... எரர் தெளிவாகிவிட்டது... அடுத்த ஐடியாவும் கொடுக்கப்பட்டுள்ளது...

[youtube]https://www.youtube.com/watch?v=c6oxKl1Prl0[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் வேலைப் பயிற்சி

Post by ஆதித்தன் » Fri Sep 08, 2017 11:28 pm

ரோபட் டூட்டோரியலின் ஐந்தாவது பார்ட்டில் மேலும் இரண்டு பங்சன் கொண்டு நமது சிவம் ரோபட் மெருகேற்றப்பட்டு சிறப்பான இயக்கத்திற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது, விவரம் விடியோ பாருங்க..

[youtube]https://www.youtube.com/watch?v=Uc_xLEC40GI[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் வேலைப் பயிற்சி

Post by ஆதித்தன் » Mon Sep 11, 2017 4:14 am

Robot-இன் மிக முக்கியமான டெஸ்டிங் பார்ட்டில் நமது சிவம் ரோபட் பிராபிட் ரிப்போர்ட் கொடுத்துவிட்டது.

[youtube]https://www.youtube.com/watch?v=Gp_RzcfC6TU[/youtube]

ரோபட்டினை எவ்வாறு பரிசோதிப்பது என்பதற்கான டுட்டோரியல்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11395
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: Forex Robot - Step to write own Forex EA robot in day - Tamil

Post by ஆதித்தன் » Fri Sep 29, 2017 2:27 am

Sivam 1.3 Robot Strategy Success report and program modification details.

[youtube]https://www.youtube.com/watch?v=Vn8SLqO7qKw[/youtube]
User avatar
sathiqbasha
Posts: 19
Joined: Tue Jan 12, 2016 9:27 am

Re: Forex Robot - Step to write own Forex EA robot in day - Tamil

Post by sathiqbasha » Sat Sep 30, 2017 8:09 pm

sir please upload .mq4 file
Post Reply

Return to “படுகை ஆன்லைன் பள்ளிக்கூடம்”