கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by ஆதித்தன் » Wed Jul 13, 2016 11:34 am

கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் வேலை
Image
வீட்டிலிருந்தே செய்யக்கூடிய ஆன்லைன் ஜாப்பில் மிகவும் பெரிய கம்பெனியான கூகுள் வழங்கும் ஆன்லைன் ஜாப் தான் கூகுள் அட்சன்ஸ் வேலை. கடந்த 2003 ஆண்டு தொடங்கப்பட்டு மிகப் பெரிய வளர்ச்சியினை எட்டியுள்ள அட்சன்ஸ் ப்ரோக்கிராம் கடந்த 2014 ஆம் ஆண்டு 3.4 பில்லியன் டாலர் வருவாயினைப் பெற்றுள்ளது.

பில்லியன் என்பது நூறு கோடி. (1 Billion = 100 Crores)

$ 3.4 Billion = $ 340 Crore = Rs. 22,950 கோடி

3.4 $ பில்லியன் வருவாய் என்பது இந்திய ரூபாயில் இருபத்தி இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது கோடி.

கூகுள் அட்சன்ஸ் தனது வருவாயில் 65% ஐ பப்ளிசர்களுக்கு கொடுக்கிறது. அதாவது, கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் செய்வோர்க்கான பேமண்ட், கிடைத்த வருவாயான 22,950 கோடியில் 14950 கோடியினை அட்சன்ஸ் ஜாப் செய்வோர்க்கு கொடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடியினை தனது அட்சன்ஸ் ஜாப் செய்வோர்க்கு வழங்கி வரும் கூகுள் கம்பெனி, தனது அட்சன்ஸ் ப்ரோக்கிராமில் பலதரப்பட்ட மாறுதல்களை தற்போதைய நிலையில் செய்துள்ளது.

கூகுள் வழங்கியுள்ள அட்சன்ஸ் வேலை வாய்ப்பினைப் பயன்படுத்தி, பிரபல வெப்சைட் நடத்துனர்கள் பலர் இலட்சக் கணக்கில் மாதந்தோறும் வருவாயாகப் பெற்று வருகின்றனர்.

தனிமனிதர்கள் பலரும் கூகுள் அட்சன்ஸ் ஜாப்பினை வெப் ப்ளாக் மூலம் செய்து வருவாய் பார்த்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை, கூகுள் அட்சன்ஸ் ஜாப்புக்கு மிகப் பெரிய வரவேற்பு ஆன்லைன் வேலை தேடுபவர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், பெற்ற வேலையினை எவ்வாறு செய்வது என்றுத் தெரியாமல், வருவாய் எடுக்க முடியாமல் திரும்பியவர்கள் 90% பேர்.

10 பேர் மத்தியில், பெரும்பான்மையானவர்கள் பேச்சே சட்டம் என்பது நமக்கு நன்றாகவேத் தெரியும். அந்த வகையில், கூகுள் அட்சன்சில் ஆரம்பக்கட்டத்தில் சேர்ந்து பணம் பெற்றவர்களின் ஆதாரங்களைப் பார்த்து, நான் நீ என்று எல்லோரும் ஓடி வந்தார்கள்... ஆனால், வந்து வேலை செய்ய முடியாமல் திரும்பிச் சென்ற பலர், அது ரொம்ப கஷ்டம்பா.... என்று சொல்லிய வார்த்தைகள் எங்கும் நிறைந்ததால், தற்பொழுது கூகுள் அட்சன்ஸ் ஜாப் தேடி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆம், கூகுள் அட்சன்ஸ் ஜாப் என்றதும்... கண்டிப்பா ஆன்லைன் வேலை தேடிய பலர்க்கும் அது தெரிந்திருப்பதால், உடனே அது கஷ்டம் என்று சொல்லிவிடுவதால், அடுத்தக்கட்டமாக அதனைத் தேடிச் செய்வோர்களின் எண்ணிக்கைத் தற்பொழுது குறைந்துவிட்டது.

என்னதான் புதியவர்கள் எண்ணிக்கைக் குறைந்தாலும், கூகுள் தன்னிடம் இருக்கும் பழைய அட்சன்ஸ் பணியாளர்களுக்கு வழங்கி வரும் மற்ற கம்பெனியினைக் காட்டிலும் கூடுதல் தொகையின் காரணமாக, அவர்கள் தொடர்ந்து கூகுளிலே இருந்து வருகின்றனர். ஆக, தனக்குத் தேவையான அனைத்து முக்கியத் தளங்களிலும் கூகுள் தன் காலடியினை வைத்துவிட்டதால், புதியதாக சேர்பவர்களுக்கு பல கண்டிஷனை வைக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஒர் குறிப்பிட்ட இணையதளங்கள் தான் மிகவும் பாப்புலராக இருக்கும்.. அதற்குப் போட்டியாக ஒர் பாப்புலரான தளத்தினை எல்லோராலும் கொண்டு வரமுடியாது... அதற்கு என்று பெரிதும் கடினப்பட்டே பாப்புலர் லிஸ்டினைப் பிடிக்க முடியும். ஆக, அவ்வாறு மிகவும் கஷ்டப்பட்டு தளங்களின் ரேட்டிங்கில் தனக்கான ரேட்டிங்காக குறைந்தப்பட்சமாக தினம் 1000 வாசகர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே கூகுளில் ஒரளவுக்கு சம்பாதிக்க முடியும்.

கஷ்டப்பட்டு செய்யும் பணிகள் எல்லாவற்றிற்கும் எளிதாகச் செய்ய என்று புதிய வழிமுறைகளை அன்றைய நாள் முதல் இன்றைய நாள் வரையிலும் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறோம். அந்த வகையில், கூகுள் அட்சன்ஸ் ஐடி எவ்வாறு மிக எளிதாகப் பெறுவது மற்றும் மாதந்தோறும் ஒர் பேமண்டினை கூகுள் அட்சன்ஸ் மூலம் சம்பாதிப்பது எப்படி என்ற எளிமையான முறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்குமாயின், இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

கூகுள் அட்சன்ஸ் பற்றிய சந்தேகக் கேள்விகள் இருக்குமாயினும் கேட்கலாம், தெரிந்தவைக்கு பதில்கள் கிடைக்கும்.
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by thiruusha » Wed Jul 13, 2016 11:54 am

சார் ஒரு ப்லொக்கர் வைதுல்லென் சார் யு டியுப் வீடியோ க்கு ஆட் வருது ஆனா ப்லொக்கர் க்கு வரல ஒரு இ மெய்ல் இடி தான் எனக்கு ப்லொக்கெர் டிசைன் தெரியல உத வி செய்ய மஉடியுமா
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by Siva14 » Wed Jul 13, 2016 1:08 pm

Youtube மூலம் Google Adsense Approval வாங்கி இருந்தால் அதனை Youtube Video-க்கு மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது Youtube Video-ல் மட்டும் தான் Google Ads தோன்றும். உங்களுக்கு Blogger Blog-ல் Google Ads பயன்படுத்த வேண்டும் எனில் அதற்கு தனியாக Adsense Approval வாங்க வேண்டும் (Youtube-க்கு பயன்படுத்திய அதே Adsense Account-ல் வாங்கிக் கொள்ளலாம்). ஆனால் தற்போது Google, Blogger Blog-க்கு Approval கொடுப்பதில்லை. உங்களுக்கு Blogger Blog-க்கு Approval வாங்க வேண்டுமெனில் ஒரு Custom Domain வாங்கி அதனை Blogger-ல் இணைந்து அந்த Domain மூலமாக மட்டுமே Google Adsense Approval வாங்க முடியும். (Custom Domain என்பது dot.COM, dot .NET. ,dot .ORG என எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்). Custom Domain-க்கு Approval வாங்கிய பிறகு நீங்கள் உங்களுடைய Blogger Blog-ல் பயன்படுத்திக் கொள்ளலாம் (எத்தனை Blog-ல் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்).

தற்போது Blog (or) Website-க்கு Adsense Approval வாங்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் Google தற்போது பல Condition-களை முன்வைத்துள்ளது. அப்படியே Approval வாங்கிவிட்டாலும் Google Hosting Blogger Blog-ல் Google Ads-யை பயன்படுத்துவதற்கும் பல Condition-யை வைத்துள்ளது. அதில் ஒன்று தவறு செய்தாலும் உடனே Google Blog-யை முடக்குவது (or) Google Adsense Account-யை முடக்குவது என பல பிரச்சினைகள் சந்திக்க வேண்டிருக்கிறது. இதனாலேயே Blogger Blog-ன் மூலம் Run செய்த பல பிரபல Blogger's தற்போது Wordpress (Self Hosting)-க்கு மாறி விட்டார்கள்.
wahidfhs
Posts: 119
Joined: Mon Sep 28, 2015 5:23 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by wahidfhs » Wed Jul 13, 2016 7:31 pm

WordPress enral enne sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by ஆதித்தன் » Wed Jul 13, 2016 7:36 pm

wahidfhs wrote:WordPress enral enne sir
Open Source Web Blog Script, Like Blogspot. But, in here lot more add-on available for your business... such as payment gateway, forum, membership, member base, product show for shopping and more ....

வெப் கோஸ்டிங்க் அக்கவுண்ட் இருந்தால், வேர்டு ப்ரஸ் ஸ்கிரிப்டினை ஒன் கிளிக்கில் இன்ஸ்டால் செய்து வெப்சைட்டாகப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
polurkarthi35
Posts: 3
Joined: Wed Jul 13, 2016 11:12 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by polurkarthi35 » Wed Jul 13, 2016 11:17 pm

நிறைய தமிழ் தளத்தில் கூகுள் ஆட்சென்ஸ் பார்க்கிறேன் அது எப்படி தமிழ் தளத்தில் அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள். ... அந்த கோடிங் எடுத்து அதே ஜிமெயில் ஐடியில் வெறு தமிழ் தளம் ஆரம்பித்து அதில் கோட் போடுகிறீர்களா இல்லை எப்படி ? நான் தமிழ் தளத்தில் ஆட்சென்ஸ் பயன்படுத்த வேண்டும் தக்க பதில் எதிர்பார்க்கிறேன் மற்றும் ஓரு நாளைக்கு $6 சம்பாதிக்க வழி உள்ளதா அதில் ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by ஆதித்தன் » Wed Jul 13, 2016 11:31 pm

polurkarthi35 wrote:நிறைய தமிழ் தளத்தில் கூகுள் ஆட்சென்ஸ் பார்க்கிறேன் அது எப்படி தமிழ் தளத்தில் அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள். ... அந்த கோடிங் எடுத்து அதே ஜிமெயில் ஐடியில் வெறு தமிழ் தளம் ஆரம்பித்து அதில் கோட் போடுகிறீர்களா இல்லை எப்படி ? நான் தமிழ் தளத்தில் ஆட்சென்ஸ் பயன்படுத்த வேண்டும் தக்க பதில் எதிர்பார்க்கிறேன் மற்றும் ஓரு நாளைக்கு $6 சம்பாதிக்க வழி உள்ளதா அதில் ?

approval வாங்கிவிட்டால் தமிழ் தளத்தில் பயன்படுத்தலாம்.

தினம் 6 டாலர் சம்பாதிக்க வழி இருக்கிறது. பிரபல தமிழ் தளத்தில் அட்சன்ஸ் பயன்படுத்துகிறார்கள், அவர்களது வழியினை நீங்களும் கேட்டுப் பின்பற்றிக் கொள்ளலாம்.
polurkarthi35
Posts: 3
Joined: Wed Jul 13, 2016 11:12 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by polurkarthi35 » Thu Jul 14, 2016 6:42 am

நான் வாங்கி விட்டேன் பட் யாரும் அந்த வழியை கூற மாட்டுறாங்க உங்களுக்கு தெரிந்தால் கூறவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by ஆதித்தன் » Thu Jul 14, 2016 6:49 am

polurkarthi35 wrote:நான் வாங்கி விட்டேன் பட் யாரும் அந்த வழியை கூற மாட்டுறாங்க உங்களுக்கு தெரிந்தால் கூறவும்
பணம் வாங்கிவிட்டீர்கள் என்று சொன்னால் மிக்க மகிழ்ச்சி.

வழிமுறை என்பது நீங்கள் பின்பற்றுவதுதான்.. ஆனால், அவ்ளோ உயர்வான தொகை உங்களுக்கு கிடைக்கவில்லை அவர்களுக்கு கிடைக்கிறது என்பது நம்பிக்கையிலும் தொடர் முயற்சியிலும் பணி அர்ப்பணிப்பிலும் இருக்கிறது.

இல்லை... வழிமுறையே தெரியவில்லை என்றுச் சொன்னால்... எங்காவது பயிற்சி எடுத்துவிட்டப் பின்னர் வேலை செய்யலாம்.

இங்கு, உங்களது வழிமுறையைச் சொன்னால் சரி/தவறு என்ற பதில் மட்டுமே கிடைக்கும்.
polurkarthi35
Posts: 3
Joined: Wed Jul 13, 2016 11:12 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சன்ஸ் ஜாப் கலந்துரையாடல்

Post by polurkarthi35 » Thu Jul 14, 2016 6:55 am

ம் சரி இப்போது என்னவென்றால் வாங்கிவிட்டேன் பட் அதை கரெக்டா கொண்டு போகும் வழிமுறைகள் தெரியாமல் முழிக்கிறேன் சரி நண்பா .... இந்த ஆன்லைன் Data Entry , Mail Click இதலாம் மாதம் குறைந்த பட்சம் 7000 வாங்க முடியுமா ? அதற்கான வழி இருந்தால் கூறவும்

மாதம் 7000 முதல் 8000 ஆயிரம் வரை கிடைக்க கூடிய ஜாப் (மொபைலில்) இருந்தால் கூறவும்
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”