MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Tue May 12, 2015 11:19 pm

ரொம்ப எளிதாக 10 நிமிடத்தில் 5 டாலர் ... 100 டாலர்னு MTV தளத்தில் ஒர் க்ரூப் பங்கு வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. MTV தளத்தினை ஒர் வருடமாக தெரிந்தாலும், அவ்ளவு அதிகமாக நான் அவர்களது பங்குப் பகுதிக்குள் செல்லவில்லை. கடந்த 5 மாதமாக சரியாக பின் தொடர்ந்ததின் மூலம் கடந்த மாதத்தில் கிடைத்த 170.02% ரிட்டர்ன் ப்ளானில் 20 இன்வஸ்ட்மெண்ட் செய்து உறுதியான இலாபத்திற்கு வழிவகுத்து வைத்துள்ளேன்.

அதைப்போல் 4 மாதமாக பங்கு வர்த்தகத்தில் என்ன நடக்கிறது என்று அடிக்கடிப் பார்த்துக் கொண்டே வந்ததில், MTV இருக்கும் 10 .. 20 பெரும் முதலீட்டாளர்களின் விளையாட்டினை அறிய முடிந்தது.

படுகை உறுப்பினர்களுக்கு கண்டிப்பாக இவர்கள் பெரிய முதலீட்டாளர்கள் தான், ஏனெனில் ஒவ்வொருவரும் 1000$... 5000$ 10000$ என்று முதலீடு செய்து... 5$ முதல் 100$ வரை எளிதாக 10 நிமிடத்தில் பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் செய்துவிடுகின்றனர்.

MTV - பங்கு வர்த்தகம் செய்ய முதலில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்துவிட்டு பணத்தினை முதலீடு செய்ய வேண்டும். அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய > https://www.mytrafficvalue.com/ref/todaywork
அடுத்ததாக பிட்காயின் அல்லது பெர்பக்ட்மணி அக்கவுண்டில் டாலரினை ரெடி செய்துவிட்டு, பணத்தினை Add Funds வழியாக டெபாசிட் செய்யுங்கள்.
Image
பணத்தினை டெபாசிட் செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் அடுத்ததாக, பங்கு வர்த்தகப் பகுதியான Invest > Profits Share பகுதிக்குள் செல்லுங்கள்.
Image
பங்கு வர்த்தக மார்க்கெட் பகுதிக்குள் சென்றால் தற்போதைய விற்றல்(SELL) மற்றும் வாங்கல் (Bid/Buy) விலை நிலவரத்தினைப் பார்க்கலாம்.
Image
மேல் படத்தினைப் பார்த்தீர்கள் என்றுச் சொன்னால் குறைந்தப்பற்ற விற்பனை விலை 0.0463

முதலீட்டாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றுச் சொன்னால் ஒர் பத்தாயிரம் பங்கினை 0.0465 என்ற விலைக்கு புக் செய்கிறார்கள்.

I would like to buy (10000) shares price @ (0.0465) price.

என்று வாங்க நினைக்கும் பங்குத் தொகை மற்றும் விலையினைக் கொடுத்து, அடுத்ததாக பணத்தினை எதில் வைத்திருக்கிறோமோ அதனை தேர்வு செய்துவிட்டு.. Purchase என்று க்ளிக் செய்துவிட்டால் போதும்.

0.0463 முதல் 0.0465 வரை உள்ள விற்பனைக்கான பங்குகளில் குறைந்த விலையிலிருந்து தொடங்கி 10000 பங்குகள் கிடைக்கும் குறைந்தப் பற்ற விலைக்கு வந்துவிடும்.

பங்கின் சாராசரி விலைப் பார்த்தோம் என்றுச் சொன்னால் 0.0464 இருக்கலாம் .. அல்லது 0.04645 கூட இருக்கலாம்.

சாரசரி ஒர் பங்கின் விலை 0.0465 என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை உடனே அப்படியே 0.0470 என்ற விலைக்கு விற்றுவிடுவது. இதனால் ஒர் பங்கில் கிடைக்கும் இலாபம் ~0.0002.(ஃபீஸ் 0.25%)

10000 * 0.0002 = ~2 டாலர்

பத்தாயிரம் பங்கினை விற்பதன் மூலம் கிடைக்கும் இலாபம் 2 டாலர்.

இதனையே, கையில் இருக்கும் பங்கினை 0.0468 என்ற விலைக்கு விற்றுவிட்டு, 0.0463-க்கு வாங்குவது என்ற ரிவர்சல் முறையிலும் செய்யலாம்.

விற்று வாங்குவதா... வாங்கி விற்பதா என்பது, அந்த நேரத்தில் பெரிய முதலீட்டாளர் சிலர் சேர்ந்து கொண்டு செய்யும் வேலையினை கவனித்து செய்தல் வேண்டும்.

உங்களுக்கு 10000 பங்கினை வாங்க முதலீடு என்பது 500 டாலர் தேவைப்படும். அவர்கள் 10000$ ... 50000 $ என பெரும் தொகையினை வைத்திருப்பதால் எளிதாக ஏற்படும் சிறிய சறுக்கலையும் அடுத்தக்கட்ட முதலீடு செய்து உடனே சரி செய்து கொள்வதோடு உறுதியான இலாபத்தினைப் பார்த்துக் கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது பங்கு விலை குறைவாக இருப்பதால் தைரியமாக விற்று வாங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பங்கு வாங்கி விற்பது என்பதனை ஒர் நாளைக்கு 4 முறை செய்தால் 3*4 = 12 டாலர் வருவாய். கூடுதல் விரிவு வைத்து வைத்தால் இன்னும் கூடுதல் இலாபம்.

இங்கே உடனுக்கூடன் என்பது ஒர் கூட்டணியினை அமைத்துக் கொண்டால் எதிர் அணியினை மையமாக வைத்து காயினை நகர்த்தி எளிதாக இலாபம் ஈட்டிவிடலாம். பெரும் முதலீட்டாளர் சிலர் என்ன நினைக்கிறார்களோ அதற்குத் தகுந்தவாறு மார்க்கெட்டினை மாற்றியமைத்துவிடுகின்றனர். ஏனென்றால் இங்கு உலக பங்கு வர்த்தக மேடைப் போன்று பெரிய முதலீட்டாளர் பல ஆயிரக்கணக்கானவர்கள் கிடையாது.. ஒர் சிலரே. ஆகையால் இவர்கள் சுலபமாக மார்க்கெட்டினை ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளனர்.

பங்கு வர்த்தகத்தில் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். நான் உடனுக்கூடன் வாங்கி விற்பது கிடையாது. ஏனெனில் அதற்குத் தகுந்த இன்வஸ்ட்மெண்ட் நான் கொண்டிருக்கவில்லை. வைத்திருப்பதோ வெறும் 15000 பங்குகள் மட்டுமே... அதுவும் மார்க்கெட் நிலவரத்தினை அறிந்து கொள்வதற்காக.. 0.12 $ விலையினை எதிர்பார்த்து 0.065-இல் வாங்க ஆரம்பித்து தற்போது கையிலிருக்கும் பங்கின் வாங்கிய விலை 0.05 என்ற நிலையில் வைத்திருக்கிறேன்.

அதாவது 0.065 என்ற நிலையில் 3000 பங்கு வாங்கி வைத்தப் பொழுது விலை 0.055 என்று சரிந்துவிட்டால் மீண்டும் வாங்கி விலையினை சராசரியாக கையிலிருக்கும் பங்கின் விலையை குறைத்தல் வேண்டும். விலை ஏறும் என்று நினைக்கும் பொழுது விலை குறைந்தால் மீண்டும் வாங்கி கையிருப்பு பங்கின் விலையை குறைத்தல் வேண்டும். அவ்வாறு குறைத்துவிட்டால் விரைவாக மார்க்கெட் திரும்பி ஏறும் பொழுது விற்று வெளியேறிவிட்டு அடுத்தக்கட்ட ஆட்டத்திற்கு தயார் ஆகலாம்.

பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தால்... அதிகப்பற்ற விலை/தடை நிலை மற்றும் குறைந்தப்பற்ற விலை/மட்ட நிலை ஆகிய இரண்டினையும் அறிந்து கொண்டு முதல் கட்டமாக கையிருப்புத் தொகையில் ஒர் 20% செய்து வாங்குவது.. கிடைக்கும் இலாபத்தினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும், அப்படியில்லாது எதிராக நிகழும் பொழுது மீண்டும் 20%-க்கு வாங்கி சராசரி செய்து.. அடுத்தக்கட்டத்தில் இழப்பில்லாமல் தப்பித்துவிட்டு , அடுத்தக்கட்ட ஆட்டத்திற்காக தயார் செய்தல் வேண்டும். அதற்கும் கீழ் இழப்பில் செல்கிறது என்றுச் சொன்னால் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் உங்களது ஆர்டர் ப்ளேஸ்மெண்ட் விலையே தவறாக தேர்ந்தெடுத்திருக்கலாம். இப்படியான வேலையில் கையிருப்பினை விற்றுவிட்டு வாங்குவதா? அல்லது வாங்கி சராசரி ஆக்குவதா? என்று கொஞ்சம் நிதானமாக யோசிச்சி செய்தல் வேண்டும்.

இந்த காரணத்திற்காகவே நான் கடந்த மூன்று மாதமாக மார்க்கெட் நிலவரத்தினை பின் தொடர்ந்துவிட்டு, தற்பொழுது முதலீடு செய்துள்ளேன்.

இங்கே 170% ரிட்டர்ன் ப்ளான்... பங்கு வர்த்தகம் என இரண்டு இருக்கிறது. இதில் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் பின்னூட்டமாகச் சொல்லிவிட்டுச் செய்யுங்கள். ஏனெனில் அன்றைய நிலையில் மார்க்கெட் நிலவரம் என்ன என்பதனை ஒர்முறை கேட்டால், நான் அறிந்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்களாகவே இங்கு சொன்னதனைக் கொண்டு செய்தால்.. இன்றைய நாள் போல் அன்றைய நாள் இருக்காது. ஆகையால் முதலீடு திட்டப் பதிவுகள் படுகையில் எங்கு கொடுத்திருந்தாலும் கேட்டுவிட்டுச் செய்யுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Sun May 17, 2015 7:01 pm

தற்பொழுது MTV பங்குகள் மிகக் குறைந்த விலையாக 0.0345 என்ற நிலையில் கிடைக்கின்றன. வாங்கினால் 2 நாட்களில் 20% இலாபம் பார்த்துவிடலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by marmayogi » Sun May 17, 2015 7:37 pm

சார் , sell செய்த பங்குகள் Pending Sale ல் இருக்கிறது. அது எப்போது sales ஆகும்?.

உடனடியாக பங்குகளை வாங்கி அதே நாளில் விலை உயரும் போது வாங்கிய பங்குகளை விற்க முடியுமா?. நமது பங்குகளை யாரும் வாங்கவில்லை நட்டம் ஏற்படுமா ?.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Sun May 17, 2015 7:57 pm

marmayogi wrote:சார் , sell செய்த பங்குகள் Pending Sale ல் இருக்கிறது. அது எப்போது sales ஆகும்?.

உடனடியாக பங்குகளை வாங்கி அதே நாளில் விலை உயரும் வாங்கிய பங்குகளை விற்க முடியுமா?. நமது பங்குகளை யாரும் வாங்கவில்லை நட்டம் ஏற்படுமா ?.
நீங்கள் கேட்ட விலையினைக் கொடுக்க ஒருவர் தயார் என்று ஒகே சொல்லும் பொழுது Pending Sale - இல் இருப்பது Sold ஆகிவிடும்.

தற்போதைய விலை நிலவரம் 0.032 Lower < 0.05 என்பது Higher என்ற நிலையில் இருக்கிறது.

உடனே விற்பனை ஆக வேண்டும் என்றால்... BUY Bids ஆக வாங்க விருப்பம் தெரிவித்த விலையையே ஏற்று விற்றுவிடுதல். இதில் நட்டம் என்பதும் இலாபம் என்பதும் உங்களது வாங்கிய விலையினைப் பொறுத்தும், மார்க்கெட்டினை அணுகும் முறையினைப் பொறுத்தும் இருக்கிறது.

0.05 - இல் வாங்கிய பங்கினை இன்றே விற்று காசாக்க வேண்டும் என்றால்... இன்றைய விலையில் கேட்பவர்களின் விலைக்குத்தான் கொடுக்க முடியும். 0.037-க்கு விற்கையில் நட்டம் ஆகலாம்.

கேட்பதற்கே யாரும் இல்லை என்றால்??? அப்படியும் நடக்கலாம், ஆளில்லா காட்டுக்குள்ளே குத்தவைத்துக் கொண்டிருக்கும் பொழுது. ஆனால், இங்கே 10000 டாலர்க்கு மேல் இன்வஸ்ட் செய்தவர்களே 500-க்கும் மேல் இருக்கிறார்கள் என்பதோடு, அவ்வப்பொழுது மார்க்கெட்டினை சரியாக நகர்த்தியும் இலாபத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் வாங்க ஆளிருக்கிறார்கள், ஆனால் மார்க்கெட் விலைக்கு நீங்கள் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். நட்டம் என்று பார்த்தால்.. உங்கள் அணுகுமுறையைத்தான் செயலில் காட்ட வேண்டும்.

5$ = 100 பங்கு 0.05-க்கு வாங்கியதனை அப்படியே 0.037-க்கு விற்பது நட்டம் என்றால்...

இன்றைய விலையான 0.037 - 10000 பங்கினை = 370$ வாங்கி , மொத்த பங்கு 10100, ஒர் பங்கின் விலை 0.0372 என்று ஆக்கி, 0.0375 என்று இன்றே விற்றால் நட்டமில்லை இலாபம்.


சந்தையில் இன்றைய நிலைக்குக் கீழ் மட்டமில்லை. ஆகையால் விற்று வாங்குவது என்ற செயல்பாட்டுக்குப் பதில், வாங்கி விற்றலே உகந்தது.

உடனுக்கூடன் கூட வாங்கி விற்று இலாபம் பார்க்கலாம், கையிருப்பினை விற்று வாங்கியும் இலாபம் பார்க்கலாம்.

சந்தை விலைக்குத்தான் பிறர் வாங்க முன் வருவார்களே தவிர, நம் விலைக்கு அல்ல. ஆகையால் சந்தை நிலவரத்தினை கையில் கொண்டு ஒர் பொருளை விற்க வாங்க செயல்படுங்கள், மற்றும் கையிருப்பு கொள்வதும், கையிருப்பினை காலியாக்குவதையும் திட்டமிட்டு செய்தால் இலாபம் கிட்டும்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by marmayogi » Sun May 17, 2015 9:16 pm

அருமையான விளக்கம் சொன்னீர்கள். மிக்க நன்றி சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Mon May 25, 2015 12:23 am

Image
பங்குச் சந்தையில் தினசரி விற்று வாங்கி - வாங்கி விற்று இலாபம் பார்ப்பது என்பது சூதாட்டம் மாதிரி.


பெரிய முதலைகள் சிலர் MTV பங்குகளை 6 செண்டிலிருந்து 3.5-க்கு கொண்டு சென்று விளையாட்டுக்காட்டிக் கொண்டிருந்த வேளையில் ... ஜோவும் உள்ளே புகுந்து தன் பங்கிற்கு எவ்வளவு விளையாட்டுக் காட்ட முடியும் என்று காட்ட... மற்றொருவரும் இணைய என்று கடந்த 5 நாட்களில் பங்கின் விலையை 2.4 செண்ட்க்கு கொண்டு சென்றுவிட்டனர்.

ஜோ புதிய முதலீடு வர வேண்டும் என்பதற்காக பங்கின் விலை குறையவும் செயல்பட்டிருக்கலாம்.

இவர்களது விற்பனை நிலையைப் பார்க்கும் பொழுது கண்டிப்பாக மீண்டும் பங்கினை குறைந்த விலைக்கு வாங்கவே விற்றிருப்பர் என்பதால்... இதிலும் குறையலாம்...

ஆனால், 3 செண்ட் என்பதே குறைவான விலை தான். 5 செண்ட் என்பது தற்போதைய நார்மல் ... 10 செண்ட் என்பது டார்கெட். இதனை தொட 5+ மாதம் ஆகலாம். 5 செண்ட் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் ஏற ஆரம்பித்தால் உடனடியாக எட்டிவிடக்கூடியது.

மார்க்கெட்டில் எப்பொழுதும் பாட்டத்தினை குறி வைத்துவிட்டால்.. வாங்கி கையிருப்பது வைத்து நிலை கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது.

தற்பொழுது கிடைத்த குறைந்த விலை வாய்ப்பினைப் பயன்படுத்தி மீண்டும் 5000 பங்குகளை எனது உதிரித் தொகையிலிருந்து வாங்கி கையிருப்பு வைத்துள்ளேன்.

என் இலக்கு குறைந்தது 30% இலாபம் பார்ப்பது. அதற்கு ஆகும் நாட்கள் வரை காத்திருக்கும் வகையில் வருவாயில் உதிரிப்பணத்தினை மட்டுமே முதலீடு செய்திருப்பதால்... இன்று தேவை என்ற எந்தவொரு எண்ணமும் கிடையாது. கண்டிப்பாக 30% கிடைக்கும் என்ற இலக்கிற்கு காத்திருப்பு மட்டுமே.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by சாந்திவி » Wed May 27, 2015 9:19 pm

sir,
நான் 9000bits சேர்த்திருக்கிறேன். இதில் இன்வெஸ்ட் பண்ணலாமா?
இல்லையென்றால் வேற option எதாவது இருக்கா?. minimum amount எவ்வளவு
இருந்தால் நன்றாக இருக்கும்.
can you help me
thanks
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Wed May 27, 2015 10:06 pm

சாந்திவி wrote:sir,
நான் 9000bits சேர்த்திருக்கிறேன். இதில் இன்வெஸ்ட் பண்ணலாமா?
இல்லையென்றால் வேற option எதாவது இருக்கா?. minimum amount எவ்வளவு
இருந்தால் நன்றாக இருக்கும்.
can you help me
thanks

ஒர் பங்கின் விலை 0.035 $ மட்டுமே.

தினம் PV-இல் 10 செண்ட் கிடைப்பதால்... கிடைக்கும் பேலன்ஸ்க்கு வாங்கி வைத்தால் நாளை(6மாதம்) அதனை டபுளாக பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

1 டாலர் கூட டெபாசிட் செய்து பங்கு வாங்கலாம்.

பிட்காயின் மதிப்பு 2 டாலர் இருப்பதால்... அதனைக்கூட டெபாசிட் செய்து வாங்கி வைக்கலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by marmayogi » Thu May 28, 2015 9:41 am

Sir, account verification கண்டீபாக செய்ய வேண்டுமா?. already இந்த தளத்தில் 170.2% plan ல் 30 USD bitcoin investment செய்துவிட்டேன். மீண்டும் profit share ல் investment செய்யாலாம் என்று முடிவில் இருக்கிறேன். verify செய்யாமல் இருந்தால் payout கொடுப்பதில் பிரச்சினை வருமா ?.

முன்பே கேட்டு தெரிந்து கொண்டு investment செய்வது நல்லது என நினைக்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Thu May 28, 2015 10:49 am

marmayogi wrote:Sir, account verification கண்டீபாக செய்ய வேண்டுமா?. already இந்த தளத்தில் 170.2% plan ல் 30 USD bitcoin investment செய்துவிட்டேன். மீண்டும் profit share ல் investment செய்யாலாம் என்று முடிவில் இருக்கிறேன். verify செய்யாமல் இருந்தால் payout கொடுப்பதில் பிரச்சினை வருமா ?.

முன்பே கேட்டு தெரிந்து கொண்டு investment செய்வது நல்லது என நினைக்கிறேன்.

இன்று வரையிலும் பெர்சனலாக நாம் அவரை ஏமாற்றி பணம் சம்பாதிக்க நினைக்காத வரை வெரிபிகேஷன் பற்றியோ, டெர்ம்ஸ் பற்றியோ நினைப்பதில்லை. (பல கணக்குகள்/டவுன்லைனாக அக்கவுண்ட் உருவாக்கி கமிஷனையும் எடுத்தல்) ...

1000 $ டாலர் என்றால் கூட டாக்குமெண்டேஷன் வெரிபிகேஷன் இல்லாது அனுப்பப்படுகிறது.

பேங்க் வெயர் ட்ரான்ஸ்பர் கேட்பவர்களுக்காக டாக்குமெண்ட் வெரிபிகேஷன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது... ஆனால் மற்றதுக்கு அவர்கள் இதனை முக்கியத்துவம் ஆக்குவதில்லை.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”