மரணமடைவது எப்போது என்பதை எதிர்வுகூறும் கைக்கடிகாரம்

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

மரணமடைவது எப்போது என்பதை எதிர்வுகூறும் கைக்கடிகாரம்

Post by mubee » Fri Oct 11, 2013 3:01 pm

ஒருவர் எப்­போது மர­ண­ம­டைவார் என்­பதை அவர் மர­ண­ம­டையும் நேரத்­திற்கு நெருங்­கிய செக்கன் வரை எதிர்வு கூறக்­கூ­டிய கைக்­க­டி­கா­ர­மொன்றை சுவீடன் நாட்டு கண்­டு­பி­டிப்­பாளர் ஒருவர் உரு­வாக்­கி­யுள்ளார்.

பிரெடிக் கொல்டிங் என்­ப­வரால் கண்­டு ­பிடிக்­கப்­பட்­டுள்ள இந்த கைக்­க­டி­காரம் 'மரண கைக்­க­டி­காரம்' என அழைக்­கப்­ப­டு­கின்­றது.

இந்தக் கைக்­க­டி­காரம் மர­ண­ம­டையப் போகும் நேரத்தை கணித்­துக்­ கூ­று­வது மட்­டு­மல்­லாது மர­ண­மாகும் கணத்தை எண்­ணவும் ஆரம்­பிக்­கி­றது.

மேற்­படி கைக்கடி­காரம் அதனை அணிந்­துள்­ள­வரின் வயது, மருத்­துவ பிரச்­சி­னைகள் மற்றும் புகைப்­பி­டித்தல் பழக்­கங்கள் என்­பன தொடர்­பானஒரு தொகை கேள்­வி­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

அந்தக் கேள்­விகள் அனைத்­துக்கும் பயன்­பாட்­டாளர் பதி­ல­ளித்­ததும் அது அத்­த­க­வல்­களை பகுப்­பாய்வு செய்து அவர் மர­ண­ம­டையும் தரு­ணத்தை கணக்­கிட்டு எண்ண ஆரம்­பிக்­கி­றது.

இந்த ரிக்கர் கைக்­க­டி­கா­ரத்தின் விலை 59 அமெ­ரிக்க டொல­ராகும்.

இந்த கைக்­க­டி­கா­ர­மா­னது எஞ்சியுள்ள வாழ்வின் அளவை அறிந்து அதனை பயனுள்ளதாக வாழ பயன்பாட் டாளர்களுக்கு உதவும் என பிரெடிக் கூறுகிறார்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மரணமடைவது எப்போது என்பதை எதிர்வுகூறும் கைக்கடிகாரம்

Post by marmayogi » Mon Apr 06, 2015 5:36 pm

மரணத்தை வெல்லும் நுட்பத்தை விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்க முடியுமா!!!!.

மரணத்தை நாம் தீர்மானிக்க வேண்டும். கடவுள் தீர்மானிக்க கூடாது. தானாக மரணம் வருவது விதி. நாமே நம் உயிரை உடலை விட்டு பிரிப்பது மதி.

மெய்ஞானத்தால் மரணத்தை வெல்லலாம். சாகாதவர்களே சன்மார்க்கி.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”