Local Guide - Good Opportunity to working with Google

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Local Guide - Good Opportunity to working with Google

Post by ஆதித்தன் » Wed Jul 20, 2016 12:21 pm

Local Tourist Guide -
Good Opportunity to working with Google - Share Street View Photos with Google Map and Get Local Guide Badge from Google
[youtube]https://www.youtube.com/watch?v=2Ecutwxn75M[/youtube]

ஆன்லைன் வேலை அல்லது பிசினஸ் செய்வோர்க்கு மிக முக்கியமான ஒன்று ட்ராபிக். அந்த டிராபிக்கினை பெரும்பான்மையான புதிய சைட்களுக்கு கொடுப்பது கூகுள். அதிலும் ஒருவர் கூகுள் சர்ச் பகுதியில் தேடிதான் பிற தளங்களை அறிந்து கொள்கிறார்கள்.

அவ்வாறு தேடும் பொழுது நமது தளம் முதன்மையாக இருக்க வேண்டும் என்றுச் சொன்னால், கூகுளோடு சேர்ந்து வேலை செய்தால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் கூகுள் தற்பொழுது லோகல் பிசினஸ் அடிங் என்ற ப்ராஜக்டினை நடத்தி வருகிறது. உங்களது பகுதியில் இருக்கும் முக்கிய பிசினஸ் பாயிண்ட்களை(பேங்க்,கடைகள்,கவர்மெண்ட் ஆபிஸ் போல) கூகுள் இணைத்துக் கொடுத்தல் மற்றும் ஏற்கனவே இணைக்கப்பட்டதற்கு போட்டோஸ் கொடுத்து மேலும் அதன் தரத்தினை உயர்த்துதல்.. ரிவிவ்ஸ் கொடுத்தல் என செயல்பட்டால்... உங்களுக்கு லோகல் ஹைடர் என்ற பேட்ஜ் வழங்குவதோடு, உங்கள் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளை லோகல் காலண்டரில் வெளியிடலாம்.

ஆன்லைனில் இருக்கும் அனைவரும் கூகுளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்... அதுமட்டுமில்லாமல், கூகுள் மேப்பினையும் பலரும் பயன்படுத்தி, லோகலில் இருக்கும் அலுவலங்களை அறிந்து கொள்கிறார்கள். மேலும், லோகல் காலண்டரினையும் விரைவாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் கூகுளே அறிமுகம் செய்து வைத்துவிடும்.

லோக்கல் காலண்டர் பயன்படுத்துவர்களை நம் பிசினஸ்க்குள் கொண்டுவர, அவ்வப்பொழுது ஆன்லைன் ஜாப் ட்ரெயினிங்க் நிகழ்ச்சி, ஆன்லைன் பிசினஸ் கலந்துரையாடல் என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒர் நிகழ்ச்சி நடப்பது போல நாம் காலண்டரில் இணைத்து.. நமது அருகாமையில் இருக்கும் அனைவரையும் நமது தளத்திற்கு வர வைத்துவிடலாம்.

அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே டூரிஸ்ட் கைடு ஆக, மாகாபலிபுரம், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், திருப்பரப்பு, தேக்கடி, மற்றும் முக்கிய நகரங்களான, தஞ்சாவூர், மதுரை, பழனி, திருச்செந்தூர் மற்றும் பிரபல சுற்றுலா தளங்கள்.. வழிபாட்டுத் தளங்கள் என அப்பகுதியினைப் பற்றிய விவரங்களை நீங்கள் அப்டேட் செய்யும் பொழுது, கூகுள் லோகல் கைடு பேட்ஜ் மூலம், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அறிமுகம் ஆவதோடு.. அதன் மூலம் பெரிய வருவாயும் பார்க்க முடியும்.

வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பிடித்தமானதாக இருக்குமாயின்... விரும்பிச் செய்தால்... எதுவாகினும் ஏதேனும் ரூபத்தில் பணம் ஆக்கிக் கொள்ளலாம்.

மேலும், முக்கியப் பகுதிகளின் போட்டோஸ் இருந்தால் இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொண்டால் நானும் அப்பகுதிக்கான போட்டாவாக அப்லோடிங்க் செய்து, கூகுள் லோகல் கைடு பேட்ஜ் பெற்றுக் கொள்ளுவேன்.

குறிப்பு, போட்டோ அனுப்புவர்கள்... தங்களது மொபைல் போனில் எடுத்தப் போட்டோவினை இதற்காக என்று அனுப்பி வையுங்கள்... ஆன்லைனில் கிடைப்பவை வேண்டாம்.

அட்ரஸ் கண்டுபிடிக்க உதவுவது போல... ஸ்ட்ரிட் விவ் ஆக போட்டோஸ் எடுத்துக் கொடுங்கள்.

நன்றி.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”