Page 1 of 1

Sharing Mobile Internet Data to Computer/LapTop - Cheapest Net for Online Job

Posted: Mon Jun 20, 2016 8:05 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=Jp_a_BI-sx4[/youtube]

அனைவரது கையிலும் தற்பொழுது அன்ராய்டு மொபைல் போன் உள்ளது. மொபைலில் இண்டர்னெட் வசதியினையும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். நமது தளத்திற்கு வரும் 50% நபர்கள், மொபைல் இண்டர்நெட் வழியாகவே வருகின்றனர். அவர்களுக்கும் ஆன்லைன் ஜாப் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருக்கிறது.

ஆனால், ஆரம்பத்தில் இண்டர்நெட் கனெக்சன் எடுக்கவும், அதற்கென பில் கெட்டவும் தயங்குகிறார்கள். வருவாயே இல்லாமல் எப்படி பில் செலவு செய்வது என்பது மட்டுமில்லாமல், இதனை செய்வதால் காசு வருமா என்ற ஒர் கேள்வியினை வைத்துள்ளனர்.

அப்படியானவர்கள், எளிதாக அக்டிவேட் செய்யக்கூடிய மொபைல் இண்டர்நெட் வழியாகவே ஆன்லைன் ஜாப் செய்து வருவாய் பார்க்கலாம். இதற்கான செலவு 2ஜி இண்டர்நெட்டிற்கு மாதம் ரூ.250 தான் ஆகும்.

ரூ.250 செலவு செய்து நீங்கள் நிறைய சம்பாதிக்க முடியும். அதற்கான ஆன்லைன் ஜாப் விவரங்கள் நிறைய படுகையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் படித்து நீங்கள் செய்யலாம்.

வீட்டில் லேப்டாப் அல்லது கணிணி இருந்தால் ரொம்ப வசதியாக, மொபைல் இண்டர்நெட்டினை லேப்டாப்/கம்ப்யூட்டர் உடன் இணைத்து கம்ப்யூட்டரிலேயே செய்யலாம்.

2 ஜி வசதியே ஒரளவுக்கு ஆரம்பக்கட்டத்தில் ஆன்லைன் செய்ய வசதியான ஒன்றுதான்.

போகப்போக உங்களது வருவாய்க்கு ஏற்ப அதிக வேகம் கூடிய 3ஜி நெட் அல்லது ப்ராண்ட்பேண்ட் கனெக்சன் எடுத்துக் கொண்டால் போதும்.

தற்போதைய அண்ட்ராய்டு மொபைல் மாடல்களில் HotSpot என்றொரு வசதியுள்ளது. அதன் மூலம், தங்களது USB Charger கேபிள் வழியாகவே ஒர் கிளிக்கில் இண்டர்நெட்டினை கம்ப்யூட்டருடன் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான விவரத்தினை இந்த விடியோவில் கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் பல பயனுள்ள வருவாய் தகவல்களை அறிந்து கொள்ள, யூடியூப் சேனலை சப்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.... தினம் தினம் புதியவற்றினை கற்றுக் கொள்வதோடு, வருவாய் தொகையை புதிய கற்றலால் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.



[youtube]https://www.youtube.com/watch?v=NE643AIi-8U[/youtube]