Page 1 of 1

is WhatsApp Illegal in India? is banned in india - Tamil

Posted: Fri Apr 15, 2016 4:44 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=UYU7SkkxNeU[/youtube]

இன்று பொதுப்படையாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வரும் ஒர் தகவல், வாட்ஸ் பயன்படுத்துவது இந்திய சட்டத்திற்கு எதிரானதா? இதனால் ஏதும் நடவடிக்கையை நம் மீது அரசு எடுக்குமா என்ற அச்சம் இளைஞர்களுக்கு இடையே எழும் அளவிற்கு, வாட்ஸ்பயன்படுத்துவது என்பது இந்திய சட்டத்திற்கு எதிரான ஒர் குற்றம் என்ற தகவல் எங்கும் நிறைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், இந்திய அரசு இணைய சேவையாளர்களுக்கு அனுமதியளித்த 40 Encryption-க்கும் மேல் கூடுதல் எங்கிரிப்சன் பயன்படுத்தி, தகவல் பரிமாற்றத்தினை பாதுகாப்பானதாகவும் தனிப்பட்ட விடயமாகவும் சமீபத்தில் வாட்ஸப் மாற்றியதுதான் காரணம்.

அதிகப்படியான பாதுகாப்பு வளைய என்கிரிப்சன் பயன்படுத்துவதன் மூலம் நாம் அனுப்பும் தகவலை யாருக்கு அனுப்பினோமோ அவரைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது என்பதுதான்... ஏன் வாட்ஸ் நிறுவனத்திடமே அதனைப் பார்க்க ஏதுவான ஒர் செயலி கிடையாது என்பதுதான் இதன் முக்கிய அம்சம்.

ஆனால், இந்திய அரசு... அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ன தகவல்கள் பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற விடயத்தினை தேவைப்பட்டால் அரசு கேட்கும் பொழுது கொடுக்க வேண்டும் என்ற விதியினை தொலைதொடர்புத் துறையில் கொண்டுள்ளது. அந்த விதியினை மதிக்காமல் வாட்ஸ்அப் தற்போது புதிய என்கிரிப்சன் பாதுகாப்பு வளையத்தினை தன் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது.

இதனால், வாட்ஸ் அப் பயன்படுத்துவது என்பது தற்போதைய நிலையில் இந்திய சட்டத்திற்கு எதிரானதுதான்... Illegal தான். ஆனால், அரசு எந்தவொரு நடவடிக்கையும் தற்பொழுது எடுக்க இருப்பதாக இல்லை. ஒர்வேளை வாட்ஸ் பயன்பாட்டிற்கு தடை உத்தரவு வரலாம் என்று பேசிக் கொண்டாலும், இதனை பெரும்பான்மையாக பயன்படுத்தும் இளைஞர்களிடமிருந்து கெட்டப் பெயரினை வாங்க வேண்டியிருக்கும் என்பதால்... ஏதேனும் பேசிகிசி ஒர் முடிவெடுப்பார்கள்..