Uninstall MyStartSearch - Spam Browser Addon

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Uninstall MyStartSearch - Spam Browser Addon

Post by ஆதித்தன் » Tue Dec 30, 2014 9:59 am

ஆன்லைன் ஜாப் செய்து கொண்டிருக்கும் நாம் ... பல நேரங்கள் டவுன்லோடிங்க் ஆபர் கொடுக்கும் 1 செண்ட் ..4 செண்ட்க்கு சில ப்ரோக்கிராம்களை டவுன்லோடிங்க் செய்யும் பொழுது... நம்மை இடஞ்சல் செய்யக்கூடிய விளம்பரத்தினை புகுத்தும் இணைப்புகளை ப்ரவுசர்களில் சேர்க்கும் ப்ரோக்கிராமும் இணைந்துவிடுகின்றன.

இப்படி தேவையில்லாத விளம்பர ப்ரோக்கிராம் டவுன்லோடிங்க் ஆகி... அதனை UNINSTALL செய்வதற்கு ஏற்படும் சிரமம் பார்த்தே .... தற்பொழுதும் 10-க்கும் மேற்பட்ட டவுன்லோடிங்க் ஆபர் இருந்து செய்யச் சொல்வதனை... முன்பு ஏற்பட்ட பிரச்சனையால் சொல்வதே இல்லை.

ஆனால்... நான் இன்று க்ளிக்சென்ஸில் 4 செண்ட் டவுன்லோடிங்க் ஆபர் கம்பிளிட் செய்தால் ... கிடைக்க வேண்டிய ஒர் டாலர் போனசினை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று டவுன்லோடிங்க் செய்தால் ... இரண்டு தேவையற்ற ப்ரோக்கிராம் டவுன்லோடிங்க் ஆகிவிட்டன.

அதில் ஒன்றினை .. ஒர் க்ளிக்கில் அன்-இன்ஸ்டால் செய்துவிட்டாலும் ... மற்றொன்றான MyStartSearch என்ற ப்ரோக்கிராம் அன்-இன்ஸ்டால் செய்தாலும் ஆகவில்லை.

இணையத்தில் தேடினால்... அதற்கும் ஒர் சாப்ட்வேர் டவுன்லோடிங்க் செய்யச் சொல்லி கொடுக்கப்பட்டிருந்தது. எதற்கும் முயற்சித்துப் பார்ப்போமே .. ஏதேனும் வழியிருக்கிறதா ... என்று அந்த சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்யாமலே மீண்டும் மீண்டும் யோசித்து செய்து பார்த்ததில்... ஒர் வழி கிடைத்தது...
முதலில் உங்களது ப்ரோக்கிராம் பகுதிக்குள் சென்று .... லேட்டஸ்ட்டாக டவுன்லோடிங்க் ஆனதின் லிஸ்ட் பார்த்து MyStartSearch ப்ரோக்கிராமினை கண்டுபிடியுங்கள்.

அன்-இன்ஸ்டால் கொடுங்கள்..
அன்-இன்ஸ்டால் கொடுத்தால் ஒர் கேப்ட்சா விண்டோ வரும்.. அதனை டைப் செய்துவிட்டு Continue கொடுங்கள்..


அடுத்து Waiting என்று அந்த ஸ்டேட்டஸ் பார் முழுமையாக Green/பச்சை கலர் ஆனப் பிறகும் அப்படியே நிற்கும் .. அப்பொழுது Continue கொடுங்கள்.

தற்பொழுது Repair என்ற பட்டன் வரும் .... நீங்கள் ரிப்பேர் என்று சொல்லிக் கொடுத்து கண்டினியூவ் கொடுத்தால்... அன்-இன்ஸ்டால் ஆகாது...

Repair என்றப் பட்டனைக் க்லிக் செய்யாமல் ... Continue பட்டனைக் க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுதுதான் உண்மையாக அன்-இன்ஸ்டால் செய்யக்கூடிய விண்டோ வரும்.

அதில் கொடுக்கப்பட்ட ஆப்சன் ஒவ்வொன்றிலும் டிக் கொடுத்து ஆம்/Yes சொல்லி... ஒவ்வொன்றிலிருந்தும் அதனை நீக்க்குங்கள்.

அனைத்திலும் டிக் செய்துவிட்டு continue கொடுத்து சென்றால் .. கிடைக்கும் Over மூலம் அந்த ப்ரோக்கிராம் அன்-இன்ஸ்டால் ஆகிவிடும்.


எந்தவொரு சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் .. எளிதாக அன்-இன்ஸ்டால் செய்துவிட்டேன்.


யாராவது படுகை.காம் திறக்கும் பொழுது .... Search என்ற பட்டனுக்கு கீழ் உள்ள எங்களது இமேஜ் பேனர் விளம்பரத்தினைத் தவிர்த்து .... மற்ற விளம்பரங்கள் இருந்தால் ... அது எங்களுடைய விளம்பரம் அல்ல.

அது உங்களுடைய ப்ரவுசரில் உள்ள இணைப்பினால் காட்டப்படுவது.

படுகை தமிழ் பக்கம் என்பதால் .. இதனை புரிந்து கொள்ள முடியாத அந்த விளம்பர இணைப்பு, ஆபாச விளம்பரத்தினைக் காட்டுவதாக ... ஏற்கனவே இருவர் சொல்லியிருக்கிறார்கள் ...

இந்த விளம்பரத்தினை நான் தான் இணைத்திருப்பதாக.... அவர்களது அறியாமையால் என்னிடம் கேட்டார்கள் ...

நீங்கள் அவ்வாறு இல்லாமல் ... உங்களது ப்ரவுசரினை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: Uninstall MyStartSearch - Spam Browser Addon

Post by arrs » Tue Dec 30, 2014 2:54 pm

மிக பயனுள்ள அருமையான பதிவு
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”