அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
sathikdm
Posts: 50
Joined: Thu May 24, 2012 7:04 pm
Cash on hand: Locked

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Post by sathikdm » Sun Oct 19, 2014 3:34 pm

Image
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!

நீங்கள் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்றால் நீங்கள்தான் அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். சினிமாவில் நடப்பது போல யாரும் வந்து உங்களை பணக்காரனாக்கமாட்டார்கள்.

இன்டர்நெட் மூலம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி இருக்கின்றது என்றுதான் எங்களால் வழிகாட்ட முடியும். அதற்குமேல் உங்களது முயற்சிகள்தான் உங்களை நல்லநிலைக்கு கொண்டுசெல்லும்.

உதாரணமாக பசி என்று வந்தவனுக்கு இலையில் சாப்பாடு பரிமாறத்தான் முடியும். அதை அவன்தான் கையால் எடுத்து உண்ணவேண்டும், ஒருவர் வந்து ஊட்டிஎல்லாம் விடமுடியாது.

அதேபோல்தான் உங்களுக்காக மற்றவர்கள் அவர்களது நேரத்தை வீணடித்து உதவிகளை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. நீங்கள் முன்னேறவேண்டும் என்றால் நீங்கள்தான் நன்றாக யோசிக்கவேண்டும் நன்றாக உழைக்கவேண்டும்.

சம்பாதிப்பதற்கான வழி என்னவென்பதை இனி பார்ப்போம்.

வெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு வெப்சைட் டிஸைன் செய்து கொடுப்பதுதான் தற்போதைய நிலையில் ஒரு நல்ல தொழிலாக உள்ளது. ஏனென்றால் தற்போதுதான் அனைத்து வகையான தொழில் புரிபவர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது.

வெப்சைட்டுகளை பற்றி ஒருவர் சொல்லித்தான் நமக்கு தெரியவேண்டும் என்பதில்லை. நாம் அன்றாட வாழ்வில் தினமும் பலதரப்பட்ட வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையை போல் ஆகிவிட்ட காரணத்தினால் தொழில் செய்யும் அனைவரும் தங்களுக்கென்று விசிட்டிங் கார்டு போல வெப்சைட் ஒன்றினையும் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பலருக்கு வெப்சைட்டின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளாததற்கு காரணங்கள்,

1. யார் வெப்சைட் டிசைன் செய்து தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

2. வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பவர்கள் இருபதாயிரம் முப்பதாயிரம் என்று கட்டணம் கேட்டிருப்பர்.

அனைவராலும் அவ்வளவு செலவு செய்து வெப்சைட் ஆரம்பிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நிச்சயம் அனைவராலும் வெப்சைட் ஆரம்பிக்க ரூபாய் ஐயாயிரம் - பத்தாயிரம் செலவு செய்ய முடியும்.

மற்றவர்கள் இருபதாயிரம் வாங்கும் வெப்சைட்டிற்கு நாம் ஐயாயிரம் ரூபாய் - பத்தாயிரம் ரூபாய் வாங்கினால் நமக்கு கட்டுப்படியாகுமா என்று நாம் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் நீங்கள் நன்றாக வெப்சைட் டிசைன் செய்யக்கற்றுக்கொண்டீர்கள் என்றால் உங்களால் அதிகபட்சம் இரண்டே நாட்களில் ஒரு வெப்சைட்டினை நல்லமுறையில் செய்துகொடுக்க முடியும்.

ஒரு வெப்சைட்டிற்கு Rs.5000 வாங்குகிறீர்கள் என்றால் ஹோஸ்டிங் + டொமைன் வாங்க ஆகும் செலவு Rs.1000 போக உங்களுக்கு Rs.4000 இலாபம் கிடைக்கும். மாதம் ஐந்து வெப்சைட் ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுத்தாலே போதும் Rs.4000*5 = Rs.20000 மாத வருமானமாக கிடைக்கும். இலவசமாக வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”