பேஸ்புக்குக்கு சம்பாதித்து கொடுப்பது நாம் தான்! எவ்வளவு?

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பேஸ்புக்குக்கு சம்பாதித்து கொடுப்பது நாம் தான்! எவ்வளவு?

Post by ஆதித்தன் » Sat Sep 15, 2012 11:47 pm

Image
FaceBook என்ற ஒன்றினைத் தெரியாத இளைஞர்கள் இருப்பார்களா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் முதியவர்களே பேஸ்புக்கில் உட்கார்ந்து, இளம் சேட்டைகள் பல புரிந்து கொண்டிருக்கும் பொழுது இளசுகள் அத்தகைய சமூகத் தளத்தினை தெரியாது என்பார்களா? ஆனாலும், அதன் மூலம் நல்வழியாகவும் பொழுதினைப் போக்க முடியும் என நல்ல நண்பர்களைக் கொள்வதனால் உறுதியாகிறது. அதே நேரத்தில் சில தவறுக்கும் அது வழிவகுக்கும் என்பதனை மறுக்கவும் முடியாது.

கெட்டது ஏன் நினைப்பான்? நல்லது பல இருக்க! அதைப்போல் சிறப்பாக பொழுது நன்றாகக் கழியும் பொழுது அங்கு செல்ல யார் தான் தவறுவார். அப்படி தவறாமல் தினமும் பேஸ்புக் உபயோகிக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் போல் பலமடங்கு பணத்தொகையில் அதன் மதிப்பும் உயர்ந்து கொண்டே போகிறது. அவ்வாறு ஜீஹர் பெர்க் பெரும் பணக்காரராய் ஆவதற்கு நீங்கள் சம்பாதித்து கொடுப்பதுதான் காரணம் என்றால் நம்புவீர்களா? அப்படியே உங்கள் அந்தரங்க தகவல்களை பிறருக்கு விற்கிறார்கள் என்பது தெரியுமா?

நம்பித்தான் ஆக வேண்டும்.

கடந்த 10 மாதம் முன்பு பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து அவரது அந்தரங்க விவரங்களை பிறருக்கு விற்பனையும் செய்வதும், அதன் வழியாக விளம்பரங்களை கவர்வதும் என எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள்.

முதலில் https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும். முதல் பக்கத்திலேயே கேட்கப்பட்டுள்ள கேள்விக்கான உங்களது பதில்களை தேர்வு செய்து சப்மிட் கொடுக்கவும். உடனே உங்கள் மூலம் சம்பாதிக்கும் தொகை வரும். அத்தொகை இன்றைய பேஸ்புக் பங்குச் சந்தையின் நிலவரத்தையும் ஓப்பிட்டு வழங்கும் என்பது கூடுதல் உண்மை.

மேலும் விவரமாக எப்படியான நமது அந்தரங்க தகவலை பேஸ்புக் விற்கிறது என்ற விவரம் பார்க்க > கிளிக் > http://5.mshcdn.com/wp-content/uploads/ ... aphic1.jpg

குறிப்பு : மேல் உள்ள பட லிங்கை கிளிக் செய்தவிட்டு சூம் செய்து பார்க்கவும்.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”