பயர்பாக்ஸ் பிரவுசர் மென்பொருள் பதிப்பு 29

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

பயர்பாக்ஸ் பிரவுசர் மென்பொருள் பதிப்பு 29

Post by ரவிபாரதி » Thu Jun 26, 2014 4:07 pm

அண்மையில் பயர்பாக்ஸ் பிரவுசரின் 29 ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெஸ்க்டாப், டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போன் இடைமுகம் என அனைத்திலும் ஒரே மாதிரியான தோற்றம் தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரவுசர்கள் காட்டப்படும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு ஓர் அருமையான வசதியாகும். பலவகையான சாதனங்களைப் பயன்படுத்துவோர் தடுமாற வேண்டியதில்லை.

இதுவரை வந்த பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகளில், இதுவே வாடிக்கையாளர்களின் அனைத்து விருப்பங்களுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என மொஸில்லா அறிவித்துள்ளது. பார்வைக்குக் கம்பீரமாகவும் அதே நேரத்தில் அதிக திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பயனாளர்களின் கவனத்தை இதில் முதலில் ஈர்ப்பது இதன் இடைமுகமே. குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களின் புதிய பதிப்புகளில் காணப்படுவது போல, சிறிய மூன்று வரி ஐகான் இதில் மேல் வலது பக்கம் மெனுவினைக் காட்ட தரப்படுகிறது. அனைத்துமே, அப்பக்கத்தின் வலது புறம் ஒதுக்கப்பட்டுள்ளது. மெனுவில் கிளிக் செய்தால், பயர்பாக்ஸ் பிரவுசரில் நாம் மேற்கொள்ள வேண்டிய அனைத்தும் மொத்தமாக ஓரிடத்தில் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். customize என்னும் டூலில் கிளிக் செய்து, எந்த ஒரு கூடுதல் வசதியையும் நீக்கலாம் மற்றும் இணைக்கலாம். இவற்றில் எதை வேண்டுமானாலும், இழுத்து அமைக்கும் வகையில் தரப்பட்டுள்ளது. “pin tab” அழுத்தி அடிக்கடி பயன்படுத்தப்படும் இணையப் பக்கங்களை, அப்படியே இழுத்து வந்து, ஒரே கிளிக்கில் பயன்படுத்தும்படி பின் (pin) செய்து வைக்கலாம். டேப்கள் தற்போது சற்று வட்டவடிவமாகக் காட்டப்படுகின்றன. இதையே கம்பீரமான தோற்றம் என மொஸில்லா அழைக்கிறது.

டேப்ளட் பி.சி.க்களிலும், மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்த வசதியாக புதிய தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. தொடு உணர் திரைகளில் இயக்க பெரிய அளவில் பட்டன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரே ஒரு கிளிக் செய்து, ஓர் இணையப் பக்கத்தினை புக்மார்க் செய்துவிடலாம்.

இன்னொரு குறிப்பிட்ட வசதி, சமூக இணைய தளங்களுக்கானது. Firefox Share என்பதனை இயக்கிவிட்டால், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களின் சேவை பெறுவதனை இணைத்துவிடலாம். நாம் காண்கின்ற இணைய தளங்களை விட்டு நீங்காமலேயே, அவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் பல புதிய வசதிகளைக் கொண்டு இந்த பதிப்பு வெளிவந்துள்ளது.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”