Page 1 of 1

மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி..

Posted: Mon Apr 28, 2014 5:57 pm
by sathikdm
Image

மளிகைகடைக்கும் வெப்சைட்டிற்கும் என்ன சம்பந்தம்? மளிகைகடைக்கு வெப்சைட் ஆரம்பிப்பதால் என்ன பிரயோஜனம் என்று தலைப்பைப்பார்த்ததுமே யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் நண்பர்களே...!

மளிகைக்கடைகளில் சாதாரணமாக எப்படி விற்பனை நடக்கிறது என்பதனையும் வெப்சைட் ஆரம்பித்தால் விற்பனை எப்படி நடக்கும் என்பதனையும் பார்ப்போம்.

முதலில் வெப்சைட் இல்லாமல் எப்படி விற்பனை நடக்கிறது என்பதனை பார்ப்போம்,

இந்த முறையானது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஏனென்றால் உங்களில் பலர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் இவ்வளவு ஏங்க தினமும் ஒரு தடவையாவது எதாவது ஒரு பொருள் வாங்க நீங்க மளிகைக்கடைக்கு போயிருப்பீங்க, அங்க எப்படி விற்பனை நடக்குதுன்னு பார்த்து இருப்பீங்க.

பெரிய கடையா இருந்தா நிறைய ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க சின்ன கடையா இருந்தா குறைவான ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க. நீங்க கடைக்கு போய் அங்க வேலை செய்யுறவங்க கிட்டே என்ன பொருள் வேணும்னு சொன்னா அவங்க நீங்க கேட்குற பொருட்களை தேடி எடுத்து வந்து கொடுப்பாங்க. பெரிய கடையா இருந்தா கம்பியூட்டர்ல பில் போட்டு கொடுப்பாங்க சின்ன கடையா இருந்தா பேப்பர்ல எழுதி பில் போட்டு கொடுப்பாங்க. அந்த பில்ல கல்லாவுல இருக்குறவங்க கிட்டே கொடுத்து பணத்த கொடுத்துட்டு பொருள எடுத்துட்டு வந்துடுவீங்க. இவ்வளவுதான் சாதாரணமா எல்லா மளிகைகடைலயும் நடக்குற நடைமுறை.

இப்போ வெப்சைட் மூலமா எப்படி விற்பனை நடக்கும்னு பார்ப்போம்,

இப்போ உங்க மளிகைக்கடைக்குன்னு ஒரு வெப்சைட் ஆரம்பிக்கறோம்னு வச்சுக்கோங்க. உதாரணத்திற்கு நாங்க ஏற்கனவே ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட்டை எடுத்துகொள்வோம். www.yasogrocery.com தான் நாங்கள் மதுரையில் உள்ள Yaso Grocery எனும் சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட். இந்த வெப்சைட் மூலமாக நகரத்தின் வெகு தொலைவில் உள்ள Yaso Grocery இன் கஸ்டமர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வெப்சைட் மூலம் செலக்ட் செய்து ஆர்டர் செய்தாலே போதும். Cash On Delivery முறை மூலம் பொருட்களை கஸ்டமரின் வீட்டுக்கே சென்று கொடுத்துவிட்டு பணத்தினை பெற்றுக்கொள்வர் அல்லது கஸ்டமர் பொருட்களை ஆர்டர் செய்யும்போதே அதற்குண்டான தொகையினை வெப்சைட்டிலேயே Credit Card / Debit Card / ATM Card அல்லது Net Banking மூலம் செலுத்திவிடலாம்.

இதன்மூலம் ஒரு கஸ்டமர் உங்களின் கடைக்கு வந்துதான் பொருட்களை வாங்கவேண்டும் என்பதில்லை. அவர்கள் வீட்டில் இருந்தே கூட வெப்சைட் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்தமுறையானது நகரங்களில் நிச்சயம் நல்ல வரவேற்பினைப்பெரும். ஏனென்றால் நகரங்களைப்பொறுத்தவரை ஏகப்பட்ட வேலைப்பளு, டிராபிக் மற்றும் பொல்யூசன் போன்ற பல சிக்கல்கள் உள்ளதால் மக்களும் இதனை விரும்புவர்.

அதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் மட்டுமே சேல்ஸ் செய்ய விரும்புவோர் தங்களுக்கென்று முக்கியமான இடத்தில் அதிக வாடகை கொடுத்து கடை பிடிக்க வேண்டியதில்லை. குறைந்த வாடகையில் ஊருக்கு வெளியில் ஒரு குடன் போன்று அல்லது வீட்டிலே கூட பொருட்களை வைத்து வெப்சைட் மூலம் ஆர்டர் செய்வோருக்கு அனுப்பலாம்.

உங்களது மளிகைகடைக்கும் வெப்சைட் தேவைப்பட்டால் என்னைத்தொடர்புகொள்ளவும்.

சத்தியமூர்த்தி,
ஈமெயில் : p.sathikdm@gmail.com
மொபைல் : +91 9486854880

உங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாராவது மளிகைகடை வைத்திருந்தால் அவர்களிடம் இந்த பதிவினை பகிர்ந்துகொள்ளுங்கள் மாற்றம் வெப்சைட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறுங்கள். மளிகைக்கடைகளுக்கு என்றில்லை வெப்சைட் மூலம் பொருட்களை விற்பது தொடர்பாக யாருக்கு ஐடியா இருந்தாலும் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு தகுந்த வகையில் வெப்சைட் உருவாக்கித்தரப்படும்.

இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.