உலகப் புகழ் பெற்ற ஆங்கில வார்த்தை - (2013)

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
Tamilmech
Posts: 98
Joined: Mon Dec 16, 2013 2:20 pm
Cash on hand: Locked

உலகப் புகழ் பெற்ற ஆங்கில வார்த்தை - (2013)

Post by Tamilmech » Sat Dec 21, 2013 8:50 pm

Selfie’ என்ற ஆங்கில வார்த்தை இவ்வருடத்துக்கான (2013) உலகின் மிகப் புகழ் பெற்ற வார்த்தையாக ஆக்ஸ்போர்ட் (Oxford) அகராதிகளால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

ஸ்மார்ட் கைத் தொலைபேசி அல்லது வெப்கேம் மூலம் தன்னைத் தானே புகைப்படம் எடுத்து ஒரு சமூக ஊடக வலைத் தளத்தில் (social media website) தரவேற்றம் (upload) செய்யப்படும் எந்த ஒரு புகைப்படத்தினதும் பெயரே ‘Selfie’ என ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியால் இதற்கு வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆங்கில மொழியில் இவ்வார்த்தைக்கான பிரயோகம் (frequency) 17 ஆயிரம் சதவீதம் அதிகரித்திருந்ததாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. இந்த வார்த்தைக்கு அடுத்த இடத்தில் ‘Twerk’ மற்றும் ‘Binge watch’ ஆகியவை அமைந்துள்ளன. Twerk என்பது மிலே சைரஸ் எனும் அமெரிக்க பிரபலத்தின் ஒரு நடன அசைவையும் Binge watch என்பது அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தையும் குறிக்கும்.

ஒவ்வொரு வருடமும் ஆங்கில மொழியில் அவ்வருடத்தின் மிக அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்லுக்கு மதிப்பளிப்பதன் நோக்கம் ஆங்கில மொழியின் புத்துணர்ச்சியை அதனைப் பேசுபவர்கள் உணர்ந்து கொள்ளவும் சமூக, அரசியல் மற்றும் தொழிநுட்ப ரீதியில் அதன் விரிவாக்கத்தை அறிந்து கொள்வதற்கும் ஆகும்.

இந்நிலையில் Selfie என்ற வார்த்தை முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஆன்லைன் கருத்துக் கணிப்பில் பயன்படுத்தப்பட்டு வந்தே அகராதியில் இடம்பிடித்ததாகக் கூறப்படுகின்றது. இந்த வார்த்தை பிரபலமடைந்த பின்னர் வாடிகனில் போப்பாண்டவருடன் இளைஞர்கள் இதே போன்று Selfie புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டதில் அப்புகைப்படம் மிகப் பிரபலம் அடைந்ததிருந்தது. :thanks: :ros: :rock:
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”