இன்று நவராத்திரி 8-ம் நாள்: நரசிம்மி வடிவம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

இன்று நவராத்திரி 8-ம் நாள்: நரசிம்மி வடிவம்

Post by cm nair » Sat Oct 12, 2013 12:30 pm

நவராத்திரி பண்டிகையில் இன்று (சனிக்கிமை) 8-வது நாள். நம்மை காத்தருளும் தேவி இன்று நரசிம்மி வடிவம் எடுக்க உள்ளாள். இன்றைய தினம் ரத்த பீஜன் தேவியால் வதம் செய்யப்பட்ட தினமாகும். இதனால் அதற்கு ஏற்ப அலங்காரம் செய்வார்கள்.

கரும்பு வில் பிடித்திருக்க, சுற்றிலும் அனிமா உள்ளிட்ட அஷ்ட சக்திகள் எழுந்திருக்க கருணையுடன் தேவி இருக்கும் வகையில் கோவில்களில் அம்மனை அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். இந்த அலங்காரத்தில் அன்னையை நாம் வழிபட்டால் வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும்.

இன்று அஷ்டமி என்பதால் இன்றைய வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை நவராத்திரியின் கடந்த 7 நாள் பூஜையை தவற விட்டவர்கள் கூட இன்று தேவியை பூஜித்தால் நவராத்திரி வழிபாட்டுக்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அம்மனை வரவேற்கும் வகையில், நாணயங்களைக் கொண்டு பத்ம கோலம் போடலாம். பூ வகைகளில் மருதோன்றி, ரோஜா, சம்பங்கி, வெண்தாமரை ஆகியவற்றை பயன்படுத்தலாம். பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். சிலர் இன்று சொஜ்ஜி அப்பம் படைத்து வழிபடுவது உண்டு.

இலை வகைகளில் பன்னீர் இலையையும், பழ வகைகளில் திராட்சையையும், சுண்டல் வகைகளில் மொச்சை சுண்டலையும் பயன்படுத்தலாம். நாளை புன்னாகவராளி ராகத்தில் பாடி வழிபட்டால், அச்சம் நீங்கும் என்பது ஐதீகம். அதுபோல இன்று 9 வயது சிறுமியை மகாகவுரியாக அலங்கரித்து பூஜித்தால் நமக்கு இஷ்டசித்தி உண்டாகும்.

மேலும் கஷ்டமான காரியங்களையும் சிரமம் இல்லாமல் செய்து முடிக்கும் ஆற்றலைத் தரும். எட்டாம் நாளான இன்று பாசிப்பருப்பு, கடலை பருப்பு சேர்ந்த பாயாசத்தை படைத்து வடையுடன் நிவேதனமாக வைத்து வழிபட்டால், நாம் கேட்கும் வரத்தை எல்லாம் அம்மன் தருவாள். அது மட்டுமின்றி வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து தேவி நமக்கு ஏற்றத்தைத் தருவாள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”