தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Wed Apr 04, 2012 4:57 am

பங்குனி உத்திர வரலாறு
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரமாக்க் கொண்டாடப்படுகிறது. இம்மாத்தில் நான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பொருமான் தன் தாய் தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்

குதிரைகள் பூட்டிய தேரில் முருகப் பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க முருகனின் படைக்ள் அணிவகுத்து சென்றன அப்போது வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்த்து காரணம் அறியாத அனைவரும் திகைத்து நிற்க அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி சொல்ல தொடங்கினார்.

இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து எல்லோருக்கும் தீமைகளை புரிந்து தீய சக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால் அசையாமல் மலையாகி நின்றாலும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்த செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது. என்றார் மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில் சூரபத்மனின் தம்பியும் யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகிறான். என்ற தகவலையும் சொன்னார்.

அதைக்கேட்ட முருகப்பெருமான் தன் தளபதி வீரபாகுதேவனிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய் தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். தலைவனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரிபட்டினத்திற்குள் நுழைந்தன. இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வ்நதான். கடும் போர் நடந்த்து இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

போர்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன் முருகன்படையின் வீர்ரான வீரகேசரியை தன் கதாயுத்த்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து தாரகாசுரனை கடுமையாக தாக்கினார். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான் மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாட முருகனின் படைகள் நாலாபுறம் சிதறி ஓடின.

மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான் வீரபாகுவும் அவனை தெடர்ந்து மற்ற வீரர்களுடம் விடாது மலைக்குள் நுழைய மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்த்து தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.

இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான் நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாத தாரகாசுரன் சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப் பெருமான் தன் வேலாயுத்த்தை கையில் எடுத்த வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல் மலையை பல கூறுகளாக்கி உடைத் தெறிந்து தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான் தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Wed Apr 04, 2012 5:05 am

பங்குனி உத்திரப்பாடல்

”படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான்
முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி
நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!”

பழனி என்ற பெயரை உச்சரிப்பதே மகத் தான புண்ணியம் தரும். அதனால் தான் குழந்தைகளுக்கு “பழனி” என்று பெயரிட்டு அழைப்பது மரபாக உள்ளது. உடல் நோய், உள்ள நோய் என்று மட்டுமில்லாமல் பிறவிப்பிணி தீர்க்கும் ஞானதேசிகனாக தண்டாயுத பாணி ஞானதரிசம் அளிக்கிறான். அவன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by muthulakshmi123 » Thu Apr 05, 2012 9:58 pm

Oattakaran wrote:பங்குனி உத்திரப்பாடல்

”படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான்
முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி
நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!”

பழனி என்ற பெயரை உச்சரிப்பதே மகத் தான புண்ணியம் தரும். அதனால் தான் குழந்தைகளுக்கு “பழனி” என்று பெயரிட்டு அழைப்பது மரபாக உள்ளது. உடல் நோய், உள்ள நோய் என்று மட்டுமில்லாமல் பிறவிப்பிணி தீர்க்கும் ஞானதேசிகனாக தண்டாயுத பாணி ஞானதரிசம் அளிக்கிறான். அவன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம்.
அருமை உங்கள் பங்குனி உத்திரம் தின விளக்கம்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Sun Apr 08, 2012 4:59 am

muthulakshmi123 wrote:அருமை உங்கள் பங்குனி உத்திரம் தின விளக்கம்
நன்றி முத்துலட்சுமியம்மா
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Sun Apr 08, 2012 5:00 am

ருத்ராட்சம் பிறந்த கதை

சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாக்க் கருதுகின்றனர். திரிபுராசுரனால் துன்ப்ப்பட்ட தேவர்களைக் காக்க சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். “அகோர அஸ்திரம்” என்ற ஆயதத்தை தயார் செய்ய கண்களை மூடும் போது அவரது மூன்று கண்களில் இருந்தும கண்ணீர் வழிந்த்து. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் உண்டானது.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Sun Apr 08, 2012 5:01 am

துளையுள்ள ஒரே விதை
ருத்ராட்ச மரத்தின் விதைக்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற விதைகளில் துவாரம் இருக்காது. துளசி அல்லது ஸபடிக மணிகளை துளையிட்ட பிறகே கோர்க்க முடியும். ஆனால், இயற்கையிலேயே துளை உள்ளது ருத்ராட்சம். எல்லா மனிதர்களும் இதை எளிதாக அணிய வேண்டும் என்ற அடிப்படையில் இறைவன் இப்படி செய்திருக்கிறார். ஜாவா தீவு, நேபாளம், பெங்களுருவில் ருத்ராட்ச மரம் வளர்கிறது. இது வியாதியை போக்கும் தன்மை கொண்டது ருத்ராட்சத்தை ஊற வைத்த நீரில் மஞ்சள்பொடி சேர்த்து குடித்தால் வாந்தி இருமல் நீங்கும். உஷ்ணம் தணியும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Sun Apr 08, 2012 5:03 am

திரும்ப திரும்ப பயன்படுத்தும ஒரே இலை

வில்வம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம் வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். இதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது, ஒருமுறை பூஜைக்கு பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை “வில்வ தளம்” என்பர். இதனால் சிவனை பூஜிப்பது சிறப்பானது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்கக் கூடாது. வில்வம் மருத்துவ குணம் உடையது. காய்ச்சல், இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Sun Apr 08, 2012 5:05 am

25 வடிவம் கொண்ட சிவன்கோயில்


சிவனுடைய உருவங்களை மகேஸ்வர வடிவம் என்பர் அவர் 25 வடிவங்களை எடுத்துள்ளார். அவை அமைந்த கோயில்களின் விபரம் மற்றும் மாவட்டங்களின் பெயர்.

சோமாஸ்கந்தர் – திருவாரூர்
நடராஜர் – சிதம்பரம்
ரிஷபாரூடர் – வேதாரண்யம்
கல்யாணந்சுந்தரர் – திருமணஞ்சேரி
சந்திரசேகரர் – திருப்புகலுர் (திருவாரூர்)
பிட்சாடனர் – வழுவூர் (நாகப்பட்டிணம்)
காமசம்ஹாரர் – குறுக்கை
கால சம்ஹாரர் – திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
சலந்தராகரர் – திருவிற்குடி
திரிபுராந்தகர் – திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் – வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் – கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் (நாகப்பட்டினம்)
தட்சணாமூர்த்தி – ஆலங்குடி (திருவாரூர்)
கிராதகர் – கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
கங்காளர் – திருச்செங்காட்டங்குடி (திருவாரூர்)
சக்ரதானர் – திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக மூர்த்தி – திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டே அனுக்கிரகர் – கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி – மதுரை
லிங்கோத்பவர் – திருவண்ணாமலை
சுகாசனர் – காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் – திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி – சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் – சுருட்டப்பள்ளி (ஆந்திரா)
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Mon Apr 09, 2012 5:05 am

Image
அமெரிக்காவில் நியூஜெர்சி அருகேயுள்ள ஒல்டு பிரிட்ஜ் டவுன்ஷிப் பகுதியில் பிரமாண்ட அனுமன் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான நடைபெற்ற பூமி பூஜை விழாவில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள், அமெரிக்கர்கள் கலந்து கொண்டார்கள். நியூஜெர்சி பாராளுமன்ற உறுப்பினர் சாம் தாம்ஸ்சன் மற்றும் மாநகர உறுப்பினர் ராபர்ட் கிளிப்டன் ஆகியோர் உள்பட முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த கோவில் அமைப்புக்குழுவை சேர்ந்த மங்கள்குப்தா கூறுகையில், "இந்தியாவிற்கு வெளியில் அமைய இருக்கும் முதல் அனுமன் கோவில் இதுவாகும். சுமார் 4 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டு 8 அடி உயர அனுமன் சிலை நிறுவப்படும். இதற்கு ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடி வரை செலவிட திட்டமிட்டு இருக்கிறோம். இன்னும் 1 1/2 ஆண்டிற்குள் கோவிலை கட்டிமுடித்து விடுவோம்" என்று தெரிவித்தார்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by muthulakshmi123 » Mon Apr 09, 2012 3:15 pm

Oattakaran wrote:
25 வடிவம் கொண்ட சிவன்கோயில்


சிவனுடைய உருவங்களை மகேஸ்வர வடிவம் என்பர் அவர் 25 வடிவங்களை எடுத்துள்ளார். அவை அமைந்த கோயில்களின் விபரம் மற்றும் மாவட்டங்களின் பெயர்.

சோமாஸ்கந்தர் – திருவாரூர்
நடராஜர் – சிதம்பரம்
ரிஷபாரூடர் – வேதாரண்யம்
கல்யாணந்சுந்தரர் – திருமணஞ்சேரி
சந்திரசேகரர் – திருப்புகலுர் (திருவாரூர்)
பிட்சாடனர் – வழுவூர் (நாகப்பட்டிணம்)
காமசம்ஹாரர் – குறுக்கை
கால சம்ஹாரர் – திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
சலந்தராகரர் – திருவிற்குடி
திரிபுராந்தகர் – திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் – வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் – கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் (நாகப்பட்டினம்)
தட்சணாமூர்த்தி – ஆலங்குடி (திருவாரூர்)
கிராதகர் – கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
கங்காளர் – திருச்செங்காட்டங்குடி (திருவாரூர்)
சக்ரதானர் – திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக மூர்த்தி – திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டே அனுக்கிரகர் – கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி – மதுரை
லிங்கோத்பவர் – திருவண்ணாமலை
சுகாசனர் – காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் – திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி – சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் – சுருட்டப்பள்ளி (ஆந்திரா)
நம்ம நெல்லையப்பரைக் காணவில்லை...
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”