தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Wed Apr 11, 2012 4:01 am

யார் யாருக்கு என்னென்ன மலர்கள்?


1. விநாயகருக்கு

செம்பருத்து, தாமரை, ரோஜா மலர்கள், மற்றும் அருகம்புல் முதலியன.

2. அம்பிகைக்கு

வெண்தாமரை, மல்லிகை, முல்லை, சூரியகாந்தி, செவ்வரளி, செம்பவளமல்லி.

3. சிவனுக்கு

தும்பை, வில்வம், தாமரை மலர்கள், சங்கு மலர், செம்பருத்தி

4. விஷ்னுவுக்கு

தாமரை, பவளமல்லி, மற்றும் மருக்கொழுந்து, துளசி.

5.முருகனுக்கு

மல்லிகை, முல்லை, சாமந்தி, சூரியகாந்தி, ரோஜா

மேலும உள்ள தெய்வங்களுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உரிய மலர்கள் இன்னின்ன என்பது நான் அறியவரும் போது தங்களுக்கு கூறுகிறேன்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: தெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O

Post by Oattakaran » Wed Apr 11, 2012 4:02 am

கவனமாகத் தவிர்க்க வேண்டியவை


விநாயகரைத துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.

பரமசிவனைத் தாழம்பூவால் அர்ச்சனை செய்யக்கூடாது.

விஷ்ணுவுக்கு அட்சதையால் அர்ச்சனை செய்யக் கூடாது

அம்பிகையை அருகம்புல்லால் அர்ச்சனை செய்யக் கூடாது.

விஷ்ணுவுக்கோ, சிவனுக்கோ, அம்பிகைகளுக்கோ, ஊமத்தை மலர்கள், எருக்க மலர்கள் அர்ச்சனை செய்யக் கூடாது.

லட்சுமியைத் தும்பை மலரால் அர்ச்சனை செய்யக் கூடாது.

சரஸ்வதியைப் பவளமல்லிப் பூவால் அர்ச்சனை செய்யக் கூடாது.
நமது முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் தெய்வீகத்தைக் கண்டார்கள். அவன்ன்றி ஓரணுவும் அசையாது என்று மனப்பூர்கமாய் நம்பினார்கள். மக்களுக்குத் தெய்வ நம்பிக்கை இருக்கிறது. தெய்வ நம்பிக்கையின் பேரில் சொன்னால் எதையும் விடாமல் பின்பற்றுவார்கள் என்றுதான் நலம் தரும் காரியங்களைத் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய வைத்தள்ளார்கள். சிலவற்றிற்கு நம்மால் பொருள் விளங்கிக் கொள்ள முடிகிறது. சில நமக்குப் பிடிபடுவதாக இல்லை. அதற்காக அவற்ளை நாம் அர்த்தமற்றவை என ஒதுக்கித் தள்ளிவிடலாகாது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”