திருஞான சம்பந்தர் வரலாறு.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

திருஞான சம்பந்தர் வரலாறு.

Post by RJanaki » Tue Mar 27, 2012 5:55 pm

Image

திருஞான சம்பந்தர் வரலாறு.


சீா்காழியில் அந்தணா் குலத்தில் சிவ பாத இருதயா்க்கும் பகவதி அம்மைக்கும் மகனாகத் றிருஞான சம்பந்தர் பிறந்தார். மூன்றாம் வயதில் இறைவன் கொடுத்த ஞானப்பாலைக் குடித்து எல்லா ஞானமும் கைவரப் பெற்றார்.அப்போது தோடுடைய செவியன் என்று பதிகம் பாடினார்.

திருகோலக காவில் பொற்றாளம் பெற்றார். திரு நனிபள்ளிக்குச் சென்று பதிகம்பாடிப் பாலை நிரத்தை நெய்தல் நிலமாக மாற்றினார்.திருநெல்வாயில் அரத்துறைக்குப் போடு்ம்போது முத்துச்சிவிகை.முத்துக்குடை.முத்துச் சின்னம் என்ற மூன்றும் பெற்றார். திருப்பாச்சில் ஆச்சிரமத்தில் கொல்லிமழவன் மகளின் முயலக ரோயைத் தீா்த்தார்.கொடி மாடச் செங்குன்றூரில் அடியார்களுக்கு ஏற்பட்ட குளிர்கரத்தைப் பதிகம் பாடி நீக்கினார்.

பட்டீச்சரத்தில் முத்துப் பந்தல் பெற்றார். திருவாடுதுறையில் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழி பெற்றார். திருமருகல் என்ற ஊரில் பாம்பு கடித்து இறந்து போன வணிகனை உயி்ர் பெற்று எழச் செய்தார். திரு வீழிமிழலையில்தங்கி இருந்த போது பஞ்சம் வந்தது. அந்தப் பஞ்சம் தீரும் வரை உள்ளதாக மாற்றுக் குறைவாக இருந்ததால் பதிகம் பாடி வாசி இல்லாத பொற்காசு பெற்றார்.

திருமறைக்காட்டில் வேதம் பூசித்துப் பூட்டிய கதவை அப்பா் திறக்கப்பாடினார்.சம்பந்தர் அடைக்கப் பாடினார். திருமறைக்காட்டிலிருந்து சம்பந்தர் மதுரைக்குப் போகும் போது கோளறு பதிகம் பாடினார். மதுரையில் பாண்டியனது சுர நோயைத் திருநீற்றுப் பதிகம் பாடித்தீ்ர்த்தார். சமணர்களோடு வாதம் செய்து அவர்களை வென்றார்.மதுறையிலிருந்து திரும்பும்போது கொள்ளம் பூதூரில் ஒடக்கோல் இல்லாமல் ஒடம் செலுத்தினார்.

திருஓத்தூரில் ஆண் பனைகளைப் பெண்பணனைகளாக்கிக் காய்க்கும் படி செய்தார்.திருமயிலாப்பூரில் எலும்பைப் பூம் பாவை என்ற பெண்ணகக்கினார்.நல்லூர்ப் பெருமணத்தில் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.திருமணச் சடங்கு நிறைவுற்ற பின்பு திருக்கோயிலுக்குச் சென்றார் அங்கே சோதி தோன்றியது.அப்போது காதலாகி என்ற நமச்சிவாயப் பதிகம் படிச் சோதியில் கலந்தார்.

இவரது காலம் 7-ஆம் நூற்றாண்டு.முத்தி பெற்ற நாள் வைகாசி மாதம் மூல நட்சத்திரம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: திருஞான சம்பந்தர் வரலாறு.

Post by muthulakshmi123 » Fri Mar 30, 2012 3:28 pm

அருமை திருஞான சம்பந்தர் வரலாறு...படிக்கும் போது சிவாஜி நடித்த திருஅருட்செல்வர் படம் தான் ஞாபகம் வருது
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: திருஞான சம்பந்தர் வரலாறு.

Post by Oattakaran » Sat Mar 31, 2012 7:23 am

திருஞான சம்பந்தர் வரலாறு அருமையா இருக்கிறது அப்பர்,மாணிக்வாசகர் வரலாற்றையும் சேர்த்துப்பதிவிடுங்கள்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: திருஞான சம்பந்தர் வரலாறு.

Post by umajana1950 » Sat Mar 31, 2012 10:04 am

அந்தக் காலத்தில், பெரிய புராணத்தை தொகுத்தவர் சேக்கிழார். இன்று திருஞான சம்பந்தர் வரலாறை தொகுக்க முத்துலட்சுமி அவர்கள். தொடரட்டும் உங்கள் தொண்டு.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: திருஞான சம்பந்தர் வரலாறு.

Post by muthulakshmi123 » Sat Mar 31, 2012 8:30 pm

umajana1950 wrote:அந்தக் காலத்தில், பெரிய புராணத்தை தொகுத்தவர் சேக்கிழார். இன்று திருஞான சம்பந்தர் வரலாறை தொகுக்க முத்துலட்சுமி அவர்கள். தொடரட்டும் உங்கள் தொண்டு.
உமாஜனா திருஞான சம்பந்தர் வரலாற்றை தொகுப்பது ஜானகி அவர்கள்....பாராட்டு எனக்கா....உங்கள் பாராட்டுடன் என் பாராட்டையும் ஜானகி அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்..
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”