பொன்மொழிகள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

பொன்மொழிகள்

Post by umajana1950 » Sun Mar 25, 2012 11:36 am

குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க குளத்திற்குப் போனால், தெளிந்த நீரை மேலாக எடுத்துவருவது தான் சிறந்தது. அதை விடுத்து, குளத்துக்குள் இறங்கி கலக்கினால் சேறு மேலே வந்து விடும். அதுபோல பக்தியிலும் மிதமான நிலையே போதுமானது.
-ராஜாஜி
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Sun Mar 25, 2012 11:37 am

மிதமிஞ்சிய சமய அறிவு, மற்றவருடன் வாதங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதால் மூளையைக் குழப்பிக் கொள்ள நேரிடும். நம்முடைய அறிவு சிற்றறிவு. கடவுளோ பேரறிவாளராக இருக்கிறார். அதனால், நம்முடைய அறிவைக் கொண்டு அவரை அளக்க முடியாது.
-ராஜாஜி
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Tue Mar 27, 2012 12:08 am

தயிருக்குள் இருக்கும் வெண்ணெய் போன்று கடவுள் மறைந்து விளங்குகிறார். அவரைக் காண வேண்டுமென்று விரும்பினால் உள்ளத்தைப் பக்தியால் கடைய வேண்டும். தத்துவ ஞானத்தை வளர்த்துக் கொண்டால் புலமை தான் வளருமே ஒழிய, ஞானம் உண்டாகாது.

பக்தியில் உறுதியாக நில்லுங்கள். எளியதியானப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மனம் ஒன்றி இறைவனை வழிபடுங்கள். கடவுளின் பூரண அருளை நிச்சயம் பெற்று மகிழ்வீர்கள்.
-ராஜாஜி
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Tue Mar 27, 2012 10:01 am

குப்பையை ஆராய்வதால் பயன் விளைவதில்லை. அதுபோல, பிரபஞ்சத்தை ஆராய்வதாலும் பயன் இருக்கப் போவதில்லை. நமக்குள் இருந்து இயக்கும் ஆண்டவனைத் தேடுங்கள்.

ரயில் ஓடும் போது சுமையை நாம் தூக்க வேண்டியதில்லை. அதுபோல, ஆண்டவனிடம் நம்மை ஒப்படைத்தபின் உலகியல் பிரச்னைகள் நம்மைத் தீண்டுவதில்லை.
-ரமண மகரிஷி
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Tue Mar 27, 2012 10:04 am

தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது.

மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்கவேண்டும்.
-காஞ்சிப் பெரியவர்
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by nadhi » Tue Mar 27, 2012 1:00 pm

உங்கள பொன்மொழிகள் எல்லாம் நல்லாயிருக்கு நடைமுறைக்கு கொஞ்சம் கஷ்டம். எனக்கு பிடித்தது.
தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது.

மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்கவேண்டும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by muthulakshmi123 » Tue Mar 27, 2012 3:14 pm

பொன்மொழிகள் எல்லாம் நன் மொழிகள் ஒவ்வொன்றும் நன்றாக இருக்கு தொடருங்கள்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Tue Mar 27, 2012 3:56 pm

எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக வாழ்வதே அதிக சக்திவாய்ந்தது.

ஓடி ஓடிச் சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள்தேடி அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.

வழியில் கிடக்கும் முள்ளையோ, கண்ணாடியையோ அப்புறப்படுத்த பணம் ஏதும் தேவையில்லை. சிறு அளவிலான உதவிகளை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.
-காஞ்சிப் பெரியவர்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by muthulakshmi123 » Tue Mar 27, 2012 3:59 pm

umajana1950 wrote:எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக வாழ்வதே அதிக சக்திவாய்ந்தது.

ஓடி ஓடிச் சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள்தேடி அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.

வழியில் கிடக்கும் முள்ளையோ, கண்ணாடியையோ அப்புறப்படுத்த பணம் ஏதும் தேவையில்லை. சிறு அளவிலான உதவிகளை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.


-காஞ்சிப் பெரியவர்

பணம தேவையில்லை தான் ஆனால் இப்பொ மக்கள் பணம் வருமென்றால் செய்ய ரெடியாக இருக்கிறார்கள்
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by nadhi » Tue Mar 27, 2012 9:32 pm

ஓடி ஓடிச் சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள்தேடி அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.
அடுத்த தலைமுறைக்கே கொடுக்க முடியலை அப்படி இருக்க அடுத்த ஜன்மம் நினைத்து பார்க்க முடியாதது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”