[b]பெண்கள் செல்லாத கோவில்....[/b]

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

[b]பெண்கள் செல்லாத கோவில்....[/b]

Post by sk3662 » Sat Dec 22, 2012 8:15 pm

பெண்கள் செல்லாத கோவில்....

மதுரை திருப்பரங்குன்றம்அடுத்து திருநகர் பகுதி எல்லையினில், புரவழி சாலை யில்
இருக்கும் இக்கோவில் , ஆள் உயர அரிவாள் ஒன்று பீடத்தில் அமைக்கப்பட்டு புளியமர நிழலினில் அமைந்துள்ளது. இந்த்த தெய்வத்தினை எல்லை காக்கும் கோவில் என்பார்கள் ..இத் தெய்வத்தினை வழிபடும்போது நாட்டு பழங்கள், பத்தி, சூடம், வைத்து வழிபடுவார்கள்.பூஜை செய்த பழங்களை அங்கேயே பகிர்ந்து உண்பர். இத் தெய்வத்திற்கு மூன்று பழங்களை வைப்பார்கள். வாழ்கையில்
எதிர் நோக்கும் காரியங்களை அச்சமின்றி இத் தெய்வத்திடம் கோரிக்கையாக வைப்பார்கள். அச்சமற்ற உட்சா கோவில் என்ற இன்னோர் பெயரும் இக்கோவிலுக்கு உண்டு. கனிகளை சரிசமமாக பகிர்ந்து உண்ணுவதால் கனி மாற்று கோவில் என்றும் பெயர் உண்டு. அதைவிட முக்கியம் இந்த கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: [b]பெண்கள் செல்லாத கோவில்....[/b]

Post by ஆதித்தன் » Sat Dec 22, 2012 8:20 pm

பெண்கள் செல்ல அனுமதியில்லாத கருவறை கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் கோயிலுக்கே பெண்கள் வரக்கூடாது என்று சொல்வது இவ்வொரு இடமாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

===============================

நோட்ஸ்: பதிவு கட்டத்திற்குள் தான் பிபிகோடு வேலை செய்யும், தலைப்பு இடும் சப்ஜெக்ட் பாக்ஸில் இல்லை.
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: [b]பெண்கள் செல்லாத கோவில்....[/b]

Post by sk3662 » Sat Dec 22, 2012 8:32 pm

நண்பரே ....மாலை வணக்கம்....!
கிராம புறங்களில் பெரும்பாலும் இதுபோன்று உள்ள காவல் தெய்வங்கள் கோவிலுக்கு பெண்கள் போவதில்லை...
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”