பிரதோஷம். .......................20

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

பிரதோஷம். .......................20

Post by sk3662 » Sun Dec 16, 2012 4:00 pm

பிரதோஷ வேளையில், கருவறை ஈசனை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே தரிசிக்க வேண்டும். அங்கேதான் தேவர்களுக்கு சந்தியா நிருத்தத் தை ஈசன் ஆடிக்காட்டியருளினார்.

பிரதோஷ வேளையில் சமஸ்கிருத மொழி அறிந்தவர்கள் ஸ்ரீருத்ரத்தையும், தமிழ் மொழி அறிந்தவர்கள் நீலகண்டப் பதிகத்தையும் பாராயணம் செய் வது விசேஷம்.

பிரதோஷ வேளையில் ஈசன் ரிஷபத்தின் மீது ஆலயவலம் வரும்போது, மூன்றாவது சுற்றில் ஈசான (வடகிழக்கு) திக்கில் நடைபெறும் வழிபாட்டை தரிசிப்பது சிறப்பான புண்ணியம் தரும்.

ஈசான திக்கில், ஈசன் ஆலகால விஷமருந்தி பின் எழுந்து ஆனந்த தாண்டவம் ஆடியபோது கூடவே பூதகணங்களும் பூதநிருத்தம் ஆடின. இதற் கென பிரத்யேகமாக ராகம், தாளம், வாத்தியம் உண்டு.

பிரதோஷ நேரத்தில் ஈசனுக்கு வில்வ தளங்களால் மாலை தொடுத்து அணிவிப்பது பெரும் பாக்கியம் தரும்.

பிரதோஷ வேளை, ரஜ்னிமுக வேளை என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கு இரவின் முகம் என்பது பொருள்.

தோஷம் என்றால், குற்றமுள்ள என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. குற்றமற்ற அந்த வேளையில் ஈசனைத் தொழ, நம் தோஷங் கள் நீங்கும்.

ஈசன் விஷத்தையுண்டு, சயனித்து, பிறகு எழுந்து முதன்முதலாக சந்தியா தாண்டவத்தை ஆடியது ஒரு சனிக்கிழமை மாலையில்தான் என்பதால் சனிப்பிரதோஷம் சிறப்பானது. நாம் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதில் ஒரு சிறு தொகையை சனிப்பிரதோஷ வேளையில் தர, நம் கடன்கள் சீக்கிரம் அடைபடும் என்பார்கள்.

தினமும் மாலைவேளையை தினப்பிரதோஷம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை, திரயோதசி நாட்களில் வரும் பிரதோஷம் பட்சப் பிரதோஷம் என்றும், மகாசிவராத்திரிக்கு முன் வரும் பிரதோஷம் மகாபிரதோஷம் என்றும் அழைக்கப்படுகின்றன.

மகாசிவராத்திரிக்கு முன்வரும் பிரதோஷம் சனிக்கிழமையன்று வந்தால் அது சனி மகாபிரதோஷமாகும். அன்று ஈசனை தரிசித்தால் ஆயிரம் மடங்கு பலன்கள் கிட்டும்.

தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பிரதோஷ தரிசனம் செய்பவர்களுக்கு சிவலோக பதவி கிட்டும்.

பிரதோஷ வேளையில் ஈசன் ஆடும் தாண்டவத்திற்கு அம்பிகை பாட, நான்முகன் தாளம்போட, சரஸ்வதி வீணைமீட்ட, நரநாராயணர்கள் மத்தளம் இசைக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா இசைக்க, ஏழுகோடி இசைக்கருவிகளை கந்தர்வர்கள் மீட்டுவதாக ஐதீகம்.

பிரதோஷ காலங்களில் ஈசனின் கருவறை கோமுகம் அருட்சக்தியோடு துலங்குவதால் அதை பக்தியுடன் வணங்க வேண்டும்.

ஆலகால விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் முன்னும் பின்னுமாக ஓடியதை நினைவுறுத்தும் வகையில் பிரதோஷ வேளையில் சோமசூக்தப் பிர தட்சிணம் செய்யப்படுகிறது. அது அனந்தகோடி பலனைத் தரும் என்பர்.

ஈசன் பாற்கடலிலிருந்து வெளிவந்த ஆலகால விஷத்தை உண்டபோது அதன் உஷ்ணம் அவரைத் தாக்காமலிருக்க அசுவினி தேவர்கள் மயில் பீலி ஆலவட்டத்தை வீசினர். அதன் நினைவாக இன்றும் பிரதோஷ வேளையில் பல ஆலயங்களில் ஈசனுக்கு மயில் பீலி விசிறிகளால் வீசுகின்றனர்.

சிவாகம நூல்களின்படி திரயோதசி திதியைப் பொறுத்து ஒரு நாளில் மூன்றுவகை பிரதோஷம் அமையும்: உத்தமப் பிரதோஷம், மத்திமப் பிரதோ ஷம், அதமப் பிரதோஷம்.

பிரதோஷ வேளையில் ஈசனைத் தாங்கி வலம் வரும் ரிஷபம், பிரதோஷ ரிஷபம் ஆகும்.

சென்னை பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் ஆலய பிரதோஷ மூர்த்தி உமாஆலிங்கன மூர்த்தியாக தரிசனம் அளிக்கிறார்.

பிரதோஷ வேளையில் நந்திக்கு அறுகம்புல் மாலை சாத்தி, நெய்விளக்கேற்றி, காப்பரிசி படைத்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

பிரதோஷ விரதம் இருக்கத் தொடங்குபவர்கள் கார்த்திகை அல்லது ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம் தரும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”