அபிராமி அந்தாதி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Wed Mar 28, 2012 10:16 pm

RJanaki wrote:முத்துலட்சுமி மூன்று பதிவையும் ஓரே பதிவில் போட்டு இருக்காலம்.
வெவ்வேறு நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டதால் தனித்தனியாக போட்டேன்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Thu Mar 29, 2012 7:29 am

மந்திர சித்தி பெற
சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உந்திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Sat Mar 31, 2012 9:03 pm

மலையென வருந்துன்பம் பனியென நீங்க


ததியுறு மத்திற் சுழலும் என் ஆவிதளர் விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கியென்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரான்ன சுந்தரியே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Sun Apr 01, 2012 11:13 am

பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட


சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை யெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Sun Apr 01, 2012 3:08 pm

abirami-anthathi.jpg
அபிராமி அந்தாதி
காப்பு:

தாரமர்கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரர் தம் பாகத்து உமைமைந்தனே உலகேழும் பெற்ற
சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே


நூல்:

ஞானமும் நல் வித்தையும் பெற


உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!


பிரிந்தவர் ஒன்று சேர

துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
துணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப் பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே


குடும்பக் கவலையிலிருந்து விடுபட



அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே


உயர்பதவிக்ளை அடைய

மனிதரும் தேவரும மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமேகொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந் நாளும் பொருந்துகவே



மனக்கவலை தீர


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே


மந்திர சித்தி பெற

சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உந்திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே



மலையென வருந்துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவிதளர் விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கியென்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரான்ன சுந்தரியே


பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை யெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே


அனைத்தும் வசமாக

கருத்தன் எந்தைதன் கண்ணன் வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேர்ருள் கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தென் முன் நிற்கவே


மோட்ச சாதனம் பெற

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே


இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணாரவிந்த்த் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே



தியானத்தில் நிலைபெற

கண்ணியதுன் புகழ் கற்பதுன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியதுன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணிய துன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியன் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே


வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


தலைமை பெற


வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Sun Apr 01, 2012 3:15 pm

பெருஞ் செல்வமும் பேரின்பமும் பெற


தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே



கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசெய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக வன்றோ வாம பாகத்தை வவ்வியதே

மரணபயம் நீங்க

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளிநிற்கவே

பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின் திரு மேனியைப் பார்த்தேன் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைப்வளே


வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக


உறைகின்ற நின் திருக் கோயில் நின்கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிடியோ பூரணாசல மங்கலையே

அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில்தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே


இனிப்பிறவா நெறி அடைய

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்திங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டுகொ:ள்ளே



எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க


கொள்ளேன் மனத்தில் நின் கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த
கள்ளே களிக்கும் கனியே அளிய என் கண்மணியே



நோய்கள் விலக

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமர்ர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே


நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயண்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனியுன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே


சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூஙகடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே


மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்தழுக்கையெல்லாம் நின் அருட் புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Sun Apr 01, 2012 3:18 pm

எல்லா சித்திகளும் அடைய

சித்தியும் சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பரா
சக்தியும் ச்த்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே


விபத்து ஏற்படாமல் இருக்க

அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய் கொண்ட்தல்ல என்கை
நன்றே உனக்கினி நான் எண்டெயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே


மறுமையில் இன்பம் உண்டாக

உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்ய்வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த அசையுமே


துர்மரணம் வராமலிருக்க

ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்ல்ல் பட இருந்தேனே நின் பாதமென்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே


இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க

இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர்சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக்குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஒடிவந்தே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Sun Apr 01, 2012 3:22 pm

சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவோடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்க்கதிர் ஞாயிறும் திங்களுமே


திருமணம் நிறைவேற

திங்கள் பசுவின் மணநாறுஞ் சீறடிசென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்த்த் தவமெய்துமோ தரங்க்க்கடலுள்
வெங்கட் பணியணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே

பழைய வினைகள் வலிமை அழிய

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என்மனத்து வஞ்சத்து
இருளேது மின்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

நவமணிகளைப் பெற

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட் அரவின்
பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே

வேண்டியதை வேண்டியவாறு அடைய

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே


கருவிகளைக் கையாளும் வலிமை பெற


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகளுண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் ழிழியின் கடையுண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே

பூர்வ புண்ணியம் பலந்தர

வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியன் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணீயமே

நல்லடியார் நட்புப் பெற

புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணியிங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Sun Apr 01, 2012 3:25 pm

உலகினை வசப் படுத்த

இடங்கொண்டு விம்மி இணைகொண்டுஇறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே


தீமைகள் ஒழிய


பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணியின் சொல்
திருபுரசுந்தரி சிந்துர மேனியன் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரைமேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே


பிரிவுணர்ச்சி அகல

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்களமாய்
அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயின்ன் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே


உலகோர் பழியிலிருந்து விடுபட

தொண்டு செய்யாது நின் பாதந்தொழாது துணிந்திச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன்
கண்டுசெய்தால் அது கை தவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கையன்றே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Mon Apr 02, 2012 11:03 am

நல்நடத்தையோடு வாழ

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரைமிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சையுண்டு
கறுக்குந் திருமிடற்றாள் இடப் பாகம் கலந்த பொன்னே
மறுக்குந் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே

யோக நிலை அடைய

வாழும் படியொன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம்
ஏழுன் பருவரை யெட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே


உடல் பற்று நீங்க

சுடரும் கலைமது துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப் போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே


மரணத் துன்பம் இல்லாதிருக்க

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மடுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த் இசை வடிவாய் நின்ற நாயகியே


அம்பிகையை நேரில் காண

நாயகி நான்முகி நாராயணி கை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே


மோகம் நீங்க

அரணம் பொருளென்று அருள் ஒன்றிலாத அசுரர்தங்கள்
முரண் அன்று அழிய மினிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே


பெருஞ் செல்வம் அடைய

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பிய்யும் கனகம் பொருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகி சின்னங்களே


பொய்யுணர்வு நீங்க

சின்னஞ்சிறிய மருங்கினிற் சாத்திய செய்யபட்டும்
பொன்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலுங்கண் மூன்றுங் கருத்தில் வைத்துத்
தன்னந் தனியிருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே

கடன் தீர

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்த நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

மோனநிலை எய்த

மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாலி விளங்குகின்ற
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு வெங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவதொன்றில்லையே

யாவரும் வசமாக

ஒன்றாய் அரும்பிப் ப்லவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சின் உள்ளே
பொன்றாது நின்ற புரிகின்றவா! இப்பொருளறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே


வறுமை ஒழிய

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்ரமெல்லாம்
உய்ய் அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே


மன அமைதி பெற

அருணாம் புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தயல் நல்லாள் தகைசேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே


பிள்ளைகள் நல்லவர்களாக வளர

தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அரியாரெனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே


மெய்யுணர்வு பெற

பாலினுஞ் சொல் இனியாய் பனுமாமலர்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே



மாயையை வெல்ல

நாயேனையும் இங்கொரு பொருளாக் நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலை மகளே செங்கண்மால் திருத் தங்கச்சியே

எத்தகைய அச்சமும் அகல

தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய் அடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே

அறிவு தெளிவோடு இருக்க

தேறும் படி சில ஏதுவும் காட்டி முன்செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே

பகதி பெருக

வீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனிப்ரகாசமன்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”