அபிராமி அந்தாதி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Mon Apr 02, 2012 11:48 am

ஆண்மகப்பேறு அடைய


க்கனமும் வானும் புவனமும் காணவில் காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்த வல்லபமே


கவிஞராக


வல்லபமொன்ற்றியேன் சிறியேன் நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும்பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திரு நாமங்கள் தோத்திரமே

பகைவர்கள் அழிய

தோத்திரம் செய்து சொழுது மின்போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே


நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும்
ஊரும் உருகு சுவையொளி ஊறொளி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாருந் தவம் உடையார் படையாத தனம் இல்லையே


சகல செளபாக்கியங்களும் அடைய

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தள்ர்வறியா
மனம் தரும் தெய்வ்வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

நுண்கலைகளில் சித்தி பெற

கண்களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழலே


மனக்குறைகள் தீர

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாம்ளைக் கொம்பிருக்க
இழவுற்ற நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே


பிறவிப் பிணி தீர

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீர எங்கோள் சடைமேல் வைத்த தாமரையே


குழந்தைப் பேறு உண்டாக

தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Mon Apr 02, 2012 11:51 am

தொழிலில் மேன்மை அடைய

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே

விதியை வெல்ல

தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே


தனக்கு உரிமையானதைப் பெற

குறித்தேன் மனத்தில் நின் கோலமெல்லாம் நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தேன் குடிபுகு தும்பஞ்சபாண பயிரவியே

பகை அச்சம் தீங்க

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே


சகல செல்வங்களையும் அடைய

செப்பும் கனக்கலசமும் போலுந் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே

கட்டுகளில் இருந்து விடு பட

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எஅமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரக்க்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே


பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட

கூட்டியவர் என்னைத் தன்னடி யாரில் கொடிய வினை
ஓட்டியவா என்க்ண் ஒடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவர் கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடமாடகத் தாமரை ஆரணங்கே

நன்னடத்தை உண்டாக

அணங்கே அணங்குகள் நின்பரிவாரஙள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே

மனஒருமைப் பாடு அடைய

அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளூதொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரை புரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Mon Apr 02, 2012 11:56 am

ஏவலர் பலர் உண்டாக

விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக் கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பக்க்காவும் உடையவரே

சங்கடங்கள் தீர

உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னையினிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

துன்பங்கள் நீங்க

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்ல்ல எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனி யும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே


ஆயுத பயம் நீங்க

மால் அயன் தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடக்க் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும் போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே

செயற்கரிய செய்து புகழ்பெற

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நிந்திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரத்த்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகங் கொண்டாளும் பராபரையே

எப்போதும் அம்பிகை அருள் பெற

பரமென்று உனை யடைந்தேன் தமியேனும் என்பத் தருக்குள்
த்ரமன்று இவனென்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரமன்று எரிய்ப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரமொன்று செற்றகையான் இடப் பாகம் சிறந்தவளே

யோக சித்தி பெற

சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற
உறக்கந்தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க

வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே


அரசாங்கச் செயலில் வெற்றி பெற

மெல்லிய நுண்ணிடை மின்ன்னையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன் அனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே

மனநிலை பக்குவமடைய

பத்த்தே உருகிநின் பாத்த்திலே மனம் பற்றி உன்றன்
இத்த்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர்
மத்த்தே மதிமயங்கேன் அவர்போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே

உள்ளத்தில் ஒளியுண்டாக

நகையே இஃதிந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலைமானே முதுகண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே


விரும்பித் தொழும் அடியார் விழி நீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் த்தும்பி ஆனந்தமாகி அறிவிழந்து
கரும்பிற் களித்து மொழிதடுமாறி மின் சொன்ன் எல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே

மன உறுதி பெற

நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயுமில்லை உனக்கேபரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாதகுணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அபிராமி அந்தாதி

Post by muthulakshmi123 » Mon Apr 02, 2012 11:58 am

எங்கும் பெருமை பெற

கோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதமிலாளை எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே


புகழும் அறமும் பெற

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமர்ர்தங்கோன்
போதிப் பிரமன் புராரி முராரி பொதிய முனி
காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற

தைவந்து நின்னடி தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்த ஆறுங் கரந்த தெங்கே
மெய்வந்த நெஞ்சின் அல்ல்லால் ஒரு காலும் விரகர்தங்கள்
பொய்வந்த எர்ஞ்சில் புகல் அறியாமடப் பூங்குயிலே

அருள் உணர்வு வளர

குயிலாஉ இருக்கும் கடம்பா அடவியிடைக் கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவாம் அளித்த கனங்குழையே

அம்பிகையை மனத்தில் காண

குழையைத் தழுவிய கொன்றையற் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்நகையும்
உழையப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே

நூற் பயன்

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கருப்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”