நம்பிக்கை தான் வாழ்கை ....

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

நம்பிக்கை தான் வாழ்கை ....

Post by sk3662 » Mon Dec 10, 2012 10:27 am

நம்பிக்கை தான் வாழ்கை ....


சுடர் விட்டது ஒளி. சற்று தூரத்தில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது, இருள். ‘‘ஒளியே! உன்னால் என்ன பயன்?’’ என்று ஒளியை வம்புக்கு இ ழுத்தது. ‘‘எனக்குத்தான் மனிதர்கள் அதிகம் பயப்படுகிறார்கள். என் ஆட்சியில்தான் அக்கிரமங்கள் அதிகம் ஆக்கிரமிக்கும். மறைவாய் செய்வதையே அநேகர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் உத்தமர்போல் நடிப்பார்கள். எல்லாம் இருளில் நடக்கும். வெளிச்சத்துக்கு அவர்கள் வர விரும்புவதில்லை. வெளிப்படையாகப் பேசும் எவரையும் யாரும் விரும்புவதில்லை. இருளில் பதுங்குபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?’’ என்று தொடர்ந்து அகம்பாவமாகப் பேசியது.

‘‘நான் இயேசுவையே சிலுவையில் அறைந்தவனல்லவா? நான் இல்லாவிட்டால் அது நடந்திருக்குமோ? நான் எல்லார் இதயத்தையும் என் கட்டுப்பாட் டில் வைத்திருந்தவன் அல்லவா? ஒளியே! நீ எங்கும் இருப்பதாகச் சொல்கிறார்களே, இயேசு சிலுவையில் தொங்கியபோது நீ எங்கே போயிருந்தாய்? என் இருளாட்சியின் முன்னால் உன் அருளாட்சி எம்மாத்திரம்?’’ என்று விடாமல் வீம்பு பேசியது. அமைதியாகச் சொன்னது ஒளி: ‘‘நான் வந்தாலே இருக்கும் இடம் தெரியாமல் ஓடிப்போகும் இருளே! அழிப்பதில், கெடுப்பதில், நீ இவ்வளவு ஆனந்தம் கொள்கிறாயே... உன்னில் ஏதாவது புத்தம் புதிய ஒன்றை ஆக்க முடியுமா? எரியும் சுடரை உற்றுப்பார்! அந்த சுடருக்குள்ளே, ஒரு சின்ன இருட்டு ஒளிந்திருக்கும். ஒளிக்குள்ளே சின்ன இருட்டு உண்டு, ஆனால் இருளுக்குள்ளே சின்ன ஒளி என்று ஏதுமில்லையே! இதுதான் என் விளையாட்டு.’’

இயேசு மக்களைப் பார்த்து, ‘‘உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டி ருப்பார்’’ என்றார். பரிசேயர் அவரிடம், ‘‘உம்மைப் பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது’’ என்றனர். அதற்கு இயேசு, ‘‘என்னைப் பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன் எங்கு செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன் எங்கு செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பளிக்கி றீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. ஆனால், நான் தீர்ப்பு வழங்கினால் அத்தீர்ப்பு செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்கு வதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.

இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்’’ என்றார். அப்போது அவர்கள், ‘‘உம் தந்தை எங்கே இருக்கிறார்?’’ என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, ‘‘உங்களுக்கு என்னையும் தெரியாது, என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக் குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்’’ என்றார். அதோடு, ‘‘நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்’’ என்றும் சொன்னார். யூதர்கள், ‘‘அவர் போகுமிடத்திற்கு நம்மால் வர இயலாது என்று சொல்கிறாரே, ஒருவேளை, தற்கொலை செய்துகொள்ளப் போகிறாரோ?’’ என்று கேலியாகப் பேசினார்கள்.

இயேசு அவர்களிடம், ‘‘நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். இருக்கிறவர் நானே என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்’’ என்றார். அவர்கள், ‘‘நீர் யார்?’’ என்று அவரிடம் கேட்டார்கள். அவர், ‘‘நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன். உங்களைப் பற்றி பேசுவ தற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல விஷயங்கள் உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்’’ என்றார். தந்தையைப் பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், ‘‘நீங்கள் மானிட மகனை உயர்த்தி பின்பு, இருக்கிறவர் நானே; நானாக எதையும் செய்வதில்லை.

மாறாக, தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்துகொள்வீர்கள். என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்’’ என்றார். அவர் இப்படிச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். (யோவான் 8: 12-30). ஒரு நாளல்ல, இரண்டு நாட்களல்ல; எழுபத்திரண்டு நாட்கள். தன்னந்தனியாக அட்லாண்டிக் கடலில், ஒரு ஓட்டைப்படகில் எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஸ்டீபன் கல்லகன், அலைந்து பிழைத்து வந்திருக்கிறார். அட்லாண்டிக் பெருங்கடலில் தனியாக உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவரது படகு ஒரு பாதையில் மோதி உடைந்துவிட்டது. ஒரு சின்னப் படகில் ஏறி தப்பியிருக்கிறார். அதில் ஒரு ஆள் மட்டுமே அமர இயலும். உண்ண உணவு கிடையாது. படுக்க இடம் கிடையாது. காற்று அடிக்கும் பக்கமெல்லாம் படகு போகும்.
குளிரும் ராத்திரிகள். தன்னந்தனியான பகல் என்று எழுபத்திரண்டு நாட்கள் கழிந்திருக்கின்றன. இதற்கிடையே அந்தப் படகும் ஓட்டை யாகி தண்ணீர் உள்ளே வர ஆரம்பிக்க அதையும் மொண்டு மொண்டு வெளியே ஊற்றியிருந்திருக்கிறார். குடிக்கக் கடல் தண்ணீர்தான். கடலில் எப் போதாவது கையில் சிக்கும் மீன்கள்தான் உணவு. இறுதியில், அந்தப் பக்கமாக ஒரு கப்பலில் சென்றுகொண்டிருந்தவர்கள் அவரைத் தற்செயலாகக் கண்டுபிடித்து கரை சேர்த்தனர். 1982ம் வருடம் நடந்த இந்தச் சம்பவம் இன்றுவரை ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. ‘‘எப்படி உங்களால் வாழ முடிந்தது?’’ என்று கல்லகனிடம் கேட்டபோது, அவர் தந்த பதில் இது: ‘‘எப்படியும் கரை சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையை வழி நடத்துகிறது’’.

‘‘கடவுள் மிகுந்த இரக்கம் உள்ளவர். அவர் நம்மீது அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நம்மை அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவ ரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப் புயர்வற்ற அருள் வளத்தையும் இனி வருங்காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கை யின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக, இது இறைவனின் கொடை.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”