Page 1 of 1

மனித படைப்பு

Posted: Thu Jan 09, 2020 9:28 pm
by marmayogi
மனிதன் என்றால் மனனம் செய்கின்றவன் என்பது பொருள்.

மனனம் செய்வது என்றால் நித்தியா நித்திய வஸ்து விவேகம் செய்கின்றதாகும்.

நித்தியம் இன்னது எனப் பகுத்துணர்ந்து அநித்தியத்தைத் நீக்கி நித்தியத்தைக் கைக் கொள்வது.

எப்போது சப்தம் தனக்குள் ஒடுங்குகின்றதோ அப்போது மனிதன் ஆகிறான்.

நாம் நித்திரை செய்யும் போது நம்முடைய சுவாச கதி எவ்விதத்தில் ஓடுகின்றதோ அவ்விதம் எப்பொழுதும் ஒரே கதியாக வரும்போது ராகத்துவேஷாதிகளான எல்லா நிலைமைகளும் மறைகின்றன.

தன் ஜீவசக்தி வெளியே பரவி ஜொலிக்கின்ற அந்த ஜுவாலையில்,தன்னை பிரதிபலித்துக் காண்கிறபோது இப்படியொரு பொருள் உண்டென்று தோற்றம் உண்டாகின்றது.

இதுவே மிருக புத்தி (அஞ்ஞானம்)

அந்த சக்தியை வெளியே பரவ விடாமல் அதன் உற்பத்தி ஸ்தானமாகிய தன்னில் சேர்த்து லயிப்பித்து வெளித் தோற்றங்கள் அழியும் போது மட்டுமே மனிதனாகிறான்.

பிரகிருதியில் (இயற்கையில்) காணப்படுகிற சிருஷ்டி வேற்றுமைகள் எல்லாம் ஜீவன் வசிக்கின்ற வீடுகளின் வேற்றுமையே அல்லாமல் ஜீவனுடைய வேற்றுமைகள் அல்ல.

எவ்விதம் என்றால் நாம் பல விதங்களிலும் வீடுகள் உண்டாக்கி அவற்றில் வசிக்கும் பிரகாரம் ஆகும்.

அவற்றில் வசிப்பவர் எல்லாம் ஜனங்கள் என்பது போல எல்லா ஜடத்திலும் வசிக்கின்ற ஆத்மா ஒன்றே.

வசிக்கும் வீடுகளே(ஜடங்களே) பலவிதம்.

எப்போது ஜீவன் ஜடமாய் இருக்கின்ற புரமான வீட்டில் அடங்கி வெளியே சலிக்காமல் வருகின்றதோ அப்போது புருஷன் ஆகிறான்.

அப் புருஷனே சிவன்.

ஜீவனான புருஷன் தன் வீட்டிற்குள் சக்தியாகச் சலிக்கின்ற போது புருஷப் பிரகிருதி ஆகிறது.

அதாவது சக்திரூபிணியாகிறது.
அதுவே சிவசக்தி.

நாம் இப்போது உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் இருப்பதனால் நபும்சகம் (அலி)ஆகின்றோம்.

அதாவது ஆணும் பெண்ணும் அல்லாத நான் என்னும் அகங்காரமாய் இருக்கின்ற அலி.

அந்த அலியால் மனமாகின்ற சக்தி வேறுபட்டு பிரகாசிக்கின்றது.

உலகில் காண்கின்ற ஸ்திரீ புருஷ (ஆண் பெண்) வேற்றுமை இல்லாததாகும்.

புருஷன்,புரமான வீட்டிற்குள் சுக்கிலத்தை போஷிப்பதுவே " கர்ப்பம் " அது எவ்விதம் எனில் வீட்டிற்குள் சுக்கிலத்தை நிறுத்துவதாகும்.

அதாவது வெளியே விடாமல் பத்திரமாய் அபிவிருத்தி பண்ணுவது.

அந்த சுக்கிலத்தால் தான் சிருஷ்டி.

அந்த சிருஷ்டியே ரூபம்(உருவம்)

அந்த ரூபம் எண்ணத்தால் ஆவதாகும்.
அதாவது எண்ணமே ரூபம்.

அந்த எண்ணம் (சங்கற்பம்) சுக்கிலத்தில் பிரதிபலிக்கும் பொழுது அந்நிலைக்கேற்ப ரூபம் அமைகிறது.

சுக்கிலமே ரசம் எனவும் சொல்லப்படுவது.

அந்த சுக்கிலத்தை ஊதிக் கட்டி நிறுத்தும் பொழுது மணியாகிறது.

அதற்குத் தான் ரசமணி எனக் கூறுவது.

அவ்விதம் சுக்கிலத்தை ஊதிக் கட்டி நிறுத்துவதற்கே ரசவாதம் எனச் சொல்வது.

ரசம்=சுக்கிலம்.
வாதம்=வாயு.

சுக்கிலத்தை வாயுவினால் ஊதிக் கட்டி மணியாகும் பொழுது ஞானம் உண்டாகிறது.

ஜீவசக்தி வாயு ரூபமாய் வெளியே போய் அழிகின்றதை, அவ்விதம் அழிய விடாமல் நமக்குள்ளே சதா மேலும் கீழுமாய் ஊதி சுக்கிலத்தைக் கட்டி நிறுத்தும் பொழுது தான் நாம் ஜென்ம சாபல்லயம் (பிறவிப் பெரும் பயன்)அடைகிறோம். ;சுவாமி சிவானந்த பரமஹம்சர்