Page 1 of 1

ஆடை அலங்காரம்

Posted: Fri Dec 06, 2019 2:37 am
by marmayogi
இப்போதுள்ள உலகவாசிகளான ஜனங்கள் அந்தஷ்தில் பிரமித்து அர்த்த(பாதி) சவரமும் அதாவது முகசவரமும் தலைமுடிகளை பகுதியளவு வெட்ட செய்தும், அவற்றை பின்பக்கம் சீவி வாரியும் எவ்வாறெல்லாம் அலங்கரிக்க முடியுமோ அவ்வாறு அலங்கரித்து,அதாவது ஆடவர் பெண்டிர்கள் சில வாசனைத் தைலங்களால் முகம் மினுக்கியும், சில பொடிகளை முகத்தில் தேய்த்தும்,அதரம் அதாவது உதடு முதலியவற்றை சிவப்பாக்கியும் மோகன ரூபிகளாக,வசீகரன்மார்களாக நடந்து வருகின்றனர்.

இவ்விதத்தில் தான் இப்பொழுது உலகத்தின் நிலைமை காணுகிறது.இதனால் தான் பல நோய்களும் பிடிக்கப்பட்டு அற்ப ஆயுசுகளாகிச் செத்துப்போக காரணமாகிறது.

ஆனால் நோய்கள் பிடிக்காமலும் தீர்க்காயுளாய் அதாவது நீண்ட ஆயுள் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமானால் மேற்சொன்ன அந்தஸ்த்து முதலான அலங்காரத்தில் பிரமிக்காமலும் மோகிக்காமலும் அவனவனுடைய ஜீவனை மோகித்து,
அவரவரிலிருந்து அதோகதியாக அதாவது கீழ்நிலை அடைந்து ஏழுதுவாரங்களின் வழியாய் வெளியே போய் நசித்துக் கொண்டிருக்கின்ற ஜீவசக்தியாக இருக்கின்ற வாயுவை வெளியே விடாமல் அவனவனுடைய அண்ணாக்கின் வழியாக மேலே போவதற்குள்ள இரு துவாரங்கள் வழியே மேலும், கீழும் நடத்தி, புருவமையமாகின்ற இருதயத்தை தட்டி திறந்து ,தன்னுடைய சக்தியை இருதயத்தில் சேர்க்கும் போது தானாய் தன்மயமாய் தீருகிறதாகும்; அப்பொழுது யாதொரு நோயும் இல்லாமல் நீண்ட ஆயுளுள்ளவர்களாக இருக்கலாம் .

; சுவாமி சிவானந்த பரமஹம்சர்