Page 1 of 1

சித்த வேதம்- விசாரமாகும் உருவம்

Posted: Sun Oct 27, 2019 9:34 am
by marmayogi
விசாரம் இல்லை என்றால் உருவம் இல்லை,அந்த விசாரம் மனத்திலிருந்து உண்டாகின்றது.

அந்த மனம் தான் சுக்கிலம்

அச் சுக்கிலத்தினால் தான் சிருஷ்டி.

அந்த சிருஷ்டியே உருவம்.

இதனால் தான் நிற வித்தியாசம் ஏற்படுகின்றது.

அதற்குள்ள திருஷ்டாந்தம்:-

குதிரையை இனை சேர்க்கின்றது எப்படி எனில்
நல்ல அழகுள்ளதான ஒர் ஆண் குதிரையைப் பெண் குதிரையின் முன்பு நிறுத்தி,
அதன் பின் அப்பெண் குதிரையினுடைய கண்களைக் கட்டி,கோவேறு கழுதையை அந்தப் பெண் குதிரைக்குத் தெரியாமல் அதனுடன் இனை சேர்க்கப்படுகிறது.

அந்த சமயத்தில் தன் முன்னிலையில் நிறுத்திய ஆண் குதிரை தான் தன்னுடன் இனை சேருகிறதென்று அது நினைக்கிறது.

அப்பொழுது அந்தக் கோவேறு கழுதையினுடைய பீஜமாகிய சுக்கிலம் இளகுகிற சமயம் அந்த சுக்கிலத்தில் பெண் குதிரையினுடைய விசாரம் அதாவது நினைப்பு பிரதிபிம்பித்து கர்ப்பப்பாத்திரத்தில் சென்று விழுகிறது.

அதன் பிறகு கோவேறு கழுதையை அப்புறப் படுத்தி, பெண் குதிரையினுடைய கண் கட்டியதை அவிழ்த்து விடப்படுகிறது.

அப்பொழுது மேல் சொன்ன புணர்ச்சி சமயத்தில் உண்டாயிருந்த விசாரத்தை அனுசரித்து
(தன் முன்பு நிறுத்திய ஆண் குதிரையே தன்னோடு புணர்ச்சி செய்ததென்ற விசாரத்திற்க் அனுசரித்து) சமமான குட்டி உண்டாகின்றது.

ஆனால் உண்மையில் அப்பெண் குதிரையோடு சேர்ந்தது கோவேறு கழுதையாகும்.

அதை அறியாது அதன் முன்பு நின்றிருந்த ஆண் குதிரையே இனை சேர்ந்தது என்ற விசாரத்துக்கு அனுசரித்து குட்டி உண்டாயிற்று.

அது கொண்டு உருவம் விசாரமாகும்.

அதனால் சுக்கிலம் இளகும்பொழுது எப்படி விசாரம் இருந்ததோ அதை அனுசரித்து தான் உற்பத்தி ஏற்படுகின்றது என்பது இதில் இருந்து நமக்கு விளங்குகிறது அல்லவா ?

உபதேசித்தவர்
சுவாமி சிவானந்த பரமஹம்சர்

Re: சித்த வேதம்- விசாரமாகும் உருவம்

Posted: Mon Oct 28, 2019 9:24 am
by ஆதித்தன்
உருவின் அச்சு பெண்ணின் எண்ணத்திலிருந்து மட்டுமே உருவாகுகிறது என்ற புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி.