Page 1 of 1

சக்தி பூஜை

Posted: Wed Sep 18, 2019 10:16 am
by marmayogi
சக்தி பூஜை
*********
சக்தி பூஜைக்கு மது, மாமிசம் வைத்துப் பூஜை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

மது என்பது கள், சாராயம்,முதலானவைகளாகும்.

மாமிசம் என்பது ஆடு, கோழி முதலிய ஜீவிகளுடைய இறைச்சி என்று நினைத்து அவைகளைக் கொண்டு வந்து ஒர் அறைக்குள் பீடம்,விளக்கு முதலியவற்றை வைத்து முன் சொன்ன சவம் முதலியவற்றைக் கொண்டும் மற்றும் உண்டாக்கியவைகளையும் மேற்சொன்ன பீடத்தின் சமீபம் வைத்து,

பூஜை செய்கிறது என சங்கற்பித்து சில புஷ்பங்களை பீடத்தின் மீதும் மற்றைய சாமான்களின் மீதும் வாரியிட்டு பூஜை முடிந்த பிறகு மேற்சொன்ன சவம் மற்றும் பலகாரங்களை வயிறு நிறைய தின்றும்

கள், சாராயம் முதலியவற்றை குடித்தும்,உணர்வில்லாமல் தம்மில் சண்டை மற்றும் செய்து விழுந்து கை, கால் ஒடிந்து கஷ்டப்படவும் செய்கின்றார்கள்.

இதற்கு சக்தி பூஜை என்று சொல்லக் கூடாது.

சக்தி பூஜை என்றால், தன்னிலிருந்து வெளியினுள்ளே பரவி அதாவது வெவ்வேறாக பின்னமாய் பந்திக்கப்பட்டுள்ள தனது சக்தியை அந்த பந்தத்திலிருந்து ஜீவனாகிய சிவன் வேறுபடுத்தி,
பிரம்மரந்திரத்தில் சேர்க்கின்றதாகும்
சக்தி பூஜை.

அப்படி பூஜிக்கும் பொழுது சிரசினில் உள்ள மது இறங்கும்.

அந்த மதுவைத் தான் மகான்கள் அருந்தியது.

இதனால் தான் சக்தி பூஜையில் மதுபானம் செய்யாமல் இருக்க முடியாது என்று சொல்லக் காரணம்.

மகான்மார்கள் சேவித்திருந்தது எண் சாண் பனைத் தலையில் ஊறிய கள் ஆகும்.

அந்த பனைத்தலை என்பது எண்சாண் ஜடத்தில் மேல் பாகமாகிய எட்டாவது சாணாகிய சிரசாகும்.

அந்த சிரசில் இருப்பதுவே கள்.

அக்கள்ளை லம்பிகா முத்திரையால் பானம் செய்கிறார்கள்.

லம்பிகா = லம்+அம்பிகா
லம்=பிரகாசம்.
அம்பிகா=லோகமாதாவான சக்தி.

அந்த சக்தி சிரசினில் அடங்கும் போது அமிர்தம் இறங்கும்.

அதாகும் துஞ்சத்து எழுத்தச்சனைப் போன்ற மகான்கள் சேவித்திருந்தது.

அவ்விதம் தன் சக்தியை எவரொருவர் தன்னில் லயிக்கும்படி பூஜிக்கின்றார்களோ ,
அவர்களுக்கு தம்மிலிருந்து உண்டாகின்ற கள்ளைக் குடித்து ஆனந்தத்தில் ஆழ்ந்து சர்வக்ஞனாக இருக்க முடியும்.

அந்த கள்ளிற்க்குத் தான் அமிர்தம் என்று பெயர்.

உபதேசித்தவர்
சுவாமி சிவானந்த பரமஹம்சர்