Page 1 of 1

சனி தியானத்திற்கு உகந்த நாள்

Posted: Sat Sep 22, 2018 5:28 am
by ஆதித்தன்
சனிக்கிழமை, சனி கிரகத்தின் பார்வை மிகுதியாக உள்ள நாள்.

சனி கிரகத்தினை மந்தன் என அழைப்பார்கள், காரணம் இராசிக் கோளத்தினை சுற்றிவர அதிக நாட்களை எடுத்துக் கொள்கிறது.

சனி ஓரையில் செய்யும் செயல்கள் மந்தமாகவே நடைபெறும்.

ஆனால், சனி நீதிமான்.. சரி என்பதனை நிதானமாக நீண்ட காலத்திற்கு செயலில் இழுத்தாலும் வெற்றியினையே கொடுப்பவன்.

தவறுகள் நடக்குமாயின் அங்கே சனியின் பாதிப்புகள், தண்டனைகள் அதிகமாக இருக்கும்.

சனி பொல்லாதது என்பது கெட்டவர்களுக்கு.

சனி செயலில் மந்தம் என்பதால், இந்நாளை வாரத்தின் கடைசியாகவும் ஒய்விற்காகவும், தியானத்திற்கும் சிறந்த நாளாக முன்னோர் கடைப்பிடித்துள்ளனர்.

இந்த நாளில் தியானம் செய்து கிரக சக்திகளை இழுப்போர்க்கு, முன்னோர் ஆசிகள் கிடைக்கும்.

மேலும், இந்நாளில் பகல் முழுமையாக ஆண்கலையிலும் இரவு முழுமையாக பெண்கலையிலும் சுவாசம் செய்பவர்கள் ஆரோக்கியத்தினையும், பிரபஞ்ச சக்தியினையும் பெறுவார்கள், நினைத்ததை பெறவும் முடியும்.

இன்றைய சூரிய உதய சுவாச நாடி வலது.