ஆண் பெண் ஈர்ப்பு சூட்சமத்தினைக் கொண்ட சுக்கிரன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11921
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆண் பெண் ஈர்ப்பு சூட்சமத்தினைக் கொண்ட சுக்கிரன்

Post by ஆதித்தன் » Fri Sep 21, 2018 8:34 am

வெள்ளிக்கிழமை என்பது சுக்கிரன் கிரகத்தின் ஆட்சி நாள்.

சுக்கிரன் செல்வத்தினை ஈர்க்கக்கூட சக்தி கொண்டது. அதைப்போல் தன்பால் எதிர்பாலினரை ஈர்க்கக்கூட சக்தியினையும் கொண்டது சுக்கிரன் மின் காந்த சக்தி.

சுக்கிரன் மின் காந்த சக்தியானது பெண் கலையில் ஓடும்.

பெண் கலையில் நீங்கள் அதிகாலை, சூரிய உதயத்தின் பொழுது, ஒர் மணி நேரம் சுக்கிரனின் சுவாசத்தினை மூலாதரத்திற்கு மேல், இளம் சிவப்பு நிறமாக உள்ளே மனக்கண்ணாலும் எண்ணத்தாலும் உள்ளே கொண்டு சென்றால், சுக்கிரனின் சக்தி முழுமையாக வெளிமண்டலத்திலிருந்து உட்புக ஆரம்பிக்கும்.

சுவாச நாடிப் பற்றித் தெரியாமலே, ஒர் சில அடிப்படை விதிகள் என்னிடம் இயல்பாக இருந்ததால் என்னிடம் பணம் வந்து சேர்ந்துள்ளது. பெண் நண்பர்களும் பணம் சேரும் இடத்தில் இருப்பார்கள் என்பதனை இயல்பிலேயே நீங்கள் உணர முடியும்.

பலரும் இரண்டு அங்குல உலகம் பற்றி தெரியாமலே.. இயல்பாகவே பணக்காரர்களாகவும் ஆனந்த வாழ்வியலையும் கொண்டிருப்பர்.

இயற்கை என்பது நமக்கு நன்மை கொடுப்பதே.

இயற்கை விதியில் தவறு செய்தவர்களே, கவலையிலும், இல்லாமையிலும் உள்ளனர்.

இல்லாமையையும், கவலையையும் அடிப்படை விதியினை பின்பற்றும் பொழுது முழுமையாக தீர்க்கலாம்.

அடிப்படை உயிர்சக்தியான சுவாசத்தின் மூலமே, எல்லாவற்றிற்கும் மூலம்.

சுவாசத்தினை பிடித்தால் எல்லாம் கைவசப்பெடும்.

சுக்கிரன் மின் காந்த சக்தி நிறைவாக உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது உறுதி.

இல்லா இடம் நோக்கி, இருக்கும் காற்று நகரும்.

அதைப்போல், சுக்கிரன் சக்தி இல்லாதவர்கள், இருக்குமிடத்திற்கு அருகே சென்றாலும் உடனே கிடைக்கும்.

சுக்கிர மின் காந்த சக்தி அதிகம் உள்ள டாக்டர்களிடம் செல்லும் பொழுது, சுக்கிர சக்தி குறையுள்ளவர்கள் நோய் விரைவாக குணம் ஆகுகிறது.

சுவாச விதி தெரிந்த சிலர் கைராசி மருத்துவராக மாறிவிடுகின்றனர்.

சுக்கிரன் தலைமையில் ஆகாதவர்கள், சந்திரன் சூரியன் குரு ஆகிய மூவரும் ஆகாதவர்கள்.

சுக்கிர சக்தியினை ஈர்க்க வெள்ளிக்கிழமையில் நல்ல நேரங்கள், காலை 6-7. மதியம் 1-2, இரவு 8-9. அதிகாலை, 3-4.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”