Page 1 of 1

செவ்வாய் கிரக நாளில் ஆரோக்கியத்தினை கூறும் சுவாசம்

Posted: Mon Sep 17, 2018 8:35 pm
by ஆதித்தன்
நமது உடல் ஆனது கிரகங்களின் மின் காந்த சக்தியினால் ஆரோக்கியமாக உள்ளது.

ஏதேனும் கிரகத்தின் மின் காந்த சக்தி, நமது தவறான பழக்கங்களின் குறைபாடு ஏற்படின் உடலில் நோய் உருவாகிறது.

குறைபாடுள்ள கிரகத்தின் மின் காந்த சக்தியினை மீண்டும் நாம் சுவாசத்தின் மூலம் சரி செய்துவிட்டோம் என்றுச் சொன்னால், நோயும் குணமாகும்.

செவ்வாய் கிரகத்தின் மின் காந்த சக்தி எலும்பு மஞ்சை, இரத்த சிவப்பணுக்கள், பெருங்குடல் போன்றவகளுக்கு சக்தி ஊட்டுகிறது. இதன் குறைபாடு, மூட்டு வலிக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கலாம்.

செவ்வாய் மின்காந்த சக்தி நம் உடலில் போதிய அளவு உள்ளது என்பதனை உறுதி செய்ய, செவ்வாய் கிழமை, காலை சூரிய உதயத்தின் பொழுது உயிர் நாடி பிங்கலையாக ஓடுதல் வேண்டும்... அது எவ்வளவு நேரம் ஓடுகிறதோ அந்தளவுக்கு நம் உடலில் செய்வாய் கிரக மின்காந்த சக்தி உள்ளது என்று பொருள்.. 1 மணி நேரம் தொடர்ச்சியாக ( 6 மணியிலிருந்து 7 மணி வரை பிங்கலையாக ஓடினால்) செய்வாய் கிரக சக்தி மிக நன்றாக உள்ளது.

அவ்வாறு இல்லை எனில், உயிர்நாடி சுவாசம் செய்து, பின் சுவாச நாடி மாற்றப் பயிற்சி செய்து சுவாசத்தினை சரிசெய்துவிட்டால் ஆரோக்கியம் நிலைபெறும்.