தொழில் வெற்றிக்கு - நினைத்ததை அடைய - நோய் தீர கிரக சுவாச பயிற்சி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தொழில் வெற்றிக்கு - நினைத்ததை அடைய - நோய் தீர கிரக சுவாச பயிற்சி

Post by ஆதித்தன் » Sun Sep 16, 2018 5:01 pm

இந்த பிரபஞ்சம் இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டது. இல்லாமை என்ற இருட்டு எல்லாவற்றையும் படைத்தது, நம்மையும் படைத்தது.

நம்மை படைக்கும் முன்னே நமக்குத் தேவையானதை எல்லாம் படைத்துவிட்டது.

நமக்கு என்ன தேவையோ அவை எல்லாம் இவ்வுலகில் இருக்கிறது. அவை நம்மை வந்தடையும் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அவ்வாறு வந்தடையவில்லை என்றால், நீங்கள் மீண்டும் பிறப்பெடுத்தேனும் அவற்றினை அடைந்துவிடுவீர்கள் என்பதுதான் பிறப்பு இரகசியம்.

இங்கு நடப்பவை எதுவும் நம்மால் நடக்கவில்லை. ஏற்கனவே காரணமாக விதிக்கப்பட்டு காரியமாக நடந்து கொண்டிருக்கிறது.

தொழிலில் மிகப் பெரிய வெற்றியடையலாம் என்றுச் சொல்லும் நான், நானே பயன்படுத்துவனாக இருந்தால் இங்கு பதிவிட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஆனால், இது உங்களுக்கான தேவையாக இருக்க வேண்டியதாக இருக்கலாம் என்பதால், காரணம் காரியமாக இங்கே பதிவாகியுள்ளது.

எண்ணம் போல் வாழ்வு என்று சுருக்கமாகச் சொல்லப்பட்டதுதான், அதனை நிதர்சனமாக்குவது என்பதற்கான வழிமுறைச் சூட்சமம் தான் ஓரை விதி விதி மற்றும் சுவாச விதி.

நம் சுவாசம் தான், நம்மை உயிரோடு இருப்பதற்கான அடிப்படை.

விட்டக்காற்று திரும்ப வரவில்லை என்றால் போற்று.. என்றுச் சொல்வார்கள். ஆகையால் விட்டும் விடாமல் பிடித்துக் கொண்டால், விடியல் என்றும் உண்டு.

ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சக் காற்றினையே சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால், நம் அனைவருக்குமான பிணைப்பு இந்த சுவாசக் காற்றிலே அடங்கிக் கிடைக்கிறது.

நாம் நினைப்பதனை நிறைவேற்ற சுவாசக் காற்றினை நன்றாக நாடி நாடி சுவாசித்தோமானால் எல்லாம் நம் விருப்பப்படி நிகழும்.

ஆண்கள் தன் செயலையும் சேர்த்தே செய்ய முற்படுவதால் அவர்களுக்கு தொழில் வெற்றி, எடுத்தக் காரிய வெற்றி என்று முற்படுவார்கள், ஆனால் பெண்கள் செயலே இல்லாமல் நினைத்ததை அடைய விரும்புவார்கள். ஆக, ஆணுக்கும் பெண்ணுக்கும் உதவும் மகா இரகசிய உண்மைகள் சுவாச நாடி பயிற்சி தகவல்களில் அமைந்துள்ளன.

சுவாச இரகசியம் என்பது சித்தர்கள் நமக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கண்டுபிடித்துக் கொடுத்தவை. அவை, அன்றுமுதல் இன்றுவரை பரம்பரை பரம்பரையாக குருகுலம் வழியாக நம்மை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அது தேவையானவர்களே அடையும் வகையில் சூட்சமாகவும் உள்ளது.

நான் உட்கார்ந்த இடத்தினை விட்டு எங்கும் போகமாட்டேன், ஆனால் ஆசைகள் பல. அவற்றினை ஆதியாகிய இல்லா இருப்பிடம் நான் வேண்டுதலாக கேட்டுக் கொண்டுதன் பலனாக, எனக்கு ஒரை இரகசியம் மற்றும் சுவாச இரகசத்தினை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு தற்செயலாக அமைந்தது. அதைப்போல், நோயினை குணப்படுத்த வேண்டும் என்ற எனது ஆசையும், தற்செயலாக அக்குபங்சர் என்ற மருத்துவத்தினை கற்கவும் காரணமாகியது.

நாம் என்ன நினைக்கிறோமோ அது நடக்கும் என்பதுதான் உண்மை. சும்மா இருந்தாலே பணம் வரும்.. தினம் ஆயிரம் சம்பாதிக்கலாம்... கோடீஸ்வரன் ஆகலாம் என்று தொடங்கியது நிஜம் ஆனதுபோல, அட்டமா சித்துக்களை அடைய வேண்டும் என்ற ஆசைக்கான முதல்படியாக சுவாச இரகசியங்களை கற்கும் வாய்ப்பு அமைந்துள்ளது, அதைப்போல் எந்த நோயினையும் தீர்க்கும் வல்லமை வேண்டும் என்பதற்கான அடிப்படையாகவும் இந்த சுவாசப் பயிற்சியும் அக்குபஞ்சர் மருத்துவமும் அமைந்துள்ளது. இரண்டும் ஒன்றுக் ஒன்று தொடர்புடைய அடிப்படை தத்துவங்களை கொண்டதுதான். ஆகையால் என் விருப்பமே தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

மந்திரம், மாந்தீரிகம், எதிரிகளை அழித்தல், நினைத்ததை அடைதல், பண வரவினை அதிகரித்தல், வேலை வாய்ப்பு, அரசுப் பணி, பிறர் மனதினை அறிதல், பிரசன்னம் கூறுதல், நோய்களுக்கு தீர்வு, தொழிலில் வெற்றி, காய சித்தி, குழந்தை பாக்கியம், சித்த வித்தை, ஆரோக்கிய வாழ்வு, ஆனந்த வாழ்வு என நாம் வாழ்வில் கட்டாயம் கற்க வேண்டிய பாடங்கள் ஓரை விதி மற்றும் சுவாச நாடி விதி பயிற்சியில் உள்ளது.

ஓரை மற்று சுவாச நாடி விதி பயிற்சி தகவல்களை என்னிடமிருந்து பதிவு(காப்பி) பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் ஒர் சிறிய தொகையினை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஓரை சாஸ்திரம் & சுவாச நாடி சாஸ்திரம் தகவல் பெற ரூ.2000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

எவ்வளவு படித்தாலும், நாம் அடிப்படையாக படிக்க வேண்டிய பாடம் என்பது இதுதான். ஆகையால் கண்டிப்பாக வாங்கிப் படித்து பயிற்சி பெற்று வாழ்வில் நலம் பெறுங்கள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”