புத்திக்காரன் புதன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

புத்திக்காரன் புதன்

Post by ஆதித்தன் » Wed Sep 12, 2018 5:34 am

நமது உடலில் உள்ள நரம்புகளை எல்லாம் இணைத்து, தலையில் ஒர் நரம்புக் குவியலாக பிணைந்து இருக்கும் மூளைக்கு அதிபதியாக இருப்பவர் புதன் கிரகம்.

நன்மை பயக்கக்கூடிய கிரகமாக புதன் உள்ளது. ஆகையால் சுப காரியங்கள் செய்வதற்கு புதன் கிரக நேரத்தினைப் பயன்படுத்துவது பழக்கத்தில் உள்ளது.

புத்தியுள்ளவர்கள் தனக்கான நல்லதனை நிதானமாக யோசனை முடிவெடிப்பார்கள்.

புத்தி சிறப்பாகச் செயல்பட புதன் கிரக மின் காந்த சக்தி உதவுகிறது. புத்தி என்பது ஒர் தகவல் தொடர்பு என்றுக் கூட சொல்லலாம். மூளை, உடல் முழுவதும் உள்ள நரம்புகளை இணைத்து, தகவல்களை சரியாக உறுப்புகளுக்கு பரிமாற்றம் செய்து பணிகள் சரியாக நடக்க உதவுகிறது.

புதன் கிரக மின் காந்த சக்தியினை புதன் கிழமை காலை சூரிய உதயத்தின் பொழுது 12 நிமிடம் உட்கார்ந்து கண்களை மூடி, புதன் கிரக சக்தியினை உள்வாங்குவதாக மூச்சினை நன்றாக இழுத்து உள் நிறுத்தவும்... புத்தியினை சிறப்புறச் செய்ய வணங்கிக் கொள்ளவும். இப்படி மனதார நினைத்து மூச்சினை இழுத்து உள்வாங்கிவிட்டால், புதன் கிரக ஆசி கிடைக்கும்.

எல்லா கிரகங்களும் நமக்கு நன்மை செய்யத் தேவைப்படுகிறது. ஆகையால் எல்லா கிரகங்களையும் வணங்குதல் வேண்டும்.

தினமும் சூரிய உதய நேரத்தினை கிரக சக்தியினை உள்வாங்கும் நேரமாக கட்டாயப்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”