Page 1 of 1

மனோசக்தியினை வலிமைப்படுத்தும் சந்திரன்

Posted: Mon Sep 10, 2018 8:34 am
by ஆதித்தன்
சந்திரன் மின் காந்த சக்தி வலிமைப்படும் பொழுது, நமது மனோ சக்தியும் வலிமையடைகிறது.

மனோசக்தி வலிமை அடைந்தவர்கள் எதனையும் சாதிக்க வல்லவர்களாக இருப்பார்கள்.

27 நாட்களில், இராசிக்கோளத்தினை சுற்றிவரும் சந்திரனே மிக விரைவாக சுற்றிவரும் கிரகம் ஆகும். சந்திரன் ஓரையில் பயணம் செய்வது என்பது சுபம் ஆகும்.

தொலை தொடர்புக்கும் சந்திர ஓரையே ஆகும், தொலை தூர நிகழ்வுகளை கையாள, சந்திர ஓரையில் இடதுப்பக்க நாடியில் மூச்சினை உள்வாங்கி சந்திர செயல்களை முன்னெடுத்தால் வெற்றியாகும்.

சந்திரனின் மின்காந்த சக்தி அதிகமாக காற்றில் இருக்கும் நேரம், திங்கள் கிழமை காலை சூரிய உதயத்தின் பொழுது 12 நிமிடம் ஆகும். ஆகையால் அந்த நேரத்தில் நிலாவினை நினைத்துக் கொண்டு அதன் காந்த சக்தியினை மூச்சின் வழியாக உள்வாங்குதல் வேண்டும்.

சந்திரனின் வளர்பிறையின் பொழுது, 9வது நாளிலிருந்து பெளர்ணமி வரை தினம் நிலாவினைப் பார்த்து மனதினால் நிலாவின் அருள் வேண்டி தியானித்தாலும் சந்திர சக்தி அதிகரிக்கும்.

மனமது செம்மையானால் எல்லாம் ஜெயம்.

ஆகையால், சந்திர சக்தியினை கட்டாயம் ஒவ்வொரு திங்கள் கிழமையும் தியானித்து பெற்றுக் கொள்ளுங்கள்.