ஆடம்பர அதிர்ஷ்ட வாழ்விற்கு உதவும் சுக்கிரன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆடம்பர அதிர்ஷ்ட வாழ்விற்கு உதவும் சுக்கிரன்

Post by ஆதித்தன் » Thu Sep 06, 2018 7:36 pm

எதை செய்தாலும் நல்ல நேரம் பார்த்து செய்வது நம் முன்னோர்கள் வழக்கம். அதற்காக வானவியல் சாத்திரத்தினை வகுத்துக் கொடுத்துள்ளனர். அதன்படியே, வாரத்திற்கு ஏழு நாட்கள் என ஏழு கிரகங்களை மையப்படுத்தியுள்ளனர். நாம் வாழும் பூமிக்கு ஆத்மாகவும், உயிராகவும் பிராணனாகவும் இருக்கும் சூரியனையே வாரத்தின் முதல் நாளாக நமது முன்னோர் வகுத்துள்ளனர்.

நாளின் ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு கிரகங்களின் மின்காந்தச் சக்தி ஆளுமை செய்கிறது. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு காரத்தன்மையுடன் உள்ளன. அதன் காரகத்தன்மை நமக்கும் வேண்டுவனவாக அருந்தால் அந்த கிரகத்தின் மின்காந்த சக்தியுடன் நாமும் இணைந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

பண வரவுக்கு மிகவும் உதவும் கிரகம் சுக்கிரன் (Venus) ஆகும். அதன் மிக அதிகமான மின்காந்த காற்று வெள்ளிக்கிழமை சூரிய உதய நேரத்திலிருந்து 12 நிமிடம் இருக்கும். ஆகையால், வெள்ளிக்கிழமை நாட்களில் சூரிய உதய நேரத்தினை நாட்காட்டி அல்லது இணையம் மூலம் அறிந்து கொண்டு அந்த நேரத்தில் கையில் ரூபாய் நோட்டுகளை வைத்து, நிறைய பணம் வேண்டும் என்ற ஆசையினை மனதில் பூட்டிக் கொண்டு கண்களை மூடி, சுக்கிரனை வேண்டி மூற்றினை நன்றாக உள்ளே இழுக்கும் பொழுது பண ஆசைகளைக் கூறி வேண்டினால், அதிர்ஷ்ட தேவதையின் அருளால் பணம் ஏதேனும் நல்வழியில் கிடைக்கும்.

ஆகையால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை சூரிய உதயத்தின் பொழுதும் தவறாது, உங்களது வேண்டுதலை மனதார வேண்டுங்கள், கிடைக்கும். மேலும், குறிப்பாக இந்த வேண்டுதல் நேரத்தில் வயிறு காலியாக இருக்க வேண்டும்..சுத்தமாகவும் இருக்க வேண்டும்.. அப்பொழுதுதான், சுவாசம் அடிவயிற்றிலிருந்து நாபியிலிருந்து பிரபஞ்ச சக்தியினை இழுக்கும் வகையில் அமையும்.

மேலும் பல கிரக சக்திகளின் தகவல் தொடரும்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”