Page 2 of 2

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Posted: Tue Oct 03, 2017 9:54 am
by ஆதித்தன்
Image

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது


உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை பரவியிருக்கும் மெய்யறிவினை உணர்ந்து மேலெழுப்பி, அந்தரத்தில் தொங்கும் சூரியனைப்போல் தன்னுள்ளே இறைவெளியில் பிரகாசிக்க வைப்பவர் பிறவிக் கடலை கடந்து விடுகின்றார். இது தவிர்த்து பிற வழியில் முடியும் என்பது முடிவானவனுக்கு முடியுமே அன்றி மற்றவர்களுக்கு இயலாது.

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Posted: Sat Oct 07, 2017 10:50 am
by ஆதித்தன்
Image

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

அட்டமா சித்தியை உள்ளடக்கும் இல்லா இருப்பாகிய மனமே ஒருவரை சார்ந்த அனைத்திற்குமான குணம். அத்தகைய மனதினை பூசித்து செம்மைப்படுத்தாதவர் புலனின், கருவியின் செயல் குணமும் சரியாக இருப்பதில்லை.

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Posted: Sat Oct 07, 2017 6:33 pm
by ஆதித்தன்
Image

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இல்லா இருப்பாகிய ஆகாயத்தினில் தன் மனதினை நிலை நிறுத்துபவர் ஆயிரெத்தெட்டு இதழ் மலரில் அமர்ந்திருக்கும் இறைவனடி சேர்ந்து சாவா பேரின்ப வாழ்வுதனைப் பெற்று பிறப்பறுப்பர். மற்றவர் மனதில் விதைத்த எண்ணங்களுக்கு ஏற்ப பிறப்பெடுத்து இன்ப துன்பங்களை அனுபவிப்பர்.