illuminati guru - இல்லுமினாட்டி குரு

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

illuminati guru - இல்லுமினாட்டி குரு

Post by ஆதித்தன் » Tue Apr 04, 2017 2:27 pm

இதில் சிறு தகவல்களை மட்டுமே கொடுத்துள்ளேன்....

பின்னர் விரிவாக எடுத்து எழுதுகிறேன்.


இலுமினாட்டிகள் யார் என்று கடந்த பதிவில் சூதாட்டத்தினை மையமாகக் கொண்டு யுயுத்சு தான் யூதர் எனப்படும் இல்லுமினாட்டி பரம்பரை என்று பார்த்திருந்தோம்.

இன்று கண்ணன் யுகத்திற்கும் முந்தைய இராமர் யுகத்திலிருந்தே தொடக்கம் பெற்ற இலுமினாட்டிகளைப் பற்றிய ஒர் தெளிவானை கண்ணோட்டத்தினைப் பார்க்கலாம்.

தசரத மன்னன் இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஆண்டு வந்தான். அவனது மகன் இராமன் என்பது தெரியும்.

தசரதன் காலத்தில் அங்கு அரசவையில் வசிட்டர் என்ற முனிவரும் இருந்தார் என்பதனையும் நாம் புராணத்தின் வாயிலாக அறிவோம்.

கெளசிகன் என்ற மன்னன் தன் நாடு வறட்சியில் அல்லோல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அதற்கான தீர்வைத் தேடி வெளிவரும் பொழுது ஒர் காட்டில் முனிவர் வாழ்ந்து வருவதனைப் பார்க்கிறார். சுற்றிலும் நீர் கூட இல்லாத இந்த காட்டில் முனிவரின் குடில் இருப்பதனைப் பார்த்த மன்னனுக்கு ஆச்சர்யம். அதுமட்டுமில்லாமல் தன் சோர்வினையும் தாகத்தினையும் தீர்க்க இங்கு ஏதேனும் நீரும் உணவும் கிடைக்குமா என்று வேண்டி போகிறார், எல்லாம் கிடைக்கிறது.

சுற்றிலும் நீர் நிலைகள் இல்லாத இந்த காட்டில் இவருக்கு மட்டும் எப்படி நீர் கிடைக்கிறது என்று ஆச்சர்யப்பட்டு, மன்னன் கெளசிகன் முனிவரிடம் வினவுகிறான். முனிவர் வசிட்டரும் தன்னிடம் காமதேனு என்ற பசு இருக்கும் விவரத்தினைச் சொல்கிறார்.

காமதேனு பசுவின் சிறப்பை அறிந்த மன்னன், அதனை தன்னிடம் கொடுக்குமாறு வசிட்டரிடம் கேட்கிறார், ஆனால் வசிட்டர் மறுத்துவிட்டார்.

கெளசிகன் தனது படைபலத்தினைக் கொண்டு காமதேனு பசுவை அபகரித்துச் செல்ல முயல்கிறார், ஆனாலும் முடியவில்லை தோல்வியே மிச்சமாகிறது.

ஒர் சாதாரண முனிவரிடம் இவ்வளவு சக்தி எவ்வாறு கிடைத்தது என்று பிறரிடம் வினவும் பொழுது, தவ வலிமையால் தெய்வத்திடமிருந்து பெற்ற சக்திகள் என்பதனை அறிகிறார்.

தானும் அச்சக்தியினை அடைவேன் என்று வைராக்கியம் கொண்ட அரசன் தனது பதவியை துறந்து காட்டில் தவம் இயற்ற ஆரம்பிக்கிறார், வலிமை மிகு ரிஷியாகவும் ராஜ ரிஷி என்ற பெயரினையும் அடைகிறார், அவரே விசுவாமித்திரர்.

விசுவாமித்திரர் என்றால், சூரியனின் நண்பன் என்று சொல்லலாம்.. சூரிய குல பாதுகாவலன் என்று கூட சொல்லலாம்.

விசுவாமித்திரர் தான் முதல் இலுமினாட்டி. இவர்தான் இன்றைய இலுமினாட்டிகளின் தொடக்கம் என்று கூட சொல்லலாம்.

புராணக்கதைகள் கொஞ்சம் திருத்தி கூடுதலான தகவல் சேர்க்கப்பட்டிருக்கிறது வெளிப்படையாகச் சொல்லப்பட்டதுதான். அதில் எவ்வாறு திருத்தியிருக்கலாம் என்றுப் பார்க்கலாம்.

சிவன் ஆதி.. அவன் மக்களுக்கு வழங்கிய மொழி தமிழ்.

சிவ தனுசுவை உடைக்கும் வல்லமையோடு படைக்கப்பட்ட அவதாரம் இராமர்.

இந்தியா என்ற பெரிய நிலப்பரப்பில் வடக்கே ஆண்டவர் தசரதன், தெற்கே ஆண்டவர் இராவணன் குடும்பம்.

பூமியில் படைப்புத் தொழிலைத் தொடங்கிய பிரம்மன், தச்சனைக் கொண்டு மனித சமூகத்தினை உருவாக்கினார் என்பது தெரியும். அப்படி தச்சனின் மகள் திதி வழி வந்தவன் தான் இராவணன்.

காசிபர்-திதி தம்பதியின் மகள் தான் தாடகை. தாடகையின் பேரன் தான் இராவணன்.

தாடகை என்று சொல்லும் அரக்கி, அரக்கி அல்ல, அவள் சிவ அருள் பெற்ற வல்லவள், இயற்கையை பாதுகாப்பவள். தென் பகுதி தடாகத்தினை காப்பவள்.

இயற்கை செல்வம் செழிப்பாக இருந்த தென்னகத்தின் ஆட்சியினை சீரழிக்கவே இராமனைக் கொண்டு தாடகையையும் இராவணனையும் கொன்றுவிட்டு தன் கைப்பாவையாக மாறிய விபூஷணன் கையில் ஆட்சியினை கொடுக்கிறார்கள். (சமீபத்தில் நடந்த இலங்கை யுத்தத்திற்கும் இலுமினாட்டிகளுக்கும் பெரிய தொடர்பு உண்டு என்பதனை பலவிதங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.)

விசுவாமித்திரர், திரிசங்கு என்ற மன்னனுக்காக ஒர் சொர்க்கத்தினையே படைத்தவர் என்பதும், இயற்கைக்கு ஒவ்வாத பல உயிர்களை படைத்ததையும் புராணங்கள் வழியாக அறிந்தவையே.

இன்றைய இலுமினாட்டிகள் போல், இயற்கையை அழிப்பதும், இயற்கைக்கு ஒவ்வாத புதியதை படைத்து தன் ஆளுமையை காட்டுவதும் அன்றைய விசுவாமித்திரர் காலக்கட்டத்திலேயே ஆரம்பம் ஆகிவிட்டது.

விசுவாமித்திரர் தன் தவசக்தியினைக் காட்டி, தசரதன் மகன் இராமனைப் பெற்று தாடகையை வென்றார். அடுத்து இராவணனையும் வென்றார். ஏனெனில் இராமனைத் தவிர்த்து வேறு யாராலும் ஈஸ்வர பட்டம் பெற்ற இராவணனை வெல்ல முடியாது என்பதனை அறிந்து செய்த சூழ்ச்சி.

அடுத்ததாக இந்த பரந்த பாரதத்தினையும் தனது குலத்திற்குள் கொண்டுவர, தனது மகளாகிய சகுந்தலாவை துஷ்யந்தன் என்ற மன்னனுக்கு மனைவியாக்கி, பரத வம்சத்திற்குள் புகுந்தவர் பின்னர் அதனையும் உடைத்து வியாசர் மூலம் தன் திருதராட்டினன் & பாண்டு என்று புதிய குலத்தினை உருவாக்கி, மகாபாரதப் போரின் மூலம் பாரத வம்சத்து ஆட்சியினை தீர்த்து கலியுக இலுமினாட்டிகளின் ஆரம்பத்திற்கான வித்து விசுவாமித்திரர்.

பரத வம்சத்தினை காப்பேன் என்று தன் தந்தையாகிய சந்தனுவுக்கு சபதம் அளித்த பீஷ்மர் என்ற தேவவிரதன் இறந்த பொழுதே பாரத வம்சம் அழிந்து இலுமினாட்டிகளின் கைக்குள் சென்றுவிட்டது.

பீஷ்மரை அழிக்க சிகண்டி என்ற அம்பாவின் மறுபிறவி காரணமாக இருந்தது.

இயற்கைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்து கொண்டிருக்கும் இன்றைய இலுமினாட்டிகள் அழிவும் பெண்களால்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதனை இன்றைய பெமினிஷம் & கலவிக் கல்வி போன்றவற்றின் ப்ராஜக்ட் தெளிவாக்குகிறது.

பீஷ்மர் பற்றிய இலுமினாட்டி கார்டு கேம் இருப்பது போல, திரிசங்கு சொர்க்கம் பற்றிய ஒர் ப்ராஜக்ட்டும் தற்போதைய இலுமினாட்டி கையில் இருக்கிறது. இதனை ஸ்டீபன் ஹகிங் என்ற அறிவியல் மேதை தான் அண்டத்தில் வாழ வேண்டும் என்ற ஆசையில் கூறியிருப்பதனை நினைவில் கொள்ளுங்கள். இந்த பிராஜக்ட் நடந்து கொண்டிருக்கிறது.

தற்பொழுது 75 வயதினை எட்டிவிட்ட ஸ்டீபன் ஹகிங் தனது சொர்க்க ஆசையினை நிறைவேற்றிவிட்டால், அடுத்து இந்த பூமியில் வினோத நோய்கள் வந்து மக்கள் ஒவ்வொருவரும் தன் சதைகளை இழந்து எலும்போடு உயிரிட நேரிடும்.

இலுமினாட்டிகளின் திட்டத்தினை பக்கா இலுமினாட்டிகளாகிய சித்தர் வழி தமிழ் மக்கள் இதனை புரிந்துகொண்டு செயலில் இறங்க வேண்டிய காலம் இது.

பையோ கப் என்றப் பெயரில் நோய் கிரிமி பல தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதனை முறியடிக்க பேஸ்புக் தளத்தினை முடக்க வேண்டும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”