illuminati tamil - யார் இந்த இலுமினாட்டி?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11834
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

illuminati tamil - யார் இந்த இலுமினாட்டி?

Post by ஆதித்தன் » Sun Mar 19, 2017 11:21 am

குருவம்ச பாதுகாவலரான பீஷ்மர், பிறவிக்குருடரான திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை திருமணம் செய்த காலத்திலேயே கலி யுகத்தலைவர்களான இலுமினாட்டிகள் மூலம் உருவாகிவிட்டது.

காந்தாரி, காந்தார நாட்டு மன்னன் சுபாலனின் ஒரே மகள். இவளுடன் பிறந்த சகோதரர்கள் நூறுபேர். அதில் இளையவர்தான் சகுனி, மிகுந்த புத்திசாலி, சூதாட்டத்தில் விருப்பம் உடையவன்.

சுபாலன் தனது மகளுக்கு திருமண வயது வந்தவுடன், சோதிடரை அழைத்து மகள் ஜாதகத்தினைப் பார்த்தான். சோதிடர்கள் காந்தாரிக்கு முதல் கணவன் உயிர் தங்காது என்றுக் கூறிவிட்டனர். அதனால், காந்தாரிக்கு ஆட்டுக் கிடாவுடன் மணம்முடித்துவைத்து, பின்னர் கிடாவினை பலியிட்டுவிட்டனர்.

சம்பிராதயப்படி, காந்தாரியின் முதல் கணவன் இறந்துவிட்டார்.

இதை அறிந்திராத பீஷ்மர் காந்தாரியை பெண் கேட்டுச் செல்கிறார்.

காந்தாரியின் விருப்பத்தோடு, திருதராஷ்டிரனுக்கு நல்லபடியாக திருமணமும் செய்து வைக்கிறார்.

அஸ்தினாபுரத்து சோதிடர், கட்டங்களைப் பார்த்துவிட்டு, கிடா மட்டும் பலியாகவிட்டால் திருதராஷ்டிரன் தலை தப்பியிருக்காது என்று பீஷ்மரிடம் கூற... இதனால் ஆத்திரமுற்ற பீஷ்மர் ஒற்றர்களை காந்தாரா நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

ஒற்றர்கள் மூலம் காந்தாரிக்கு ஆட்டுக்கிடாவுடன் திருமணம் ஆனதினை அறிந்த பீஷ்மர் ஆவசேம் கொள்கிறார்.

திருமணமானப் பெண்ணை திருதராஷ்டிரனுக்கு மணமுடித்துவைத்து குருவம்சத்திற்கே பெரிய அவமானத்தினை உருவாக்கிவிட்டோம் என மனவேதனையடைகிறார்.

தன் குலத்திற்கு ஏற்பட்ட அவமானம் வெளியில் தெரியாமல் இருக்க, சுபாலன் குலத்தினை அழிக்கத் திட்டமிடுகிறார். ஒர் குலத்தினையே கொன்று அழிப்பது அதர்மம் என்பதால், அவர்களை அஸ்தினாபுரத்துக்கு கொண்டுவந்து ஒர் அறைக்குள் பூட்டிவைத்து ஒரு பிடி அரிசியை மட்டும் உணவுக்கு கொடுக்கிறார்.

பீஷ்மரின் திட்டத்தினை புரிந்து கொண்ட சுபாலன், தன் குலத்தை அழிக்க நினைத்த பீஷ்மரின் குருவம்ச குலத்தினை அழிக்க திட்டமிடுகிறார்.

கொடுக்கும் ஒரு பிடி அரிசியினை யாரேனும் ஒருவர் உண்டு வாழ்ந்து குருவம்சத்தினை அழிப்பது என முடிவுக்கு வருகின்றனர்.

தங்களில் புத்திசாலியும் இளையவனும் ஆகிய சகுனியிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

பட்டினியை மறந்து ஒவ்வொருவரும் தங்களது உயிரினை குருவம்சத்தினை அழிப்பதற்கான வேண்டுதலாக காளிக்கு நவகண்டம் பலி ஆகின்றனர்.

சுபாலன் பலியாகும் முன், சகுனியின் ஒர் காலின் விரலை ஒடித்து நொண்டியாக்கி, நொண்டும் பொழுது எல்லாம் எங்களது நினைவு வரவேண்டும், குருவம்சத்தினை அழிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு, தனது ஆசியாக.. தான் இறந்தப்பின் தனது எலும்பினைக் கொண்டு உனக்கான தாயக்கட்டயை உருவாக்கிக் கொள்... உன் ஆசை விளையாட்டான சூதாட்டத்தில் நீ உருட்டும் பொழுதெல்லாம் நீ விரும்பியப்படியே நானும் விழுவேன் என்றுக் கூறி ஆசி வழங்கிவிட்டு,சுபாலனும் நவகண்டம் பலி ஆகிறான்.

பீஷ்மரால் உருவான நூறுபேரின் பட்டினி நவகண்ட பலியை ஏற்க வைத்ததோடு, குருச்சேத்திரப்போர் உருவாகவும் மூலக் காரணம் ஆகியது.

குருச்சேத்திரப் போருக்கு அச்சாரமாக குருவம்சம் கெளரவர்கள் பாண்டவர்கள் என இரண்டாகப் பிரிந்தது. கெளரவர்கள் குருவம்ச தலைநகரான அஸ்தினாபுரத்தினை மையமாகக் கொண்டு ஆட்சி நடத்தினர்.

அஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பாண்டவர்களுக்கு கண்ணன் விருப்பப்படி இந்திரன் பாண்டவர்களுக்கு இந்திரப்பிரதேசம் உருவாக்கிக் கொடுக்கிறான். அங்குதான் இந்திரன் ஆணைப்படி மயன், அரண்மனையையும் மாயா சபையை உருவாக்கிக் கொடுக்கிறான். மாயா சபையே Secret Society என்று அழைக்கப்படும் இலுமினாட்டிகளின் அடித்தளம்.

கலியுகத்தின் ஆட்சியினை யார் செய்யப் போகிறார் என்பதனை கண்ணன் முன்னரே தீர்மானித்துவிட்டார் என்பதே உண்மை. அதன்படி, குருச்சேத்திரப் போருக்குப் பின், இந்திரப்பிரசேத்திலிருந்த பாண்டவர்களை அஸ்தினாபுரத்திற்கு அனுப்பிவிட்டு, மாயா சபை அமைந்துள்ள இந்திரப்பிரதேசத்தினை யுத்சு(யூதர்)-க்கு வழங்கிவிட்டார்.

மகாபாரதத்தில் வரும் மாயா சபையே Secret Society மற்றும் யூதர்களின் பிறப்பிடம். இந்த யூதன் காந்தாரியோடு வந்த பணிப்பெண்ணுக்கும் திரதராஷ்டிரனுக்கும் பிறந்தவன் ஆவான். குருச்சேத்திரப் போரின் போது, தந்திரமாக சகுனியின் திட்டப்படி கெளரவர்களிடமிருந்து பிரிந்து பாண்டவர்களோடு சேர்ந்து கொண்டமையால் உயிர்பிழைத்தவன்.

துவாபர யுகத்தின் கடைசிக் கட்டமான குருச்சேத்திரப் போருக்குப் பின் தர்மர் அசுவமேத யாகம் நடத்த, அர்ச்சுனன் உலகையே கைப்பற்றி குருவம்சத்தின் கீழ் கொண்டுவந்தான்.

அதே காலக்கட்டத்தில் காந்தாரியின் சாபப்படி சிவ அம்ச குழந்தையாக கிருஷ்ணன் பெற்ற சாம்பன் மூலம் யாதவ குலமே அழிந்தது. கண்ணனும் இறந்தார் கலியுகம் பிறந்தது.

கலியுகத்தில் மாயா சபையின் வஞ்சக ஆட்டம் தொடங்கியது.

தற்போதைய கலி யுகத்தின் கடைசிக் கட்டத்தில் இலுமினாட்டிகள் உலகையே தங்களது கட்டுப்பாட்டில் இயக்கிக் கொண்டிருப்பது அறிந்ததுதான்.

கலியுக நாயகரான மாயா சபை அரசன் யுத்சு/இலுமினாட்டிகளின் விருப்பம் நிறைவேறிவிட்டது என்றேச் சொல்லலாம்.

துவாபர யுகத்தின் கடைசிக்கட்டத்தில் நன்மக்கள் சிலரை அகத்தியர் தென்னகம்/தமிழகத்திற்கு கொண்டுவந்து அகத்தியர் சமூகத்தினை உருவாக்கினார் என்பதனை தமிழ் இலக்கியப் புலவர் கபிலர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கலியுகம் முடிந்தப் பின்னர், கிரிதா யுகமாகிய சிவன் யுகம் ஆரம்பமாகும், அதற்கான வம்சத்தினையே ஈசனார் கட்டளைப்படி அகத்தியர் குருச்சேத்திரப் போருக்குப் பின் ஏற்பட்ட அழிவிலிருந்து காத்து தமிழகத்திற்கு கொண்டுவந்தார் என்பதனையும் புரிந்து கொள்ளலாம்.

சித்தர்களின் ஆட்சி மலரப்போகிறது என்பது தமிழர்கள் பலரும் சொல்லிவரும் ஒர் கருத்துதான். ஆனால், கிருதா யுகம் எவ்வாறு இருக்கும் என்ற அடிப்படையை சரியாக புரிந்து கொள்ளாததுதான் தற்போதைய கலியுகக் காலம் கடந்தும் துன்பத்தில் வாழ்ந்து வருகிறோம்.

கலியுகத் தெய்வமான காளியினை திருப்தி படுத்தாமல் கிருதா யுகத்திற்குள் நாம் செல்ல முடியாது, தாய் பார்வதியாய் மாற்றவும் முடியாது.

தெய்வப் பார்வையில் மனிதனுக்கும் மாட்டுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.. இரண்டும் தன் ஜீவராசி என்றே தெய்வம் அரவணைக்கும்.

கலிகால மனிதன் தன் ஆசையினை மட்டும் பார்த்தானே தவிர பிற ஜீவராசிகளை கருத்தில் கொள்ளவே இல்லை.

தான் வாழ வேண்டும் தன் பிள்ளை வாழ வேண்டும் என்று பார்த்தவன் காடுகள் அழிவதனையும் அதனைச் சார்ந்த வாழ்ந்த ஜீவராசிகள் அழிவதனையும் புரிந்து கொள்ளவில்லை.

சகமனிதனை கொல்லுதலும் அடித்தலும் மிகப் பெரியப் பாவச் செயல் என்பதனை புரிந்த மனிதனுக்கு, நிலப்பரப்பில் எத்தனையோ ஜிவராசிகளைச் கொன்று வாழுகிற நம்மை மற்றொரு ஜிவராசி தன் வாழ்வாதரத்தினைப் பாதுகாக்க கொல்லும் என்பதனை ஏற்கவில்லை... நிலப்பரப்பில் மனித இனமே தீமை செய்து கொண்டிருக்கிறது என்பதனை நம்பவில்லை.

மனித இனம் பூமித்தாயின் பாரத்தினை அதிகப்படுத்திவிட்டது. தன் பாரத்தினை சமநிலைப்படுத்த மனிதர்களில் 90% நபர்களை வேறு ஜீவராசிகளாக மாற்ற இருக்கிறாள் பூமித்தாய்.

மாணிக்கவாசகர் எடுத்துக்காட்டியது போல புல்லாகி பூண்டாகி புழுவாகி வாழ்ந்ததெல்லாம் மனிதராகி வாழ்ந்துவிட்டால் பாரத்தினை பாரதம் தாங்குமா என்ன? அதனால் மீண்டும் புல்லாகவே மரமாகவே புழுவாகவோ அவரவர் நிலைக்கு ஏற்ப மனிதர்களில் 90% அடுத்த நிலைக்குச் செல்ல இருக்கின்றனர்.

இதற்கான அறிகுறியாக > MA X > அதிசக்தி கொண்ட பெண் பிறந்துவிட்டார்.

தவழ ஆரம்பித்துவிட்ட சக்தி எப்பொழுது தன் உக்கிரத்தினை கொட்டப் போகிறதோ????


கிரிதா யுகம் மலரட்டும்
User avatar
marmayogi
Posts: 1777
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: illuminati tamil - யார் இந்த இலுமினாட்டி?

Post by marmayogi » Sun Mar 19, 2017 1:35 pm

இந்த பதிவை ஆன்மீக படுகைக்கு மாற்றவும். யாரும் அறிந்திடாத தகவல். நன்றி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”