மனவளக்கலையில் ஈடுபடுவோர் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கக்கூடாது, குத்து டான்ஸ் கூடாது ஏன் ?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மனவளக்கலையில் ஈடுபடுவோர் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கக்கூடாது, குத்து டான்ஸ் கூடாது ஏன் ?

Post by marmayogi » Thu Mar 09, 2017 7:11 pm

மனவளக்கலையில் ஈடுபடுவோர் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கக்கூடாது, குத்து டான்ஸ் கூடாது ஏன் ?

வேதாத்திரி மகரிஷி விடை:

வாகனம் வேகம் மிகுதியாய் போகின்றது என்றால், மன அலைச் சுழலும் கூடவே சேர்ந்து மிகுதியாய் போகின்றது என்று தான் பொருள்.
மேலும் இத்தகைய மிகுந்த நிலையில் [stressful, excitement, thrill] செய்யப் படும் செயல்கள் அட்ரீனலினின் சுரப்பு வேகத்தை மிகுதிப்படுத்தும். அந்தச் சுரப்பியை இயற்கை சில நிகழ்வுகளுக்கு உடனடி எதிர்வினையாகப் [immiedate reaction] பயன்படுத்தத்தான் தந்திருக்கின்றது [எ.கா: பாம்பைக் கண்டால் உடனடியாக ஓடி ஒளிந்து கொள்ளுதல்) fight or flight harmone]] .


புருவ மத்தியில், உச்சந்தலையில் காந்தத்தைப் பிடிப்பதின் மூலம், பிட்டியூட்ரியின் [master gland] சுரப்பு விகிதத்தை மாற்றி அதன் மூலம் மற்ற எல்லா சுரப்பிகளின் சுரப்பு விகிதத்தையும் கட்டுக்குள் கொணர இயலும் என்பதால் தான் புலன்களை முறைப்படுத்த வல்லது நம் ஆக்கினை / துரிய தவப்பயிற்சிகள் எனும் கூற்றைத் தருகின்றோம். எனவே வாகனத்தை மிக அதிக வேகத்தில் செலுத்துதல் என்பது ஆக்கினைத் தவத்துக்கு, துரிய தவத்துக்கு நேர்எதிர்மறைச் செயல் எனும் உண்மையை நினைவில் கொள்ளவேண்டும்.

மேலும் விபத்து என்பது மற்றோருடையை சாப அலையாலும், நமது கர்மவினை அலைகளாலும், சந்தர்ப்பவசத்தாலும் நிகழ வல்லது எனும் உண்மையை வாகனத்தில் ஏறுமுன்னர் நினைவில் கொணர்ந்து துரியத்தில் நின்று அருட்காப்பிட்டு வண்டி ஓட்டுதலே நலம்.

இதே போன்று, சில குறிப்பிட்ட வகை நடனங்கள் [மேற்கத்திய,நாட்டுப்புறம் ], சில வகை இசைகள் [மேற்கத்திய,நாட்டுப்புறம் ], கேட்கும் போதோ ஆடும் போதோ நமது மன அலைச் சுழலை மிகுதிப் படுத்தி, அட்ரீனல் சுரப்பு விகிதத்தை மிகுதிப்படுத்தி, நமது ஆக்கினைத் தவத்துக்கு, துரிய தவத்துக்கு நேர்எதிர்மறைச் செயல்களை விளைவிக்க வல்லது. அத்தகைய நடனங்களை, இசைகளை மனவளக்கலைஞர்கள் பயிலாமல் இருப்பதே நல்லது. ஏற்கனவே பயின்றிருந்தால் எப்போ விடமுடியும்ன்னு மனதுக்குப் படுதோ, அப்போ விட்டுடுங்க. அதுவரை நமது தவப்பயிற்சிகளில் சீராய் இயங்கி வாருங்கள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”