Page 1 of 1

நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? -

Posted: Sun Jan 15, 2017 12:35 am
by marmayogi
நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? -

கடவுள்தான் மிகப் பெரிய கற்பனையாக இருக்கிறது. அதனால் நீங்கள் அவரை நம்ப வேண்டி இருக்கிறது

. மேலும் மனிதன் ஏன் இந்தக் கற்பனையான கடவுளை உருவாக்குகிறான்?

அதற்கு சில அகத்தேவைகளும் இருக்கின்றன.

எனக்கு அந்தத் தேவைகள் இல்லை

. அதனால் அங்கே கேள்வியுமில்லை. ஆனால் மக்கள் ஏன் கடவுளை நம்புகிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்வேன்.

மனிதனுடைய மனதை புரிந்துகொள்வதற்கு முக்கியமானவைகளில் ஒன்று என்னவென்றால் இந்த மனம் வாழ்க்கையினுடைய சில அர்த்தங்களுக்காக நாடிக்கொண்டும், தேடிக்கொண்டும் இருக்கும்.

அதற்கு அர்த்தம் இல்லையெனினில்,

நீ இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

பிறகு ஏன் சுவாசித்துக்கொண்டிருக்கிறாய்? பிறகு ஏன் நாளை காலை எழுந்திருக்க வேண்டும். '

மேலும் வழக்கமானவைகளை செய்ய வேண்டும்.

தேநீர், காலை உணவு, அதே மனைவி, அதே குழந்தைகள், மனைவிக்கு அதே போலியான முத்தம், அதே அலுவலகம், மீண்டும் அதே வேலை, மாலையில் களைப்புடன் வருதல், முற்றிலும் அலுப்புற்று வீடு திரும்புகிறாய்

. இவைகளையெல்லாம் ஏன் செய்துகொண்டிருக்கிறாய் என்று பிறகு நீ திடீரென்று உணருகிறாய்.

இவைகளில் ஏதேனும் அர்த்மிருக்கிறதா அல்லது நீங்கள் வெறுமனே தின்று கழிக்கிறீர்களா
என்றொரு கேள்வி மனதில் இருக்கின்றது.

ஆகவே மனிதன் அர்த்தங்களைத் தேடிக்கொண்டேயிருக்கிறான்.
அவன் தன்னுடைய அர்த்தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடவுளை கற்பனையுள்ள ஒன்றாக உருவாக்கினான் ..

கடவுள் இல்லாத இவ்வுலகம் அர்த்தமற்றதாகிறது. '

எவர் உன்னுடைய வளர்ச்சிக்காகவும், உன்னுடைய வழமைக்காகவும் அல்லது ஏதேனும் ஒன்றிற்காகவும் படைத்தாரோ, அந்த விவேகமுள்ள கடவுளின் சிருஷ்டியாக இனி அது இருக்காது.
கடவுள் இல்லையேல, கடவுளை அகற்றினால், இந்த உலகம் தற்செயலானது. அர்த்தமற்றது. மேலும் இந்த மனம் அர்த்தமற்ற தன்மைகளுடன் வாழ அடிப்படைத் தகுதியற்றதாக இருக்கிறது.

இது எல்லாவிதமான கற்பனைகளையும் தோற்றுவிக்கிறது.
இறைவன், நிர்வாணம், சொர்க்கம், பரலோகம், மறுபிறவி, மரணத்திற்கு அப்பால் - என்ற எல்லா முறைகளையும் அமைக்கின்றது. ஆனால் இது ஒரு கற்பனை,
மனிதனுடைய ஒரு விதத் தேவையை பூர்த்தி செய்வதற்காக.
அது ஒரு கற்பனையான விசித்திரமே. எனது வேலை முற்றிலும் மாறானது. நீங்கள் அர்த்தமற்ற வாழ்க்கையுடன் வெகு அழகாக வாழமுடியும் என்ற அளவிற்கு உங்கள் மனதைப் பக்குவப்படுத்துவதுதான் எனது வேலை.

ஒரு ரோஜா அல்லது ஆகாயத்தில் மிதக்குமொரு மேகத்தில் என்ன அர்த்தம் இருக்கிறது?

அதில் அர்த்தம் இல்லை. ஆனால் அதில் அளவிடமுடியாத அழகு உள்ளது. நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. இதல் அர்த்தமொன்றுமில்லை.
ஆனால் அதில் அளவிடமுடியாத ஆனந்தம் இருக்கிறது.


:- ஓஷோ

Re: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? -

Posted: Mon Jan 16, 2017 9:50 am
by vk90923
manithan uyire kadaull. ithu anubava unmai. ithil maatram kidaiyaathu.
pasu bathi paasam yenpathai manithan unara veandum. athai unarthaal thaan anubavam paadam namakku kidaikkum. ithai sittharkal, gnaanikal, yohaaaciriyerkal unathu namakku kuorukiraarkal.

Re: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? -

Posted: Mon Jan 16, 2017 3:22 pm
by marmayogi
vk90923 wrote:manithan uyire kadaull. ithu anubava unmai. ithil maatram kidaiyaathu.
pasu bathi paasam yenpathai manithan unara veandum. athai unarthaal thaan anubavam paadam namakku kidaikkum. ithai sittharkal, gnaanikal, yohaaaciriyerkal unathu namakku kuorukiraarkal.
:clab: :clab: :clab:

:ros: :ros: :ros: