பணம் பற்றி கவலைப் படுவது ஓரு முட்டாள்தனமான விஷயம்!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1777
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பணம் பற்றி கவலைப் படுவது ஓரு முட்டாள்தனமான விஷயம்!

Post by marmayogi » Sun Jan 15, 2017 12:23 am

பணம்-------1

நீ பணத்தை ஓரு பிரச்சனையாக்கினால் ஓழிய அது ஓரு பிரச்சனையே அல்ல,

காலங்காலமாக, தன்னை மதவாதிகள் என கூறிகொள்ளும் மக்கள்,

பணத்தைப் பற்றி மிகவும் கவலை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்,

பணம் பற்றி கவலைப் படுவது ஓரு முட்டாள்தனமான விஷயம்!

அதனோடு விளையாடுங்கள் !அது உன்னிடம் இருந்தால் அதை ஆனந்தமாக அனுபவி!

அது உன்னிடம் இல்லாவிட்டால் அது இல்லாத சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி!

அது இல்லாதபோது நீ வேறு என்ன செய்யமுடியும் ?

ஆனந்தமாக அனுபவி!

அது உன்னிடம் இருக்கும்பொழுதும் வேறு என்ன செய்யமுடியும்?

ஆனந்தமாக அனுபவி!

அதைப் பற்றி தேவையில்லாத
பிரச்சனைகளை உருவாக்காதே.

பணம் ஓரு பொம்மை.

சில சமயங்களில் உன்னிடம் அது இருக்கும், அப்போது அதனோடு விளையாடு.

ஆனால் என்னுடைய உணர்வு என்னவென்றால் : பணத்தோடு விளையாடமுடியாத மக்களே, பணத்தை துறக்கிறார்கள்-

அவர்கள்
அதைப்பற்றி மிகவும் இறுக்கமாக இருக்கிறார்கள்.

அவர்கள் பணத்தைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள்,

ஏனெனில் ஆழமாக அடியில் அதனை பிடித்துகொண்டிருக்கிறார்கள்.

உனக்கு தெரியுமா? மகாத்மா காந்தியின் தலைமை சீடர் வினோபா பாவேவால் பணத்தை பார்க்க இயலாது.

நீ வெறும் ஓரு ரூபாய் தாள் - மதிப்பற்றது,

அதை அவர் பார்வைக்கு கொண்டுவந்தால் –அவர் தனது கண்களை மூடிக்கொள்வார்.

இது எந்த வகையான மனோபாவம்?

இது துறவியின் செய்கையாக கருதப்படுகிறது ;

நாடு முழுவதும் இவர் பணத்தை துறந்தவர் என பாராட்டபடுகிறார்.

நீ உண்மையிலேயே பணத்தை துறந்திருந்தால், எதற்காக நீ கண்களை மூடவேண்டும்?நீ கண்களை மூடும் அளவிற்கு அந்த ஓரு ரூபாய் தாள் ஈர்ப்பு உடையதாகவா உள்ளது?

நீ கண்களை மூடாவிட்டால் அந்த ஆளின்
மீது குதித்துவிடுவாய் என பயமாக உள்ளதா?

கண்டிப்பாக ஏதோ ஓன்று இருக்கவேண்டும்.

இது சிறிது அதிகப்படியாக தோன்றுகிறது. அதிக பயம் உள்ளது

இல்லாவிட்டால் எதற்காக உன் கண்களை மூடவேண்டும்?

பல விஷயங்கள் கடந்து செல்கின்றன,
ஆனால் நீ உனது கண்களை மூடுவதில்லை –இது வெறும் பணம்.

பணம் என்பது ஓன்றுமில்லை –பொருட்களை பரிமாற உதவும் வெறும் ஓரு கருவி.

ஆனால் மக்கள் உண்மையிலேயே அடி ஆழத்தில் கஞ்சர்கள். பிடித்து தொங்குபவர்கள்,

அவர்களின் பிடித்துவைக்கும் தன்மையாலும், அவர்களின் கஞ்சதனத்தாலும், அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், துன்பப்படுகிறார்கள்.

முடிவில் ஓருநாள் அவர்கள் பணம்தான் அவர்களுக்கு
துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக் கொள்கிறார்கள்.

பணம் உனக்கு துன்பத்தை விளைவிப்பதில்லை,

பணம் எப்படி உனக்கு துன்பம் விளைவிக்கமுடியும்?

கஞ்சத்தனம்தான் உனது துன்பத்தை விளைவிக்கிறது.

பணம்தான் துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக்கொண்டு, அவர்கள் பணத்தை துறக்கிறார்கள்.

அவர்கள் பண உலகிலிருந்து தப்பி செல்கிறார்கள்,

பிறகு அவர்கள் தொடர்ந்து பயந்துகொண்டிருக்கிறார்கள்,

அவர்களின் கனவுகளில் அவர்கள் வங்கிகளுக்குள் நுழைந்து பெட்டகத்தை திறப்பது போன்ற விஷயங்கள் நடக்கும்

பணத்தின் மீது இச்சை கொள்வதால் –அது கண்டிப்பாக நடக்கும்.

:- ஓஷோ
User avatar
marmayogi
Posts: 1777
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: பணம் பற்றி கவலைப் படுவது ஓரு முட்டாள்தனமான விஷயம்!

Post by marmayogi » Thu Apr 13, 2017 7:37 pm

ஓரு துறவி ..அரசனை பார்த்து..உன் சிம்மாசனம் என் கால் தூசுக்கு சமானம் என்று கூறினார்..

ஓஷோ சொல்கிறார்..
இதுவரை ஏன் எந்த அரசனும் துறவியைப் பார்த்து பொறாமைப்படவில்லை ...

இவர்கள் போலித்துறவிகள் ....
அரசனாக இயலாததால் ... இவர்களது புலம்பலின் வெளிப்பாடே ...

இது போலவே ..பணம் சம்பாதிக்கும் திறமை இல்லாமல்..
பணத்திற்கு ஆசைப்படுபவர்கள்.
பணக்காரர்கள்களை குறை சொல்லியே ..காலம் கழிக்கிறார்கள் ..

நான் பணக்காரர்கள்களுக்கு ஆதரவானவன் .
பணக்காரனே ..பணத்தால் திருப்தி அடைய முடியாது என உணர்கிறான் ..

ஏழைகள் பணம் கிடைத்தால் ..நிம்மதியாக வாழலாம் .எனும் கற்பனையில் உள்ளனர்..
பணக்காரனே ஆன்மீக வாதி ஆகமுடியும்
ஆகவே அனைவரும் முதலில் பணம் சம்பாதியுங்கள் ..பின்னர் துறக்கலாம் ...

இல்லாவிடில் உங்கள் துறவு போலியானது...

ஓஷோ

( இந்த பதிவிற்கும் மேல் உள்ள பதிவிற்கும் வித்தியாசம் உள்ளதே!!. எதை பின்பற்றுவது :mudi: :mudi: :mudi:
:usi: :wae: )
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”