Page 1 of 1

மறுபிறவி என்பது மனதின் பிறப்பு ... மனதைக் கடந்தவர்க்கு மறுபிறவி என்பது கிடையாது.

Posted: Tue Dec 06, 2016 7:15 pm
by marmayogi
மறுபிறவி என்பது
மனதின்
பிறப்பு ...

எனவே நீங்கள் மனம் என்பது
இல்லாமல் இருக்கின்ற நிலையை.அதாவது மனமற்ற நிலையை
அடைந்து விட்டால் ,
அதன்பிறகு உங்களுக்கு மறுபிறவி
என்பதே கிடையாது.

அப்போது நீங்கள் வெறுமனே
இறப்பை மட்டுமே அடைவீர்கள்.அப்போது உங்கள் உடல் ,
உங்களது மனம்.எல்லாம் கரைந்து
போய்விடும் ..

சாட்சி பாவனையில் உள்ள
உங்களது ஆன்மா
மட்டுமே மிஞ்சி இருக்கும்.அது காலத்திற்கும் வெளிக்கும்
அப்பாற்பட்டது.அதன் பின்னர் நீங்கள் இந்தப்
பிரபஞ்சத்தோடு ஒன்றாகி
விடுவீர்கள்.

ஆகவே உங்களுக்கும் இந்த
பிரபஞ்சத்திற்கும்.இடையே உள்ள பிரிவினை உங்களது
மனதினால்தான் வருகிறது.

மனதைக் கடந்தவர்க்கு மறுபிறவி
என்பது கிடையாது.

:-ஓஷோ

Re: மறுபிறவி என்பது மனதின் பிறப்பு ... மனதைக் கடந்தவர்க்கு மறுபிறவி என்பது கிடையாது.

Posted: Thu Feb 02, 2017 11:36 pm
by vk90923
மிகவும் உண்மை. மனம் என்றால் என்ன? மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு. அது எவ்வாறு உணர முடியும்? நாம் விடும் மூச்சுக்காற்றின் மூலம்தான் உணர முடியும். மனமே மாயை! இந்த மனத்தின் மூலந்தான் நாம் கர்மாக்களை நம் வாழ்க்கையில் பதிவிடுகிறோம் கர்மா என்பது என்ன? நாம் செய்கின்ற செயல் (அ)வினை
அது புண்ணியமாகவும்(அ)பாவமாகவும் இருக்கலாம் நன்மையாகவும்(அ)தீமையாகவும் இருக்கலாம் மனதை வெல்ல முடியுமா? முடியும் மூச்சு பயிற்சி மூலம் வெல்லளாம்.