Page 1 of 1

எதிர்காலம், நிகழ்காலம் உணர்வது, ஆகாய சஞ்சாரம், பஞ்ச பூத வசியம், காற்றில் கரைதல்

Posted: Tue Nov 22, 2016 10:05 am
by marmayogi
MA Senthyil - சில மாதங்களுக்கு முன்பு 'லூசி' (Lucy) என்ற ஆங்கில திரைப்படம் (தமிழில்) பார்த்தேன். மனித மூளையின் செயல்பாடு குறித்து ஆராயும் பேராசிரியர் , மனித மூளை 10% வேலை செய்யும்போது எவ்வாறு இருக்கும் 50% வேலை செய்ய என்னவாகும் என விளக்குவார். 100% என்ற வினாவுக்கு விடையாக கதையின் நாயகிக்கு ஏற்படும் விளைவுகளை காட்டி இருப்பர். ஆனால் அது ஒரு போதை வஸ்த்து மூலமாக நடைபெறும். நமது சித்தர்கள் இயற்கையாக ( போதை வஸ்த்து, மருந்துகள் ஏதுமில்லாமல்) யோகம் மூலமாக அந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். எதிர்காலம், நிகழ்காலம் உணர்வது, ஆகாய சஞ்சாரம், பஞ்ச பூத வசியம், காற்றில் கரைதல் என. இது பற்றி முழு விளக்க பதிவை இட வேண்டுகிறேன்.

இராம் மனோகர் - நம் முன்னோர்கள் மருந்து உட் கொள்ளவில்லை என்று யார் சொன்னது ? சித்தர்கள் மருந்துகள் உட்கொண்டார்கள். யந்திரம், தந்திரம், மந்திரம், ஔஷதம்(மூலிகைகள்) இவைகள் மூலமாகத்தான் சித்திகளை அடைந்தார்கள். யந்திரம் என்பது நம் நாடிகளை, ஆதாரமையங்களை சுட்டிக் காட்டும். அண்ட பிண்ட கோட்பாட்டின் படி யந்திரங்களை அமைத்து, பிரபஞ்ச ஆற்றலை கிரகித்து நம் நாடிகளை தூண்டுதல் செய்து அவற்றை செயல் திறம் மிக்க வகையில் இயங்கச் செய்தார்கள். மந்திரம் என்பது சூக்கும அதிர்வுகளை ஏற்படுத்தி நாடிகளைத் தூண்டுவதோடு, மனதை வலுப்படுத்தும். யந்திரத்தையும், மந்திரத்தையும் இணைத்து, தந்திர யோக வித்தைகளினால் மனதையும், உயிர் சக்தியையும், பேராற்றலோடு கலக்கச் செய்தார்கள்.

இதற்கு உடல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மருந்துகளை(மூலிகை, தனிமங்கள்) எடுத்துக் கொண்டார்கள். இதில் சில தனிமங்கள் விஷத் தன்மை உடையவை. அவைகள் அந்த லூசி படத்தில் சொல்லப்படும் போதை மருந்தை விட வீரியமானவை. ஆனால், அவற்றைப் பக்குவப்படுத்தி, அவற்றின் விஷத் தன்மையை போக்கி, உடல் தடை எனும் வியாதிகள் இல்லாத கற்ப தேகத்தைப் பெற்று சித்தியடைந்தார்கள். மூளை என்பது மனதின் ஸ்தூலக் கருவியாகும். மனம் தூய்மையடைய அடைய மூளைத் திறன் அதிகரித்துக் கொண்டே வரும். முற்றிலும் தூய்மையடைந்த மனதை உடையவர்கள் மூளை 90 சதவிகிதம் வேலை செய்யும். இதுவே ஞான நிலை எனப்படுகிறது. இதில் மீதமுள்ள பத்து சதவிகிதம் இந்த உலகாய உடல் வாழ்க்கைக் குரிய இயக்கங்களுக்காக மிஞ்சி நிற்கின்றது.

நிர்விகல்ப சமாதி மேம்படும் பொழுது அந்த பத்து சதவிகிதமும் முழுமையடையும். அத்தகைய நிலையில் யோகியானவர் உடலை விட வேண்டுமெனில் விட்டு விடலாம் அல்லது உடலை பஞ்ச பூதங்களில் கலக்கச் செய்து மறைத்து விடலாம், அது அவரவர்கள் நிலைப்பாட்டை பொருத்த விஷயம். நம்மால் இயலாது என்பதாலும் அல்லது நம் சிற்றறிக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருப்பதாலும் அதை பொய்யென்றும், பித்தலாட்டமெட்றும், மாயாஜால வித்தையென்றும் சொல்லி அவநம்பிக்கை கொள்கிறோம். இதற்கான ஆதாரங்கள் சித்தர்கள் மற்றும் வள்ளலார், தாயுமானவர் போன்ற ஞானிகளின் பாடல்களில் இருக்கின்றன

:-இராம் மனோகர்

Re: எதிர்காலம், நிகழ்காலம் உணர்வது, ஆகாய சஞ்சாரம், பஞ்ச பூத வசியம், காற்றில் கரைதல்

Posted: Thu Feb 02, 2017 11:42 pm
by vk90923
உண்மை