சித்தியெனில் கண்கட்டு வித்தையல்ல

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

சித்தியெனில் கண்கட்டு வித்தையல்ல

Post by marmayogi » Thu Nov 10, 2016 3:45 pm

"சித்தியெனில் கண்கட்டு
வித்தையல்ல
சில்லறையாம் கருமத்துச்
செய்கையல்ல
மித்தையெனும்
சூனியமாம் மாயமல்ல
மின்னணுவாம்
விஞ்ஞான வியப்புமல்ல
சித்தியெனில் ஈசனுடன்
ஒன்றாம்சித்தி
சிவனாவானவனேதான் சித்தன் சித்தன்!"

.
" தானான காயத்தை நிறுத்த
வேண்டும்
சதாகாலம்
சுக்கிலத்தைக் கட்டவேண்டும்
வேனான மும்மலத்தை யறுக்க
வேண்டும்
வெளியான சிதாபாசம்
நீக்கவேண்டும்
பானாக முச்சுடரை யறுக்க
வேண்டும்
பாழான துலமதை
வெறுக்கவேண்டும்
மானான பராபரியை
நிர்த்தனம் செய்து
மானிலத்தில்
வாழ்பவனே சித்தனாமே"

.
"பதமுத்தி மூன்றும்
பழுதென்று கைவிட்டு
பிதமுற்ற பாசஇருளைத்
துறந்து
மதமற் றெனதியான்
மாற்றிவிட்டாங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர்
தாமே"

.
"நாணயமாய் நடப்பவரே
ஞானி
யோகியமாய் நடப்பவரே
யோகி
சகலமும் தள்ளியவரே
சந்நியாசி
ஆண்டவனை அறிந்தவரே
ஆண்டி
ஒழுக்கம் உடையவரே
துறவி
சிந்தை தெளிந்திருப்பவன்
அவனே சித்தன்
செகமெல்லாஞ் சிவமென்று
அறிந்தோன் சித்தன்"
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”