Page 1 of 1

ஆன்மசாந்தி தவம் எவ்வாறு இயற்றுவது?

Posted: Mon Nov 07, 2016 8:48 am
by marmayogi
கேள்வி:ஆன்மசாந்தி தவம் எவ்வாறு இயற்றுவது?

பதில்: உடலைவிட்டுப் பிரிந்த உயிர், அந்த உடலை அடக்கம் செய்வதற்கு முன் அந்த உடலைச்சுற்றியேதான் இருக்கும். அதன் ஆன்மா சாந்தியடைய வேண்டி, அந்த உடல் இருக்கும் பொழுதோ அல்லது உடலை அடக்கம் செய்த பின்போ, துரியாதீதம் பயின்றவர்கள் சுமார் ஆறு பேருக்குக் குறையாமல், அமர்ந்து தவமியற்ற வேண்டும்.

முதலில், ஆக்கினை, துரிய தவமியற்றி, துவாதசாங்கத்தில் நின்று, பிரிந்த ஆன்மாவைச் சங்கல்பத்தால் இணைத்துக் கொண்டு, சக்திகளத்தில் விரிந்த நிலையில் அந்த ஆன்மாவைப் பரவவிட்டு, பிரித்துவிட்டு, சிவகளம் சென்று, அந்தத் தூயவெளியில் மனதைத் தூய்மை செய்துவிட்டு தவத்தை நிறைவு செய்ய வேண்டும். இதற்குத்தான் ஆன்ம சாந்தி தவம் என்று பெயர்.

வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி