Page 1 of 1

குழந்தைகளுக்குப் பருவ வயது வந்தவுடன் தான் வித்துக் குழம்பு உண்டாகும். அதற்கு முன்பு உயிர்ச்சக்தி எங்குள்ளது?

Posted: Tue Oct 11, 2016 6:29 pm
by marmayogi
கேள்வி: அருள்தந்தை அவர்களே! உயிர்ச்சக்தி ஜீவ வித்துக் குழம்பில் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்குப் பருவ வயது வந்தவுடன் தான் வித்துக் குழம்பு உண்டாகும். அதற்கு முன்பு உயிர்ச்சக்தி எங்குள்ளது? அதே போல் முதுமையடைந்ததும் விந்து சக்தி குறைந்து விடுகிறது; அப்போது உயிர்சக்தியும் குறைவாக இருக்குமா?

பதில்: தாய் தந்தை விந்துநாதத்தைக் கொண்டேதான் குழந்தை தன் உடலைக்கட்டிக் கொண்டு வருகிறது. உடல் வளர்ச்சியோடு விந்துவின் அளவும் வளர்ந்து கொண்டே வருகிறது. 3 வயதிற்குள் மூளையை முழுமையாகக் கட்டிக் கொள்ளும். சுமார் 12 வயதுவரை உடலைக் கட்டிக் கொள்வதற்கே விந்து செலவாகும். மீதம் இருக்காது.

உடல் வளர்ச்சிக்கு செலவானது போக எந்த வயதில் விந்து உபரியாக வருகிறதோ அதுதான் பருவம் அடைதல் (Age Maturity). மேல்மிச்சம் ஏற்படுகிறபோது கழிவு ஏற்படுகிறது. அப்போதுதான் கீழே அணு அணுவாக முதுகுத்தண்டு வழியாக வந்து சுரப்பியில் (Sexual Gland) தங்குகிறது. அதுவரை அது மூளையிலேயே தங்கியிருக்கும்.
விந்து உற்பத்தி மூளையில்; மிகுதியானது தங்குமிடம் கருமையம் எனும் உடல் மையத்தில்.
விந்து நாதம் இணைந்த நாள் முதற்கொண்டு உயிர் பிரியும் வரைக்கும் – குழந்தைகளாக இருந்தாலும் முதியவர்களாக இருந்தாலும் விந்தானது சீவகாந்த மின்குறுக்கால் (Short Circuit) கொட்டிப்போனால்; அதுதான் மரணம்.

பருவ வயதிற்கு முன் குழந்தைகள் இறந்தால் மூக்கில், கண்களில், நீர்வரும். பெரியவர்களுக்குப் பால் சுரப்பியில் (Sexual Gland) மின்குறுக்கு ஏற்படும்; விந்துநாதம் முறிந்து பிறப்பு உறுப்பின் வழியே கொட்டிவிடும். எல்லோருக்கும் வாழ்வின் கடைசிவரை விந்து நாதம் இருக்கும். ஏழாவது தாதுவான விந்தின் உற்பத்தி இளவயதில் அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்குக் குறைவாக இருக்கும்; ஆனால் உயிரைத்தாங்கும் அளவு இருக்கும். வயது முதிர்ச்சியில் விந்துவின் அளவும், அதற்குத்தகுந்தவாறு உயிர்ச்சக்தியின் அளவும் குறையும். அதனால்தான் முதுமையில் பலவீனம் ஏற்படுகிறது, உறுப்புகள் செயலிழக்கின்றன.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி